13 Apr 2020 4:01 pmFeatured
வீட்டீல் இருந்தே எழுதுங்கள்! போட்டியில் வெல்லுங்கள்.
கொரோனா பரவலில் இருந்து விலகி இரு! மூளைக்கு வேலை கொடு!!
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் நடத்தும் கட்டுரை, சிறுகதை, கவிதை போட்டிகள்.
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் மற்றும் தென்னரசு மின்னிதழ் இணைந்து நடத்தும் மாணவர்களுக்கான கட்டுரை, சிறுகதை, கவிதை போட்டிகள் மின்னஞ்சல் EMAIL வாயிலாக நடத்தப்பட இருக்கின்றன.
வேண்டுகோளுக்கு இணங்க நீட்டிப்பு
கொரோனா தொற்றுப் பரவுதலில் இருந்து காப்பதற்காக ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் உள்ள பல பள்ளி மற்றும் கல்லூரிப் பிள்ளைகளின் வேண்டுகோளுக்கு இணங்க கால வரையறை சற்று நீட்டிக்கப்பட்டு ஏப்ரல் 26 க்குள் படைப்புகளை அனுப்பித் தரும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் அவ்வப்போது பல இலக்கிய நிகழ்வுகள், சொற்பொழிவுகள், நூல் வெளியீடுகள், ஆய்வுக் கூட்டங்கள், பட்டிமன்றங்கள், கருத்தரங்கள், கவியரங்கள் என பலவிதமான இலக்கிய நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தி வருகின்றது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக வீட்டில் ஓய்வில் இருக்கும் ஐந்தாவது முதல் பனிரெண்டாம் வகுப்பும் அதற்கு மேற்பட்டும் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு சிறப்பான இலக்கிய உணர்வினை ஊட்டுகின்ற முயற்சியாக தென்னரசு மின்னிதழுடன் இணைந்து மேற்சொன்ன போட்டிகளை நடத்த உள்ளது.
கட்டுரைக்கான தலைப்புகள்
1. அதிகாலை எழுதல்
(5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை)
2. உடற்பயிற்சி
(9ம் வகுப்பு முதல் 11ம்வகுப்பு வரை)
3. இயற்கையைப் பேணுவோம்
(12ம் வகுப்பு முதல் கல்லூரி மாணாக்கர்கள்)
சிறுகதைக்கான தலைப்பு
1. அன்பே ஆயுதம்
(5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை)
2. வரும் முன் விலகு
(9ம் வகுப்பு முதல் 11ம்வகுப்பு வரை)
3. கொரோனா – வீட்டுச்சிறையில் உதித்த சிந்தனைகள்
(12ம் வகுப்பு முதல் கல்லூரி மாணாக்கர்கள்)
கட்டுரை,சிறுகதை இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
கவிதைக்கான தலைப்பு
1. மழை
(5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை)
2. அப்பா
(9ம் வகுப்பு முதல் 11ம்வகுப்பு வரை)
3. மலர்
(12ம் வகுப்பு முதல் கல்லூரி மாணாக்கர்கள்)
போட்டிக்கான கவிதை 24 வரிகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
நடுவர்கள்
மேற்சொன்னபடி கட்டுரைப் போட்டிகளை தமிழ் எழுத்தாளர் மன்ற செயலாளர் மற்றும் துணைச் செயலாளர்களும் நல்லாசிரியர்களுமான அமலா ஸ்டேன்லி மற்றும் பொற்செல்வி கருணாநிதி ஆகியோரும்
சிறுகதைப் போட்டிகளை மன்றத்தின் துணைத் தலைவர் கவிஞர் இரஜகை நிலவன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வெங்கட் சுப்ரமண்யன் ஆகியோரும்,
கவிதைப் போட்டிகளை மன்றப் பொதுக் குழு உறுப்பினர்களான கவிஞர் இறை.சா. இராசேந்திரன் மற்றும் கவிஞர் பாபு சசிதரன் ஆகியோரும் நடுவர்களாக இருந்து நடத்திக் கொடுக்கவுள்ளார்கள்.
போட்டிக்கான குறிப்புகள் படைப்புகளை
mahatwf@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு
26-04-2020 க்குள் அனுப்பி வைக்கும்படி தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் வதிலை பிரதாபன் கேட்டுக்கொண்டுள்ளார்.