24 Dec 2019 9:21 amFeatured
மகாராஷ்டிராவை தொடர்ந்து ஜார்கண்ட்டிலும் பா.ஜ.க, ஆட்சியை இழந்தது, ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகளில் 47 இடங்களை கைப்பற்றிய, காங்., கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்தது
81 தொகுதிகளைக் கொண்ட ஜார்கண்ட் சட்டசபைக்கு
நவ.,30 முதல் டிச.,20 வரை
5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில்
பதிவான ஓட்டுக்கள் இன்று (டிச.,23) காலை
8 மணி முதல் எண்ணப்பட்டு, முடிவுகள்
வெளியிடப்பட்டன. ஓட்டு எண்ணிக்கை துவங்கியது
முதல் காங் கூட்டணி முன்னிலை
வகித்தது.
பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை என்ற நிலையில்,
40 க்கும் அதிகமான இடங்களில் காங்.,
கூட்டணி முன்னிலையில் இருந்தது. காங்., இந்த தேர்தலில்
ஜார்கண்ட் முக்தி மோட்சா, ராஷ்டிரிய
ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன்
கூட்டணி அமைத்து போட்டியிட்டது. கூட்டணி
கட்சிகளில் காங்.,ஐ விட
ஜார்கண்ட் முக்தி மோட்சா கட்சியே
அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
காங்., கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை
பிடித்தது. அக்கூட்டணியில், காங்., - 16, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா - 30 மற்றும்
ராஷ்டிரிய ஜனதாதளம் 1 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பா.ஜ.க, இம்முறை
25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால்
ஆட்சியை பறிகொடுத்தது.
ஜார்கண்ட் விகாஷ் மோர்சா 3 தொகுதிகளிலும்,
ஏ.ஜே.எஸ்.யூ., 2 தொகுதிகளிலும் வெற்றி
பெற்றது.
ஹேமந்த் சோரன் முதல்வராகிறார் !?
காங்., கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டு விட்டதால், ஜார்கண்ட் முக்தி மோட்சா தலைவராக இருக்கும் ஹேமந்த் சோரன் முதல்வராக அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.