Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

மும்பை புறநகர் மாநில திமுக இலக்கிய அணி சார்பாக ‘ஜூம் செயலி’ வழியாக தலைவர் கலைஞர் அவர்களின் 97 ஆவது பிறந்த நாள் விழா !

02 Jun 2020 5:26 pmFeatured Posted by: Admin

You already voted!

முதல் அமர்வு
Zoom Meeting Id:  750 2588 6735
Password:  1eYaEr

நாள் : 03.06.2020, பொழுது : மாலை 6.00 மணி
எழுத்தாளர் கோவி.லெனின் சிறப்புரை.

மும்பை புறநகர் மாநில திமுக இலக்கிய அணி சார்பாக ஜூம் செயலி வழியாக தலைவர் கலைஞர் அவர்களின் 97 ஆவது பிறந்த நாள் விழா ! அமேசான் கிண்டிலில் கவிதை நூல் வெளியீடு!

மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான் தலைமை எழுத்தாளர் கோவி.லெனின் சிறப்புரை.

வருகின்ற ஜுன் 3 ஆம் நாள் தலைவர் கலைஞரின் 97-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அன்றைய தினம் ஜூம் செயலி வழியாக தலைவர் கலைஞரின் 97 ஆவது பிறந்த நாள் விழா மும்பை புறநகர் திமுக செயலாளர் அலிசேக் மீரான் அவர்கள் தலைமையில் மாலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது.

இந்நிகழ்வில்  மும்பை புறநகர் மாநில இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.இரா. தமிழ்நேசன் அவர்கள் தொகுத்த  "தெற்கில் உதித்த திராவிடச் சூரியன்" தலைவர் கலைஞர் புகழ் பாடும் கவிதை நூல் அமேசான் கிண்டிலில்வெளியிடப்படுகிறது.

எழுத்தாளர் கோவி.லெனின் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

தலைவர் தளபதி அவர்களின் "அப்பா, என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே" என்ற இரங்கல் கவிதையும்
"தெற்கில் உதித்த திராவிடச் சூரியன்" கவிதை தொகுப்பில் இடம் பெறுவது  குறிப்பிடத்தக்கது.

மேலும், திமுக மகளிர் அணி அமைப்பாளர் கவிஞர்.கனிமொழி,
திராவிட இயக்க பாதுகாப்பு பேரவை நிறுவனர்  சுப. வீரபாண்டியன், தலைமைக் கழக இலக்கிய அணி அமைப்பாளர் புலவர் இந்திரகுமாரி, துணைத் தலைவர் கவிச்சுடர் கவிதைப் பித்தன்,
திமுக மகளிரணி துணைச் செயலாளர் கவிஞர். இராசாத்தி சல்மா, பாவலர் அறிவுமதி, எழுத்தாளர் கோவி.லெனின் ஆகியோர் கவிதைகளும், மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான், மாநகர பொறுப்பாளர் கரூர் .இரா.பழனிச்சாமி ஆகியோர்களின் கட்டுரையும் இடம்பெறுவதோடு மேலும் பல கவிஞர்களின் கவிதைகளும் இடம் பெறுகின்றன.

தலைவர் கலைஞர் மறைவையொட்டி மும்பை புறநகர் மாநில திமுக இலக்கிய அணி சார்பாக 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி பாடலாசிரியர் நெல்லை ஜெயந்தா அவர்கள் தலைமையில் மும்பையில் நடைபெற்ற "கவிதாஞ்சலி" நிகழ்ச்சியில் மும்பையிலிருந்து பேராசிரியர் சமீரா மீரான், கவிஞர் வ.இரா.தமிழ்நேசன், கவிஞர் வதிலை பிரதாபன், பாவலர் முகவை திருநாதன், பாவலர் ஞாயிறு இராமசாமி, பாவலர் நெல்லைப் பைந்தமிழ், கவிஞர் இரஜகை நிலவன், கவிஞர் வே.சதானந்தன், கவிஞர் கி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு கவிதை பாடினர். அக்கவிதாஞ்சலி நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்ட கவிதைகளும் இல் தொகுப்பில் முக்கிய இடம் பெறுகிறது.

ஜூம் செயலி வழியாக நடைபெறும் தலைவர் கலைஞர் அவர்களின் 97 ஆவது பிறந்த நாள்  நிகழ்வில் மும்பை மாநகர திமுக பொறுப்பாளர் கரூர்.இரா.பழனிச்சாமி, மும்பை புறநகர் மாநில திமுக பொருளாளர் பி.கிருஷ்ணன், மும்பை மாநகர அவைத் தலைவர் வே.ம.உத்தமன், 

மும்பை புறநகர் மாநில திமுக, துணைச் செயலாளர்கள் கவிஞர். வதிலை பிரதாபன், அ.இளங்கோ, இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.இரா.தமிழ் நேசன், மும்பை மாநில இளைஞரணி அமைப்பாளர் வசந்த குமார், இலக்கிய அணித்தலைவர் வே.சதானந்தன், பொருளாளர் உதயகுமார், புரவலர்கள் சோ.பா.குமரேசன், கவிஞர்.இரஜகை நிலவன், துணைச் செயலாளர்கள் ஜெய்னுலாப்தீன், தமிழின நேசன், சுப.மணிமாறன்,

மேனாள் இளைஞரணி அமைப்பாளர் சாத்தரசன்பட்டி. மா.சேசுராஜ், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் க.மூர்த்தி, இரா.கணேசன், கிளைக் கழகச் செயலாளர்கள் வீரை.சோ.பாபு, மெகபூப்பாட்ஷா, ஆ.பாலமுருகன், கு.மாரியப்பன்,  சு.பெருமாள், முஸ்தாக் அலி ஆகியோருடன் புறநகர் மற்றும் மாநகர திமுக நிர்வாகிகளும் உலகமெங்கும் உள்ள திராவிட  முன்னேற்றக் கழகத் தோழர்களும் , திராவிட இயக்க உணர்வாளர்களும் கலந்து கொள்கின்றனர்.

இரண்டாம் அமர்வு
Meeting ID: 769 3227 8703
Password: 482365

மாலை 6.45 முதல்
கலைஞரும், கவிதையும் என்ற தலைப்பில்
வழக்கறிஞர். கனிமொழி ம.வீ
சிறப்புரையாற்றுகிறார்
மற்றும்
மும்பை புறநகர் திமுகவினர் உரையாற்றுகின்றனர்

Tags:
You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096562
Users Today : 8
Total Users : 96562
Views Today : 15
Total views : 416713
Who's Online : 0
Your IP Address : 18.117.75.53

Archives (முந்தைய செய்திகள்)