27 Jun 2020 6:06 pmFeatured
மு.பி.பா மறைவுக்கு மும்பை புறநகர் திமுக செயலாளர் அலிசேக் மீரான் இரங்கல்
மு. பி.பாலசுப்ரமணியம் என்ற மணி வேந்தன். திமுக இலக்கிய அணி நிர்வாகி, அறிவியல் தமிழ் மன்றம் துணை தலைவர், செம்மொழி ஆய்வு நிறுவன உறுப்பினர், பச்சையப்பன் கல்லூரி முதல்வர், கலைஞர், பேராசிரியரின் அன்புக்குரியவர்.மாணவர் திமுகவில் பணியாற்றியவர். தமிழறிஞர், மொழி ஆய்வாளர், எழுத்தாளர், பேச்சாளர்.
1989 ஆம் ஆண்டு முதல் எனக்கு அறிமுகம். மொரிசியஸ் தமிழ் மாநாட்டிற்கு செல்லும் வழியில் 24 பேர் அடங்கிய குழுவினருடன் மும்பை வந்தார்.
நானும் கழக நண்பர்களும் அவர்களை மாலை வரவேற்று தங்க வைத்து அதிகாலை விமானத்தில் வழியனுப்பி வைத்தோம்.
அதன் பின் 1989 ஆம் ஆண்டு புலவர் கண்மணி, தஞ்சை கூத்த ரசன், ஆகியோருடன் மும்பை வந்து 8 நாட்கள் தங்கி யிருந்து தினசரி திமுக கூட்டங்களில் பேசினார்கள்.
பின்னர் 1999 ஆம் ஆண்டு கழக பொது செய லாளர் பேராசிரியர் அவர்களுடன் மும்பை வந்தார் பேராசிரியர் பிறந்த நாள் ,மற்றும் நிதியளிப்பு போது கூட்டங்கள் நடந்தது. அவர்தான் பேராசிரியரின் தேதி வாங்கி தந்து அழைத்து வந்தார்.
2004 ஆம் ஆண்டு செம்மொழி மும்பையில் தமிழ் செம்மொழி தகுதி பெற்றமைக்கு விழா எடுத்தோம் .அதற்கு முன்னால் அமைச்சர் தென்னவன் அவர்களுடன் வந்தார்.
2006 ஆம் ஆண்டு திமுக வெற்றி விழாவை மும்பையில் கொண்டாடினோம் , அதற்கும் வந்து கலந்து கொண்டு கூட்டங்களில் பேசினார்.
2010 ஆண்டு தலைவர் தளபதி தலைமையில் என் மகன் திருமணம் சொந்த ஊரில் நடந்த போது வந்து கலந்து கொண்டார்.
மும்பை கழக பெரியவர்கள் மறைந்த வி.தேவதாசன், த.மு.பொற்கோ, பேராசிரியர் சமீரா மீரான் மற்றும் அப்பாதுரை, ஆகியோரிடம் மிகுந்த அன்பு பாராட்டியவர்.
அவரது பவழ விழா அவரது சொந்த ஊரான குற்றாலம் அருகிலுள்ள அய்யாபுரம் கிராமத்தில் 2013 ஆம் ஆண்டு நடந்த போது நான் மும்பையிலிருந்து சென்று கலந்து கொண்டேன்.
மும்பையில் கழக அமைப்பை திறம்பட நடத்த எங்களுக்கு நல்ல ஆலோசனைகளை தந்தவர்.
அவ்வப்போது தொடர்ந்து அலைபேசியில் பேசி வந்தோம்.
அவரது மறைவு செய்தி பேரிடியாக இந்து காலை வந்து.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் ,கழக தோழர்கள் அனைவருக்கும் மும்பை திமுக தோழர்கள் சார்பாக எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.