01 Sep 2020 7:02 pmFeatured
சிறுகதை
அம்பர்நாத், அண்ணா கதிர்வேல்
அந்த ஊர் தனியார் மருத்துவ மனையில், சில படுக்கைகள் வெறுமனே இருக்க, ஏதோ சீன நோயாம் “கொரனா” என்கிற நோய் தொற்றுக்காக பரிசோதனை செய்து தனிமையில் இருக்க இங்கு வருவார்களாம், 15 படுக்கை உள்ள நடுத்தர மருத்துவமனைதான் அது.
இங்கு அவர்கள் தனிமையில் இருக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பலர் நல்ல காசுப் பணம் பார்த்தார்கள் ‘பெரிய’...மருத்துவர் சுற்றில் வந்தார் (அவர் ஒரு நாளைக்கு 3 முறை வருவார்) அமுதாவின் படுக்கை அருகே தலைமை மருத்துவர் வந்தார், தேனப்பன் அவசரமாக மனைவியை எழுப்ப முற்படுகையில் மருத்துவர் தடுத்துவிட்டார்.
படுக்கையின்... கட்டிலின் கீழே வலது புறமாக நின்றிருந்த தேனப்பன் மருத்துவர் முகத்தையே பார்த்தபடி இருக்க... மருத்துவர் சொன்னார்...
தேனப்பனைப் பார்த்து ‘’நேற்று கண் மருத்துவர் சாமுவேல் உங்க மனைவி அமுதாவிற்கு சிறப்பாக கண் குணமாகிட்டு வருவதாகச் சொன்னார்... அதனால நீங்கள் நாளைக்கு வீட்டுக்குப் போகலாம். ஆனால் அவங்களுக்கு கண்ணில உள்ள கட்டு 15 நாளைக்கு பிறகுதான் எடுக்கணும் அதனால... முழுசா படுக்கை ஓய்வுதான் இருக்கணும், சரியா?’’
‘சரிங்க’ என்றான் தேனப்பன்’
‘மருத்துவர் தொடர்ந்தார்.... ‘கொரானா’ நோயாளிங்க இங்க அதிகம் வருவதனால...கொஞ்சம் நிலமை சரியானவங்களை அனுப்பச் சொல்லி மேலிடத்து உத்தரவு வேற...படுக்கை இல்லை அதனால இங்குள்ள நிலமை சரியில்லாத நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாத்திட்டோம் இந்த மருத்துவமனைய ... ’கொரானா’ தொற்று நோய் பிரிவாக மாத்தனும் அதனால... நீங்க வீட்டுக்குப் போகலாம்’ என்றார்.
மீண்டும் தேனப்பன் வேகமாக தலையசைத்து ‘சரிங்க’ என்றான்.
மருத்துவமனை உரிமையாளரான மருத்துவர், எப்போதும் பணத்தில் குறியாக இருப்பார், இப்போதும் அவர் சொன்னர், ‘உங்கள் கணக்குகளை காசாளரிடம் இன்று மாலைக்குள் ஒழுங்கு பண்ணிடுங்க... நாளைக்கு காலையிலே நீங்கள் புறப்பட வசதியாக இருக்கும்.’ மேலும் சொன்னார் செவிலியர் (சிஸ்டர்) மருந்து சீட்டை கொண்டு வருவார் அதன்படி மருந்து வாங்கி நீங்கள் சாப்பிடணும். நீங்கள் என்னை பார்க்காமல் போகலாம், நான் வரதாமதமாகும்’ என்றார்.
மருத்துவர் சென்று விட்டார் அடுத்த படுக்கை நோயாளியை கவனிக்க...
மனைவி உறங்குவதைப் பார்த்த தேனப்பன் சிறிது வெளியில் உலாவப் போனால் நன்றாக இருக்குமே என்று எண்ணி புறபட எத்தனிக்க, மருத்துவமனை வாசலைக் கூட்டிடும் இரண்டுப் பெண்கள் கையில் பெரிய துடைப்பங்களை வைத்திருந்தனர் அனால் அவர்கள் பேசுவதோ தங்களைப் பற்றியதுதான்... கவனித்தான்.
