20 Nov 2019 1:34 amFeatured
மும்பை திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும் பெரியார் 141வது பிறந்தநாள் மற்றும் மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெறும் பெரியார் கருத்தரங்கம் ஆகிய இரண்டு நிகழ்வுகளிலும் திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு சிறப்புரையாற்றுகிறார்
மும்பை திராவிடர் கழகம்
மும்பை திராவிடர் கழகம் சார்பில் 23.11.2019 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மாட்டுங்கா, குஜராத் சேவா மண்டலில் வைத்து பெரியார் 141வது பிறந்தநாள் விழா நடைபெறுகிறது.
பொருளாளர் அ.கண்ணன் வரவேற்புரையாற்ற,
மும்பை திராவிடர் கழக தலைவர் பெ.கணேசன் தலைமை தாங்குகிறார்,
மும்பை பகுத்தறிவாளர் கழக தலைவர் அ.இரவிச்சந்திரன் தொடக்கவுரையாற்றுகிறார்,
முன்னிலை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பி.சண்முகசுந்தரம், திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், மும்பை திராவிடர் கழகத்தைச் சார்ந்த சோ.ஆசைத்தம்பி, இ.அந்தோணி, வெ.சித்தார்த்தன், சோ.சௌந்திரபாண்டியன், அ.இராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
படத்திறப்பு
தந்தை பெரியார் படத்தை முன்னாள் தாராவி கிளை திமுக செயலாளர் வி.என்.சண்முகராசன் திறந்து வைக்கிறார்.
புரட்சியாளர் அம்பேத்கர் படத்தை அம்பேத்கர் நினைவு அறக்கட்டளை நிறுவனர் அ.மாறன் நாயகம் திறந்துவைக்கிறார்.
கருத்துரை
இலேமூரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன்,மும்பை புறநகர் திமுக செயலாளர் அலிசேக் மீரான், மும்பை திமுக பொறுப்பாளர் கருவூர்.இரா.பழனிச்சாமி, திமுக பேச்சாளர் முகமது அலி ஜின்னா,இந்திய கம்யூனிஸ்ட் தாராவி செயளாளர் ஞான அய்யாப்பிள்ளை, திராவிடர் மறுமலர்ச்சி நடுவம் நிறுவனர் ஜெ.ஸ்டீபன் இரவிக்குமார் ஆகியோர் கருத்துரையாற்றுகின்றனர். மும்பை திக துணைச்செயலாளர் ஜெ.வில்சன் நன்றியுரையாற்றுகிறார்
இரண்டாம் நாள் நிகழ்வு
இரண்டாம் நாள் நிகழ்வாக மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெறும் பெரியாரியல் கருத்தரங்கம் 24.11.2019 ஞாயிறு மாலை 6மணிக்கு மாட்டுங்கா மைசூர் அசோசியேசன் குளிர் அரங்கத்தில் வைத்து நடைபெறுகிறது.
செயலாளர் மு.சசிகுமார் வரவேற்புரையாற்ற, மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன் தலைமை தாங்குகிறார்.மும்பை திராவிடர் கழக தலைவர் பெ.கணேசன் தொடக்கவுரையாற்றுகிறார்.
கருத்தரங்கம்
சமூக நீதி என்ற தலைப்பில் முகமது அலி ஜின்னா,
பெண்ணுரிமை என்ற தலைப்பில் புதியமாதவி,
பகுத்தறிவு என்ற தலைப்பில் நெல்லைப் பைந்தமிழ்,
சாதி ஒழிப்பு என்ற தலைப்பில் கீ.வீரமணி,
மூடநம்பிக்கை என்ற தலைப்பில் கா.பாபுசசிதரன்
ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
பாராட்டுப்பெறும் தமிழ்ச் சான்றோர்கள்
மும்பை தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன்,
பம்பாய் திருவள்ளுவர் மன்றத் தலைவர் ஜேம்ஸ் தேவதாசன்,
மும்பை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் ந.வசந்தகுமார்,
மனித நேய இயக்க ஒருங்கிணைப்பாளர் சங்கர் திராவிட் ஆகியோர் சிறப்பிக்கப்படுகின்றனர்
எம்.ஐ.டி.சி தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பொன்.அன்பழகன் ஐ.எ.எஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.
மும்பையின் திராவிட இயக்கத்தின் உணர்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.
பொருளாளர் ஆர்.பரமசிவம் நன்றியுரையாற்றுகிறார்.
இரண்டு நாள் நிகழ்விலும் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி மும்பை திராவிடர்கழகம் மற்றும் மும்பை பகுத்தறிவாளர் கழக நிர்வாகிகள் கேட்டுக்கொள்கின்றனர்.