04 Oct 2019 1:53 pmFeatured
ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் அப்பாவு மனுத் தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், 203 தபால் வாக்குகளையும், 19, 20 மற்றும் 21-வது சுற்று வாக்குகளையும் திரும்பவும் எண்ணுமாறு உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில், தபால் வாக்குகளையும், மின்னணு வாக்கு இயந்திரங்களையும் உயர்நீதிமன்றப் பதிவாளரிடம் தேர்தல் ஆணையம் இன்று ஒப்படைத்தது. இதையடுத்து, உயர்நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஊழல் கண்காணிப்பாளர் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன.
இந்நிலையில், ராதாபுரம் தொகுதி தேர்தலுக்கான மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.