‘...அந்த... ஆறாம் எண் படுக்கைக் காரிக்கு என்ன நோயாம்?’ முதலாம் பெண் கேட்டாள். தன்னுடைய முகக்கவசத்தை சரி பண்ணினாள்.
அதற்கு மறுமொழியாக அடுத்தவள் பதில் சொன்னாள் இப்படி....
‘ஏதோ கண் நோயாம்... நாளைக்கு போகச் சொன்னார் பெரிய மருத்துவர்’ ... ம் ... என பெருமூச்சை வெளியிட்டாள் அவள். இவளுக்கு முகக்கவசம் உறுத்தலாகப் பட்டது என்ன செய்ய தலைமை மருத்துவரின் உத்தரவாயிற்றே!. இவளும் சரிசெய்தாள்.
பேச்சு தங்களைப் பற்றித்தான் துவங்குவதை அறிந்த தேனப்பன் அருகில் இருந்த இருக்கையில் அவர்களுக்கேத் தெரியா வண்ணம் அமர்ந்து கவனித்தான்.
‘நீ ஏண்டி பெருமூச்சை இப்படி விடுறே?’ ....ஒருவள்.
ஒட்டுக்கேட்பது தவறு என்றாலும் அவனுடைய உள் மனசு கேட்கத் தூண்டியது...
‘அந்த அமுதா ரொம்ப கொடுத்து வைச்சவ...’ சற்று நிறுத்தினாள்.
‘பொண்டாட்டியை அவள் கணவன் ரொம்பவே ஏந்துறான்? அவளுக்கு முடி சீவி ... பூவைக்கும் அழகேத் தனி...’
‘அதுக்கென்ன? இப்ப...?’ மற்றவள், அதுக்கு ஒண்ணுமில்லை தான்... ‘பொண்டாட்டிக்கு சேலை கட்டி விடறது, பல் தேய்ச்சுவுடறது... ‘கால்’ கழுவ தண்ணியை ஊத்தறார்னா... பார்த்துக்க...?’
மனுசன் என்னமாய் விழுந்து, விழுந்து கவனிக்கிறாரரும்மா...
‘பின்னே கண் தெரியாத மனைவிக்கு அனு சரணையாக, இருப்பது முறைதானே...! அதைத்தானே அவர் செய்யறாரு!’
‘அடிப் ... போடி இவளே...! நீ...! ஒன்னுமே புரிஞ்சிக்க மாட்டே?’
‘அய்யோ ! நீ என்னதான் சொல்லவர...’
‘அப்படி வா வழிக்கு...’உனக்கு நான் விளக்கமா..சொல்றேன்!’
“மனவிமேலே...அவரு... எம்புட்டு... பாசம் வைச்சிருக் கிறாருன்னு... சொல்றேன் கேளு.ரெண்டுநாளா அவரு படுத்து தூங்கிநான் பார்க்கலே எல்லாம் ஒக்காந்படிதான் கண்ணை மூடுறார்னா, பர்த்துக்கோ...’
கேட்பவள் ஆர்வத்துடன் கேடகலானாள்.
‘அவ தூங்கும் போதுக் கூட, அவளுக்கு போர்வையை சரி பண்ணி விடறது!அவளுக்கு விழிப்பு வந்தால் எழும்பிட உதவுவது, அவள் தலையை கோதி முடிச்சு போடுவது, அவள் மாராப்பு சேலை விலகிட்டா அதை சரி பண்ணுவதும், அவள் கொஞ்சம் இருமினாலும் அவர் துடித்துப்போயி ‘ என்னம்மா பண்னுது’ எனத் அன்பாக கேட்பது இப்படியே ... ஏகப்பட்டதுகளை செய்யறார். இத்தனை வேலைகளையும் செய்ய ஆயாக்கள் யாரவது சென்றால், தடுத்து தானே செயவார்’.
இது கொஞ்சம் வினோதமாக பட்டது ஆர்வமுடன் கேட்டாள்.
இதைக்கேட்ட தேனப்பன் பழைய நினைவுகளில்... மூழ்கினான்...
நான் செய்த தவறுக்கு நான்தானே இவளை கவனிக்கணும்? பழைய நினைவுகளில் மூழ்கினான்....இனி அவனது குரலில்...
