26 May 2020 11:56 amFeatured
சுமார் ரூபாய் 25,000/- மதிப்புள்ள இலக்கியப் பரிசுகள்
மும்பை: மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் மற்றும் தென்னரசு மின்னிதழ் இணைந்து நடத்திய மாணவர்களுக்கான கட்டுரை, சிறுகதை, கவிதை போட்டிகள் கடந்த மாதம் மின்னஞ்சல் வாயிலாக நடத்தப்பட்டன. அதற்கான வெற்றியாளர்கள் விபரம் வெளிவந்துள்ளது.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய கரோனா தொற்று நோயின் தாக்கத்தின் காரணமாக அனைத்து நாடுகளும் எந்தவித வேறுபாடுகளுமின்றி பாதிக்கப்பட்டிருப்பதைப் போல மகாராட்டிரமும் விதிவிலக்கல்ல என்று சொல்லத்தக்க வகையில் அனைத்துப் பள்ளி கல்லூரி மற்றும் தொழில் நிறுவனங்களின் மூடலின் காரணமாக அச்சத்தில் தவித்துக் கொண்டிருக்கும் நமது தமிழ்ப் பிள்ளைகளின் பயத்தைப் போக்கவும் கிடைத்துள்ள நேரத்தை சரியான வழியில் பயன்படுத்தி அவர்களது சிந்தனைகளுக்கு ஊக்கம் கொடுக்கும் நோக்கத்திலும் கட்டுரை சிறுகதை, கவிதைப் போட்டிகளை மின்னஞ்சல் வாயிலாக வீட்டில் இருந்து கொண்டே எழுதுவதற்கான வாய்ப்பினை பொதுநலன் கருதி தமிழ் எழுத்தாளர் மன்றம் ஐந்தாவது முதல் பன்னிரெண்டாம் வகுப்பும் அதற்கு மேற்பட்டும் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு சிறப்பான இலக்கிய உணர்வினை ஊட்டுகின்ற முயற்சியாக தென்னரசு மின்னிதழுடன் இணைந்து மேற்சொன்ன போட்டிகளை நடத்தியது.
கட்டுரைப் போட்டி முடிவுகள்
நடுவர்கள் : திருமதி. அமலா ஸ்டேன்லி மற்றும் திருமதி.பொற்செல்வி கருணாநிதி
அதிகாலை எழுதல் என்ற தலைப்பில் எழுதிய 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்களில்
ஆர்.நவீன் குமார் (SIA,Dombivili) முதல் பரிசாக ரூ 1500 ம்:
அனகா ராம்ஜி (SIA,Dombivili) இரண்டாம் பரிசாக ரூ 1000 ம்
வைஷ்ணவி ரவிராமன் (SIA,Dombivili) மூன்றாம் பரிசாக ரூ 500 ம்
பெறுகின்றனர்.
உடற்பயிற்சி என்ற தலைப்பில் எழுதிய 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு மாணவர்களில்
கே.வேதீஸ்வரன் (SIA,Dombivili) ஆறுதல் பரிசாக ரூ 1000 ம்
இயற்கையை பேணுவோம் என்ற தலைப்பில் எழுதிய 12ம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களில்
யோகிதா ரவீந்திரகுமார் (Sree Balaji Medical College, Chrompet)
முதல் பரிசாக ரூ 2000 மும்
பிரபாகர் ஷண்முகம் (BADLAPUR) இரண்டாம் பரிசாக ரூ 1500 ம்
ஜெ.ஸ்ரீவைஷ்ணவி (PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, பீளமேடு, கோயம்புத்தூர்) மூன்றாம் பரிசாக ரூ 1000 மும்
பெறுகின்றனர்
சிறுகதைப் போட்டி முடிவுகள்
நடுவர்கள் : கவிஞர் இரஜகை நிலவன் மற்றும் திரு.வெங்கட்
அன்பே ஆயுதம் என்ற தலைப்பில் எழுதிய 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்களில்
அனகா ராம்ஜி SIA,Dombivili முதல் பரிசாக ரூ 1500 ம்
மந்திரமூர்த்தி. இரா SIA,Dombivili முதல் பரிசாக ரூ 1000 மும்
சஃப்ரூன் பெமிலோ SitharKottai, Ramanad மூன்றாம் பரிசாக ரூ 500ம் பெறுகின்றனர்
வீட்டுச் சிறையில் உதித்த சிந்தனைகள் என்ற தலைப்பில் எழுதிய 12ம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களில்
நித்யா சதானந்தன் Vithalwadi,Kalyan முதல் பரிசாக ரூ 2000 மும்
மேகலா Anna Adharsh College,Chennai இரண்டாம் பரிசாக ரூ 1500 ம்
சிபிதா Vellalar College Erode மூன்றாம் பரிசாக ரூ 1000 மும்
பெறுகின்றனர்
கவிதைப் போட்டி முடிவுகள்
நடுவர்கள் : கவிஞர். இறை. ச. ராசேந்திரன் மற்றும்
கவிஞர். கா. பாபுசசிதரன்
மழை என்ற தலைப்பில் எழுதிய 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்களில்
நவீன்குமார் R SIA,Dombivili,MH முதல் பரிசாக ரூ 1500 ம்
சீ.குலாம் தன்வீர் Mohmadia ScHOOL,Ramnad இரண்டாம் பரிசாக ரூ 1000 ம்
மந்திரமூர்த்தி SIA,Dombivil மூன்றாம் பரிசாக ரூ 500 ம் பெறுகின்றனர்
அப்பா என்ற தலைப்பில் எழுதிய 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு மாணவர்களில்
ப்ரனிகா ஸ்ரீ ஆறுதல் பரிசாக ரூ 1000 ம்
மலர் தலைப்பில் எழுதிய 12ம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களில்
ப.வித்யா பிரதீபா Vellalar College Erode முதல் பரிசாக ரூ 2000 மும்
சுந்தரி K Chollen Coll. Kanjipuram இரண்டாம் பரிசாக ரூ 1500 ம்
வசந்தகுமார் Chollen Coll. Kanjipuram மூன்றாம் பரிசாக ரூ 1000மும் பெறுகின்றனர்
வெற்றியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும் தக்க ஊக்கத்தொகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.பரிசுத்தொகை ரூபாய் 25,000/- பல்வேறு வெற்றியாளர்களுக்கும் தரம் வாரியாகப் பிரித்து வழங்கப்படும். பாராட்டுச் சான்றிதழ் கணினி மூலம் பதிவிறக்கம் செய்யும் வகையில் மின்னஞ்சல் வழியாக விரைவில் அனுப்பி வைக்கப்படும்.
ஊரடங்கு காலமாக இருப்பதாலும் நேரில் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அனைவருக்கும் அமையாது என்று கருதுவதாலும் காசோலையாக அஞ்சல் மூலமாக போக்குவரத்து நிலைமை தெளிவானவுடன் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.
போட்டிகளை சிறந்த முறையில் நடத்திக் கொடுத்த நடுவர்களுக்கு நன்றிகளையும் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் மன்றத்தின் அனைத்து நிர்வாகிகளின் சார்பில் முனைவர் வதிலை பிரதாபன் தெரிவித்துள்ளார்.