28 Sep 2019 1:25 amFeatured
நடக்கவிருக்கிற மஹாராஷ்ட்ரா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட மும்பை தமிழரான வி.பி.இராமையா விருப்ப மனு அளித்திருக்கிறார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வரும் வி.பி.இராமையா அகில இந்திய ராஜிவ் காந்தி பிரிகேட் பொதுச் செயலாளர்., காங்கிரஸ் தமிழ் பிரிவுச் செயலாளர், குடிசைப் பிரிவு செயளாளர் போன்ற பொருப்புகளை இவர் வகித்திருக்கிறார். தனது ஏழ்மை நிலையினை பொருட்படுத்தாமல் தொடர்ந்து மக்களுக்காக குரல்கொடுத்து வருவதோடு சமூக சேவையும் ஆற்றிவருகிறார். இவரது சேவையினை பாராட்டி சர்வதெச அமைப்பு ஓன்று இவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்து சிறப்பித்தது.
தீவிர காங்கிரஸ்காரரான இவர் பல ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிட வாய்ப்புகேட்டு வருகிறார். ஏழைக்கு எட்டாகனி அரசியல் என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் இவரது கோரிக்கைகள் உதாசீன படுத்தபட்டுள்ளன. சட்டமன்ற மேலவை, மாநிலங்களவை பதவிக்கும் முயன்றும் கட்சியின் தலைமையின் பார்வை இவர்பக்கம் திரும்பவே இல்லை.
இருந்தும் முயற்சியை கைவிடாமல் இந்த முறையும் மலாட் அல்லது சார்க்கோப் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு மகாராஷ்ட்ரா மாநிலத் தலைவர் பாலசாகேப்தோர்த்தை சந்தித்து வைப்புதொகை செலுத்தி விண்ணப்பித்துள்ளார்..
தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்க காங்கிரஸில் உள்ள தமிழ் பிரமுகர்களும், மும்பையில் இயங்கிவரும் தமிழ் அமைப்புகளும் காங்கிரஸ் தலைமைக்கு பரிந்துரைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் தன்னால் வெற்றிபெற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கண்திறக்குமா காங்கிரஸ்