25 Dec 2019 1:41 pmFeatured
வாழ்க்கை என்பது போராட்டமும் இல்லை, பூந்தோட்டமும் இல்லை, வாழ்க்கை, வாழ்க்கைதான்: சொல்வேந்தர் சுகிசிவம்
டோம்பிவலி: வாழ்க்கை என்பது போராட்டமா? பூந்தோட்டமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் டோம்பிவலி எஸ்.ஐ.ஏ. கல்லூரியில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.
இப்பட்டிமன்றத்திற்கு கலைமாமணி சொல்வேந்தர் சுகிசிவம் நடுவராக பங்கேற்றார். செ. மோகனசுந்தரம், புவனா வெங்கட், வ.இரா தமிழ்நேசன் ஆகியோர் வாழ்க்கை என்பது போராட்டமே! எனவும், சொல்லின் செல்வர் மணிகண்டன், மீனாட்சி வெங்கடேஷ், அன்னபூரணி ஜம்பூநாதன் ஆகியோர் வாழ்க்கை என்பது பூந்தோட்டமே! என அன்றாடம் நடைபெறும் சம்பவங்களை நகைச்சுவையோடும் எடுத்துரைத்தனர்.
இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நடுவர் சொல்வேந்தர் சுகிசிவம் வாழ்க்கை என்பது போராட்டமும் இல்லை, பூந்தோட்டமும் இல்லை, வாழ்க்கை, வாழ்க்கைதான் என தீர்ப்பளித்தார்.
முன்னதாக பட்டிமன்ற நடுவர் மற்றும் பேச்சாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவில் செயலாளர் கே.வி ரங்கநாதன் நன்றி கூறினார். பொதுமக்கள் திரளாக கலந்து பட்டிமன்றத்தை கேட்டு மகிழ்ந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை எஸ்.ஐ.ஏ கல்லூரி தலைவர் டி.என் முத்துகிருஷ்ணன், துணைத்தலைவர் எஸ். விஜயராகவன், செயலாளர் கே.வி. ரங்கநாதன், துணைச் செயலாளர் எம். கோபாலகிருஷ்ணன், பொருளாளர் எஸ். ஜம்பூநாதன், துணைப்பொருளாளர் எஸ். கார்த்திக் மற்றும் கமிட்டி நிர்வாகிகள் ஜி. ரவி சங்கர், ஆர்.எஸ் நாதன், வி.கே கோபாலகிருஷ்ணன், கே.வி சத்யமூர்த்தி, கே.வி கிருஷ்ணசுவாமி, எம். கணபதி, எம். ரவி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.