13 Apr 2020 1:44 pmFeatured
மகாராஷ்டிராவில் 10 ஆம் வகுப்பு புவியியல் பாடத்திற்கான தேர்வு ரத்து; 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான தேர்வும் ரத்து செய்யப்பட்டது.
மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவி வருவதை கருத்தில் கொண்டு 9 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் அறிவித்தார். மேலும் எஸ்.எஸ்சி எனப்படும் 10 ஆம் வகுப்பு புவியியல் பாடத்திற்கான கடைசி தேர்வு நடைபெறுவதாக இருந்தது. கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதையடுத்து, அந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
இவ்வாண்டு மகாராஷ்டிரா முழுவதும் 18 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.சி தேர்வு எழுத விண்ணப்பித்
திருந்தனர். மொழிப் பாடங்களான மராத்தி, இந்தி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு ஆகிய பாடங்களுக்கான தேர்வு ஏற்கனவே நடந்து முடிந்து விட்டது.
கடைசி தேர்வு மார்ச் 23 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டது. வீட்டில் இருப்பவர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்களை படிக்க வேண்டும் என கல்வி அமைச்சர் வர்ஷா காய்க்வாட் கேட்டுக் கொண்டுள்ளார்.