26 Jul 2020 6:11 pmFeatured
தூத்துக்குடி தூயபனிமயமாதா பேராலயத்தின் 438 வது திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் தூயபனிமய மாதா திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடி ஆலயம் எதிரில் உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாமெனவும் வீடுகளில் இருந்தே பிரார்த்தனை செய்யும்படியும் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் கேட்டு கொண்டதன்பேரில் கொடியேற்றம் பொதுமக்கள் பங்கேற்பில்லாமல் நடைபெற்றது. தூத்துக்குடி தூயபனிமயமாதா பேராலய திருவிழா இன்று துவங்கி வரும் ஆகஸ்டு 5 ஆம் தேதி வரை நடைபெறுகின்றது.
தூத்துக்குடி தூயபனிமயமாதா பேராலயத்தில் உள்ள பனிமயமாதா விற்கு இன்று பிற்பகல் 12 மணிக்கு பொன்மகுடம் பூட்டப்படுகிறது
திருவிழாவில் தினந்தோறும் நடைபெறும் சிறப்பு ஆராதனைகள் திருப்பலிகள் பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் நடைபெறும் என ஏற்கனவே மறை மாவட்ட ஆயர் தெரிவித்து உள்ளார் .