17 Oct 2019 2:48 pmFeatured
பத்லாபூர் தமிழர் நலச் சங்கம் சார்பில் இந்திய ஏவுகணை நாயகன் முனைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் 88வது பிறந்த தின விழாவை முன்னிட்டு 12.10.2019, 13.10.2019 ஆகிய தேதிகளில் பல வண்ணக் கோலப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் பத்லாபூர் கிழக்கு, முனைவர் பா. வெங்கடரமணி அவர்கள் இல்லத்தில் தலைவர் கருவூர் இரா. பழனிச்சாமி தலைமையில் நடத்தப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் முனைவர் பா. வெங்கடரமணி, கமலா வெங்கடரமணி, ஜே, எபினேசர், எஸ். கோவிந்தராஜ் ஆகியோர் செய்தனர்.
பல வண்ணக் கோலப் போட்டியில் பங்கேற்றவர்களில் கீழ்காணும் போட்டியாளர்களில் பரிசுக்குரியவர்களாக நடுவர்கள் கமலா வெங்கடரமணி, மீனாட்சி வெங்கட், ஜே, எபினேசர் ஆகியோர் தேர்ந்தெடுத்தனர்.
முதல் பரிசு -மகாலட்சுமி சிவானந்த், இரண்டாவது பரிசினை கீர்த்தனா சபரிநாதன் மற்றும் பிரியங்கா ஸ்ரீநிவாஷ் ஆகியோரும், மூன்றாவது பரிசு திருமதி சசிகலா வெங்கடேஷ் மற்றும் ஆறுதல் பரிசினை திருமதி ஜெயந்தி சிவானந்த் மற்றும் திருமதி செல்வி சண்முகம் ஆகியோரும் பெற்றனர்
ஓவியப் போட்டியில் நடுவர்கள் இரவிக்குமார் ஸ்டீபன், சிந்துகுமார், கமலா வெங்கடரமணி ஆகியோரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
குருப் - A
அவந்திகா கோவிந்தராஜ் - முதல் பரிசு
ஜனனி கோபி - இரண்டாவது பரிசு
மொனிஷா சீனிவாசன் - மூன்றாவது பரிசு
குருப் - B
அபிநயா முத்துராமன் - முதல் பரிசு
க்ரிஷான் சபரிநாதன் - இரண்டாவது பரிசு
ஷரவானி சீனிவாசன் - மூன்றாவது பரிசு
மிருனாள் கோபி - ஆறுதல் பரிசு
குருப் - C
பிரியங்கா சீனிவாசன் - முதல் பரிசு
சௌமியா வெங்கடேஷ் - இரண்டாவது பரிசு
ராகுல் சீனிவாசன் - மூன்றாவது பரிசு
குருப் - D
மகாலட்சுமி சிவானந்த் - முதல் பரிசு
கீர்த்தனா சபரிநாதன் - இரண்டாவது பரிசு
செல்வி சண்முகம் - மூன்றாவது பரிசு
அகிலேஷ்வரி மல்லர் - ஆறுதல் பரிசு
தமிழ் அறம் திரு ராமர், முனைவர் பா. வெங்கடரமணி, ரவிக்குமார் ஸ்டீபன், முத்துராமன் ஆகியோர் முனைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் சிறப்பைகளைக் கூறியதோடு நூல்களை வாசிக்கவும் அதை நேசிக்கவும் அதன் வழி நடக்கவும் வலியுறுத்தினர். அவர் வழி நடக்க முயற்சிக்க மாணவ, மாணவிகளைக் கேட்டுக் கொண்டதோடு பரிசு பெற்றவர்களை வாழ்த்தியும் பாராட்டியும் பேசினர். சிந்துகுமார், சுபாஷ் சந்திரன், சிவானந்த், சீனிவாசன், அக்சா எபிநேசர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முனைவர் பா. வெங்கடரமணி, வெங்கட், இரவிக்குமார் ஸ்டீபன் ஆகியோரிடமுள்ள அரிய, எளிதில் கிடைக்காத சங்க கால நூல்கள் அடங்கிய நூலகத்தை பயன்படுத்திக்கொள்ள சங்கத்தின் சார்பில் அனைவரையும் கேட்டுக் கொள்ளப்பட்டது
பொருளாளர் ஜே, எபினேசர் நன்றி கூற இனிதே நிறைவுற்றது.