Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

பெரியார் விருது பெற்ற தேவதாசன் மறைவு- தமிழ் எழுத்தாளர் மன்றம் இரங்கல்

06 Nov 2019 7:58 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

மும்பை  புறநகர் மாநில  திராவிட முன்னேற்றக்  கழகத்தின் மேனாள் அவைத் தலைவரும் பெரியார் விருது பெற்றவரும் பம்பாய் திருவள்ளுவர் மன்றத்தின் செயலாளருமான தேவதாசன் மறைவிற்கு தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் வதிலை பிரதாபன் இரங்கல் அறிக்கை  வெளியிட்டுள்ளார்

          காலம் சென்ற தமிழறிஞர்களான சீர்வரிசை சண்முகராஜன் பேராசிரியர் சமீரா மீரான் போன்றோரால் கடந்த புத்தாயிரம் ஆண்டான  2000 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் முதல் தொடக்க விழாவினை தமது பள்ளி அரங்கில் வைத்து தொடங்கிவைத்து  மென்மேலும் வளர வாழ்த்தியதோடு அவ்வப்பொழுது மன்றத்தின்  நிகழ்வுகளை தமது பள்ளியில் நடத்துவதற்கு பேருதவிகள் செய்து வந்தவரும்  மன்றத்தின் புரவலர் ஜேம்ஸ்  தேவதாசன் அவர்களின்  தந்தையுமான அய்யா தேவதாசன் அவர்கள்   உணர்வுகளோடு இலக்கியம் சார்ந்த பொதுப் பணிகளை முழு ஈடுபாட்டுடன் ஆற்றிவந்ததன்   மூலம் மும்பை வாழ் தமிழர்களிடையே உழைப்பின் அருமையையும் பொதுவாழ்வின் முக்கியத்துவத்தையும் பதியம் செய்து வந்த நல்ல உள்ளம் ஓன்று தமது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டது என்பதை அறிகையில் மிகுந்த வருத்தமடைகின்றோம். 

முத்தமிழ்  காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் போன்றோரின் தமிழ் பற்றால் உந்தப்பட்டு மும்பையிலும் பல இலக்கிய நிகழ்வுகளை நடத்துவதோடு திறன்மிக்க பேச்சாளர்களையும்  கவிஞர்களையும் வரவழைத்து பட்டி மன்றம், கவியரங்கம், கருத்தரங்கம் என்று தொடர் நிகழ்ச்சிகளை நடத்தி வந்ததன் மூலம் மும்பை மண்ணில் தமிழ்ப்பணிக்கு உயிரோட்டம் கொடுத்துவந்த தமிழ்ப்பணியாளரின் உள்ளம் தமது பணிகளை உடலளவில் நிறுத்திக் கொண்டதை அறிந்து மிகவும் வருந்துகின்றோம்.
          நூற்றுக்கு மேற்பட்ட கவிஞர்களை தாயகத்திலிருந்து வரவழைத்து இலக்கிய பெருவிழா நடத்தி இன்றுவரை அதனை ஈடு செய்ய இயலா முத்தாய்ப்பான நிகழ்வாக இருக்கும் அளவு அவர்கள் ஆற்றிய தமிழ்ப்பணி என்றென்றும் நினைவு கூறத்தக்கது.
          மும்பையின் பல்வேறு பகுதியிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழை மாணவ மாணவிகளுக்கு பள்ளிக் கட்டணமில்லா கல்வியை அளித்து அவர்களின் எதிர்காலத்திற்கு விளக்காக   இருந்த நல்ல உள்ளம் ஓன்று தமது  மூச்சை நிறுத்திக்கொண்டது என்று அறிகின்றபோது மிகவும் வருந்துகின்றோம்.

         ஐயா அவர்களின் புதல்வரும் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் புரவலருமான ஜேம்ஸ் தேவதாசன் அவர்களுக்கும் அவர்களது
குடும்பம் மற்றும் நட்புறவுகள்  அத்தனை பேருக்கும் மன்றத்தின் அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் தமது ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

095790
Users Today : 5
Total Users : 95790
Views Today : 12
Total views : 415162
Who's Online : 0
Your IP Address : 3.144.117.167

Archives (முந்தைய செய்திகள்)