14 Dec 2019 10:04 amFeatured
மும்பையில் செம்பூர் (மேற்கு) பகுதியில் உள்ள திலக் நகரிலிருந்து - செல்காலனி, செம்பூர்(கிழக்கு) பகுதிக்கு போகுவதற்கு ரயில் தண்டவாளத்தை கடந்து போகவேண்டியதை தவிர வேற வழியில்லை. ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும் போது பல உயிர்கள் ரயில்களில் அடிபட்டு இறப்பது தொடர் கதையாக உள்ளது.
ஆதலால் மேற்படி ரயில் தண்டவாளத்தை கடக்காமல் செல்வதற்கு பாலம் கட்டி தரவேண்டும் என ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே அதிகாரிகளிடம் நேரிடையாக சந்தித்து மத்திய ரயில்வேயின் மண்டல ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் ராஜா உடையார் கோரிக்கை வைத்தார்.
மேற்படி கோரிக்கையை ஏற்று மத்திய ரயில்வே அதிகாரி திரு. என்.சி.சிரிமாலி அவர்கள் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.
ரயில்வே அதிகாரிகளிடம் இப்பகுதி பொது மக்கள், பள்ளி செல்லும் மாணவர்கள்/மாணவிகள் அனைவரும் செம்பூர் மேற்கு பகுதியில் செம்பூர் கிழக்கு பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி போகுவதற்கு சுமார் ஒரு (1.00) கி.மீ சுற்றி வரவேண்டும்.. மேற்படி பாலம் கட்டினால் இரண்டு (2.00) நிமிடத்தில் கடந்து செல்லலாம் என ராஜா உடையார் மக்கள் படும் அவதிகளை எடுத்து கூறினார். அவருடன் கவுன்சிலர் ராஜேஷ் புல்வாரியா, ஜெ.முத்துகுமார். பெரியசாமி, கிலமண்ட் இளங்கோ, தர்மா, கே.இ.சாமி, சமத் கான், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.