20 Apr 2019 1:22 pmFeatured
அணுசக்தி நகர் : அணுசக்திநகர் கலை மன்றம் பாரதியார் மற்றும் மகளிர் தின விழா 13-04-2019 மாலை 6மணிக்கு தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது.
கலை மன்றத் தலைவர் திரு.கனகசபை வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து கலை மன்றச் செயலாளர் திரு.தேவராஜன் புலமாடன் கலை மன்றத்தின் கடந்த 40 ஆண்டுக்கால செயல் பாடுகள் பற்றி விரிவாக உரையாற்றினார். பி.ஏ.ஆர்.சி யில் பணிபுரியும் முதன்மை விருந்தினர் திரு.என். விஜயராகவன் சி.ஏ.ஒ ., கலை மன்ற வளர்ச்சி மற்றும் பாரதியார் வாழ்க்கை வரலாறு பற்றி மிகசிறப்பாக எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினர்கள் பி.ஏ.ஆர்.சியில் பணிபுரியும் முனைவர் எஸ். ஜெயகுமார் விஞ்ஞானி மற்றும் டி.ஏ.இ.யில் பணிபுரியும் திரு.ஜி.வெங்கடேசன் (உதவிச் செயலாளர்) மற்றும் பஞ்சாப் நேசனல் வங்கியில் பணிபுரியும் தலைமை அதிகாரி (அணுசக்தி நகர்) திரு.பி.மகேந்திரன் ஆகியோர் பாரதியார் பற்றிப் பல கோணங்களில் விரிவாக உரையாற்றினார்கள்.
தொடர்ந்து இரண்டாவது நிகழ்வாக மகளிர் தின விழாவைத் திருமதி கைலாச கணபதி அவர்களின் வரவேற்புடன் தொடங்கப்பட்டது.
பி.ஏ.ஆர்.சி யில் பணிபுரியும் முனைவர் உமாசங்கரி கண்ணன் விஞ்ஞானி அவர்கள், மகளிர்களைப் பற்றியும், பெண்கள் எப்படிச் சாதிக்க வேண்டும் என உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர்கள் எழுத்தாளர் திருமதி புதிய மாதவி மற்றும் திருமதி வை. கீதா பாரதியார் - பெண் விடுதலைப் பற்றியும்,பெண்கள் குடும்பத்தில் பொறுப்பு பற்றியும் பேசினார்கள். சிறப்புரையாக திருமதி சுலக்சனா செல்வம் பாரதி பார்வையில் பெண் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கருத்தரங்க நெறியாளர் புதிய மாதவி தலைமையில் பெண் - வெளி தலைப்பில் கருத்தரங்கம் தொடங்கப்பட்டது. துணை தலைப்புகளில் பெண்களும் பணியிடமும் - திருமதி நிஷா பேசினார் மற்றும் பெண்களும் சின்ன திரையும் - திருமதி லட்சுமி மகேஷ் பேசினார்
மற்றும் பெண்களும் சமூக ஊடகங்களும் - திருமதி கைலாச கணபதி பேசினார் மற்றும் பெண்களும் மொழியும் - திருமதி கலைச்செல்வி வேலுசாமி பேசினார். பெண்களும் சீர்வரிசையும் - திருமதி மைதிலி விஜயராகவன் பேசினார் . எல்லோரும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பில் மிகச் சிறப்பாகப் பேசியதை நெறியாளர் பாராட்டி எடுத்துரைத்தார். அதன் பிறகு குழந்தைகளுக்கான பாரதியார் பாட்டுப்போட்டி நடைபெற்றது.
இவ்விழாவைக் கலை மன்றச் செயலாளர் திரு. தேவராஜன் புலமாடன் தலைமையில் கலை மன்ற உறுப்பினர்கள் துணையுடன் திரு. ஆனந்தன், திரு.வெங்கட சுப்பிரமணியம், திரு.பேராச்சி செல்வம், திரு. தர்மலிங்கம், திரு. மூர்த்தி, திரு. தங்கராஜன், திரு. சேதுராமன், திரு. சண்முகம், திரு. குமரேசன், திரு. மஹாராஜன், திரு. சந்திரமுதலீஸ்வரன், திருமதி கைலாச கணபதி அவர்கள் முயற்சியுடன் விழா எற்பாடு செய்யப்பட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அணுசக்திநகர் கலை மன்றம் நடத்திய பாரதியார் விழாவை திருமதி மைதிலி விஜயராகவன் அவர்களும் மற்றும் மகளிர் தின விழாவை திருமதி கலைச்செல்வி வேலுசாமி அவர்களும் தொகுத்து வழங்கினார்கள், கலை மன்ற பொருளாளர் திரு.மூர்த்தி நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.
விழா சிறப்பாக நடைபெற உடனிருந்து ஒத்துழைத்த மற்றும் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் அணுசக்தி நகர் கலை மன்றம் சார்பாக செயலாளர் திரு.தேவராஜன் புலமாடன் நன்றினை தெரிவித்துள்ளார் .