18 Aug 2020 5:13 pmFeatured
-கவிஞர் ஜேம்ஸ் அந்தோணி
தாயின் வயிற்றினுள் பத்து மாதம் வசந்தமே.
அவள் அரவணைப்பில் இளமை வசந்தமே.
தத்தி தத்தி நடக்க முயன்றதும் வசந்தமே.
பள்ளியில் நண்பர்கள் சுற்றமும் வசந்தமே.
தேர்வில் பெற்ற உயர் மதிப்பெண்ணும் வசந்தமே.
கல்லூரி வளாகத்தில் உலவியதும் வசந்தமே .
பணி தேடி படிப்படியாய் ஏறி இறங்கியதும் வசந்தமே.
பணியின் முதல் வரவை தாய்க்கு தந்ததும் வசந்தமே.
நல் மனையாள் வாழ்வில் கிடைத்ததால் வசந்தமே.
நல் மக்கள் பிறந்ததும் வாழ்வின் வசந்தமே.
அவர்கள் மழலை கேட்டு மகிழ்ந்ததும் வசந்தமே.
பேரன் பேத்தி மழலையில் மகிழ்ந்ததும் வசந்தமே.
ஓயாது உழைத்த காலம் மனதின் வசந்தமே.
ஓய்வூதியம் பெறுதல் மனதிற்கு வசந்தமே.
முழு அடைப்பிலும் நலமுடன் இருப்பதும் வசந்தமே.
இது நாள்வரை நல்வாழ்வு கிடைத்ததும் வசந்தமே.
இறைவா உன்னருள் கிட்டின் இனி எல்லாம் வசந்தமே.