11 Feb 2020 4:17 pmFeatured
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் ஆம் ஆத்மி கட்சி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
டெல்லியில் 70 தொகுதிகளுக்கு கடந்த 8ம் தேதி நடத்தப்பட்டது பதிவான வாக்குகள் இன்று (11.02.2020) காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே பெரும்பான்மை இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
புதுடெல்லி தொகுதியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலை. டெல்லி பட்பர்கஞ்ச் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா முன்னிலை வகித்து வருகிறார். மொத்தம் உள்ள 70 இடங்களில் 63 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது. பாஜக கட்சி 7 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் அனைத்து தொகுதியிலும் தோல்வி முகத்தில் உள்ளது.
ஆம் ஆத்மியில் இருந்து விலகி காங்கிரஸ் வேட்பாளராக சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிட்ட அல்கா லம்பா பின்தங்கி உள்ளார்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது
டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி அமையவுள்ள நிலையில் ஆம் ஆத்மியின் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.