21 Jul 2020 2:07 pmFeatured
கவிஞர் இரஜகை நிலவனின்
குறுந் தொடர் கதை
அத்தியாயம்-7
‘”வாருங்கள்.. என்ன விசயம் ரொம்ப படபடப்போடு வருகிறீர்கள்.என்ன.. கொரானாவுக்கு மருந்து எதுவும் கண்டுபிடித்து விட்டீர்களா?” சிவா சிரித்துக்கொண்டே கேட்டான்
எதிரே வந்த மெரீனா” சிவா உங்களுக்கு எல்லாமே கிண்டல் தான் எப்போதாவது சீரியசாக பேசியிருக்கிறீர்களா?” என்று கொஞ்சம் கோபத்தோடு கேட்டாள்.
“ ஓ!!!! இவ்வளவு கோபப்படுவீர்கள் என்று நினைக்கவில்லை” என்றவன் “ எனிதிங் சீரியஸ்…” மெதுவாகக்கேட்டான்
“ ஆம் என் பின்னால் வருகிற அந்த ஆளைப் பாருங்கள். நான் லேபிலேயிருந்து கிளம்பி வந்ததிலிருந்து என்னைத்தொடர்ந்து வருகிறான்” என்றாள் மெரீனா.
“என்னது?” கோபத்தோடு திரும்ப, “உங்கள் கதா நாயகன் வேலை யெல்லாம் தூக்கி எறிந்து விட்டு என்னோடு நடங்கள்” என்றாள் மெரீனா.
”நாம் இருவரும் சேர்ந்து இத்தனை நாள் ஒரே ஆராய்ச்சிக்கூடத்தில்வேலை செய்திருந்தும் கூட இவ்வளவு பயந்து கொண்டு….” மெதுவாகச் சிரித்தவன் “ மெரீனா இது உங்களுக்கே கொஞ்சம் அதிகமா படலியா?” என்றான் சிவா.
”நீங்கள் வீரர் தான்.. ஆனால் அதைக்காட்ட இது நேரமில்லை.. ” மெரீனா காரை நோக்கி நடந்தாள்.
அவனும் காரில் ஏறி உட்கார, “ ஆமாம் எங்கே போகிறோம்?” என்று கேட்டான்.
”விமான நிலையத்திற்கு… “ என்றாள் மெரீனா.
”ஆமாம் நாம் கொரோனாவிற்கு மருந்து கண்டு பிடித்தது தெரிந்து விட்டதா?” என்று கேட்டான் சிவா.
”அப்படித்தான் நினைக்கிறேன்” காரை மிகவும் வேகமாக ஓட்டினாள்.
”நான் உடைகள் எதுவுமே எடுத்து வரவில்லை…”என்றான் சிவா.
”என்னை பத்திரமாக குவைத் விமானத்தில் ஏற்றி விடுவதற்காக தான் நீங்கள் ஏர்போர்ட்டிற்கு வருகிறீர்கள்” என்றாள் மெரீனா.
தமிழரசன்
தொண்டர்களிடம் வாழ்த்து சொல்லி அனுப்பி விட்டு உதவியாளரிடம் ”தினமும் அரசியல் சூழ்நிலையை தெரிந்து, தினமும் மூன்று முறை போன் பண்ணி எனக்கு எல்லாத்தையும் சொல்லணும்” பின்ன நமக்குப் பின்னாலே
யாரெல்லாம் இன்னும் குழி பறிச்சி கிட்டிருக்காங்கிறதையும் தெரிவிக்க வேண்டும்” என்று உதவியாளனிடம் சொல்லிவிட்டு விமான நிலையத்திற்குள் நுழைத்தார் அமைச்சர் தமிழரசன் திடீரென்று செல்போன் அழைக்க எடுத்து ”ஹலோ” என்றான்.
”என் ஞாபகம் இருக்குமில்லையா?” என்ற இந்துமதியின் குரல் கேட்டு “இந்து இது கொஞ்சம் அதிகம்” என்றான்.
”நம் இருவர் அன்புச் சின்னமான காதலும் கொஞ்சம் அதிகமான விஷயம் தானே?” என்று இந்துமதி சிணுங்க”
”ஓகே ஓகே நான் அப்புறமாக கூப்பிடுறேன். என்றவாறு எமிகிரேசன் பகுதிக்கு வந்தான் தமிழரசன்.
டாக்டர் சந்திரசேகரை ஸ்ட்ரெக்சரில் வைத்து தூக்கி வந்துகொண்டிருந்தனர். குமணராசன்தான் மாமியாருடன் உள்ளே வந்து அவர்களுடைய டிக்கெட்டுகளை சரிபார்த்துக் கொண்டு மற்ற நண்பர்களிடம் ஒரு சில இன்ஸ்ட்ரெக்ஷன் கொடுத்து செய்யச் சொன்னார்.
சில்வியா வெளியில் நின்று அம்மாவிற்கு கையசைப்பது போல வெளியே நின்று கையாட்டினாள். சகாயராஜும் கூடவே ஒட்டிக்கொண்டு நின்றான்.