Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பில் “மகளிர் கருத்தரங்கம்” – ஸூம் (ZOOM) செயலி மூலம்

19 Jun 2020 10:37 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பில் ”பெண்ணின் பெருமை” என்ற தலைப்பில் மகளிர் கருத்தரங்கம் ஸூம் (ZOOM) செயலி மூலம் நடைபெறவிருக்கிறது.

மார்ச் 15 அன்று நடைபெறவிருந்த கருத்தரங்க நிகழ்வு கொரோனாத் தொற்று லாக்டவுன் காரணமாக தள்ளி வைக்கப்பட்டதை அனைவரும் அறிவோம்.

அதே நிகழ்வு Zoom App மூலம் வருகின்ற 21.06.2020 ஞாயிறு மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

இக் கருத்தரங்கம் மன்றச் செயலாளர் அமலா ஸ்டேன்லி தலைமையில் நடைபெறுகிறது. இரண்டு அமர்வாக நடைபெறும் இந்த கருத்தரங்கில்

முதல் அமர்வு

முதல் அமர்வில்  சகோதரியின் பெருமை என்ற தலைப்பில் லட்சுமி மகேஸ், மகளின் பெருமை என்ற தலைப்பில் கலைச்செல்வி, ஆசிரியர்  பெருமை என்ற தலைப்பில் அனிதா அருணாச்சலம், இலக்கியத்தில்  பெருமை என்ற தலைப்பில் யாமினிஸ்ரீ குணசேகரன் ஆகியோரும்

இரண்டாம் அமர்வு

இரண்டாம் அமர்வில் தாயின் பெருமை என்ற தலைப்பில் செல்வி  ராஜ், மனைவியின் பெருமை என்ற தலைப்பில் ச. கைலாச கணபதி, செவிலியர் பெருமை என்ற தலைப்பில் ஆர். வசுமதி,  காவலர் பெருமை என்ற தலைப்பில் சுபசத்யா வசந்தன் ஆகியோர் கருத்துரையாற்றுகின்றனர்.

நிகழ்வில் எழுத்தாளர் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள், இலக்கிய மற்றும் தமிழ் ஆர்வலர்கள், மும்பை தமிழ் அமைப்பினர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்

மன்றம் சார்பாக நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்க நிகழ்வில் கலந்து கொண்டு பெண்மையைப் போற்ற மன்றம் எடுத்துக் கொண்டுள்ள இந்த சீர்மிகு செயலுக்கு வலு சேர்க்கும்படி அனைவரையும் அன்புடன் மன்றத் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் மற்றும் மன்ற நிர்வாகிகள் கேட்டுக்கொள்கிறார்கள்

இந்த ஸூம் செயலி வழி நடைபெறும் இரண்டு அமர்விலும் கலந்துக்கொள்ள Meeting ID :  552 668 1772   Password : 4vXeUS

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096569
Users Today : 0
Total Users : 96569
Views Today :
Total views : 416727
Who's Online : 0
Your IP Address : 18.191.178.16

Archives (முந்தைய செய்திகள்)