19 Apr 2020 11:12 amFeatured
கொரோன வைரஸ் நோயால் அரசு அறிவித்துள்ள லாக் டவுன் மற்றும் ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள். அதனால் மகாராஷ்ட்ரா அரசு மக்களுக்கு நேரடியாகவும், ரேசன் கடைகள் மூலமாகவும் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறது.
இந்நிலையில் தினக் கூலி தொழிலாளிகள் மற்றும் சாலையோர சிறு சிறு வியாபாரிகள் போன்றோர்கள் மற்றும் பல குடும்பங்களில் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுகிறோம் அரசின் நிவாரண பொருட்கள் கிடைப்பதில்லை என மும்பை பாரதிய ஜனதா கட்சி தமிழ் பிரிவு மும்பை தலைவர் ராஜா உடையாரிடம் தொலைபேசி மூலமாகவும் மற்றும் நேரடியாகவும் தொடர்பு கொண்டு பேசியதன் விளைவாக மும்பை மாநகராட்சி கமிஷனர், மும்பை நகரத்தின் பொறுப்பு அமைச்சர்கள் (Guardian Minister) திரு. ஆதித்யா தாக்கரே மற்றும் மும்பை புறநகர் பொறுப்பு அமைச்சர் திரு அசலாம் சேக் ஆகியோருக்கு கடிதம் (எண் 58/04/2020) மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மும்பை மாநகராட்சி அதிகாரிகள் ராஜா உடையாரை தொடர்பு கொண்டு மும்பையில் ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு மேற்படி பொருட்கள் (packages) நேரடியாக கொடுக்கப்படும் எனவும் ரேசன் கார்டு உள்ளவர்களுக்கு வழக்கமாக வாங்கும் ரேசன் கடைகளில் அரசின் நிவாரண பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பல ரேசன் கடைகளில் (எ.கா கடை எண். U-MUM 44/E/104, U-MUM 44/E/ 42. போன்ற) போய் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரண பொருட்களை தரும் படி கேட்டால் இதுவரை மக்களுக்கு கொடுக்க வேண்டிய நிவாரண பொருட்கள் எங்களுடைய ரேசன் கடைக்கு வரவில்லை என சொல்லி மக்களை திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.
எனவே மகாராஷ்டிரா மாநில அரசு இதனை கருத்தில் கொண்டு உடனே மக்களுக்கு அன்றாட வாழ்விற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அசுரவேகத்தில் செய்து கொடுக்க வேண்டும் என மும்பை பாரதிய ஜனதா கட்சி, தமிழ் பிரிவு, மும்பை தலைவர் ராஜா உடையார் கோரிக்கை வைத்துள்ளார்.