மணமான புதிது... அப்போது மாமியார் வீட்டில் இருந்தேன்,
இரவு நேரம் வீட்டில், அறையில் எங்களைத் தவிர வேறு யாருமில்லை..எல்லோரும் கோவிலில் நாடகம் பார்க்க சென்றுவிட,
ஏதோ ... பூசையாம் தேங்காய் உடைத்து வைத்திருந்தார்கள், ஓடுகளை நீக்கி, அதனை குவியலாக மேசைமீது வைத்திருந்தனர். மணமான புதுசு அந்த வயதுக்கே உரிய சேட்டைகள் எனக்குள் இருக்க, நான் சிறிய ‘ஓடு’ ஒன்றை எடுத்து ஏதோ வேலையாயிருந்த மனைவி அமுதா மீது வீச... அவள் என் பக்கமாகத் திரும்பினாள் அந்த நேரம் மின்சாரம் போனது எங்கும் இருள்....ஆ... என்று அலரும் சத்தம் அமுதாவின் குரல்தான் இதற்குள் மின்சாரமும் வந்துவிட வெளிச்சத்தில் அவள் முகம் முழுவதும் இரத்தம் கொட்டியது. நான் பதறியபடி... என்னம்மா அம்முக்குட்டி! என்னாச்சு?
தெரியலைங்க, எதோகண்ணுல... கூர்மையா விழுந்தது போல தெரியுதுங்க...
நான் புரிந்து கொண்டேன், நான் போட்ட தேங்காய் ஓட்டின் ‘சில்லு’ தான் அவள் கண்னில் பட்டு கிழித்திருக்குமோ? நான் வேகமாக அருகில் கிடந்த துணியால் இரத்தத்தை துடைக்க இரத்தம் நின்றபாடில்லை. நன் உடனே அவளை அழைத்துக் கொண்டு குடும்ப மருத்துவரிடம் ஓடினேன்.
அவர் முதல் உதவி சிகிச்சை செய்து வழிந்த இரத்ததை நிறுத்தினார். நான் அவரிடமும் உண்மையைச் சொல்லவில்லை. மனைவி அமுதாவிற்கே நான் செய்த தவறுத் தெரியாது. மருத்துவர் ‘பயப்படத் தேவையில்லை’ என நம்பிக்கை ஊட்டினார்.
ஆறு மாதாமாகியது அமுதாவிற்கு அந்தக் கண்ணில் பார்வை மங்கத் தொடங்கியது. நாங்கள் கண் மருத்துவரிடம் சென்றோம். பலனில்லை மங்கியப் பார்வைத் திரும்பவே இல்லை. மாதங்கள் பல உருண்டன இப்போது அவளுக்கு ஒருக் கண்ணில் பார்வையே இல்லாமல் போனது.
நான் மனதுக்குள் என்னையே திட்டிக்கொண்டேன் நான் ‘பாவி’ அன்றே உண்மையை சொல்லியிருந்தால்....இப்படி பலவாறாக மனதுக்குள் அழுதேன்.
ஒருக் கண்ணோட வாழ்ந்து பழக்கப்பட்ட அவளுக்கு மறு கண்ணும் பார்வை மங்கத் நொடங்க நான் பக்கத்து நகரில் உயர் மருத்துவமனையை நாடினேன் அந்த தலைமை மருத்துவரிடம் ‘அந்த’ உண்மையைச் சொன்னேன், “அவர் பயப்பட வேண்டாம். உங்கள் நல்லநேரம்... என் வெளிநாட்டு நண்பர் டாக்டர்.சாமுவேல் இந்தியா வந்துள்ளார் டெல்லியில் உள்ள மந்திரியின் மகளுக்கு கண் சிகிச்சை செய்ய வந்தவர் அதனை முடித்துவிட்டு போக நினைத்த நிலையில் உங்கள் பிரச்சினையை சொன்னேன் அவரும் வருகிறேன் எனறார்” என நம்பிக்கையான வார்த்தையை சொன்னார்.
இரண்டு நாளில் அவரும் வந்து பார்த்து இரண்டு கண்களிலும் பர்வை பழையபடி வரவழைக்கலாம் என்றார். “...
‘’அய்யா கொஞ்சம் எழுந்தீங்கன்னா இந்த இருக்கையை துடைச்சிடுவேன்’’ பனிவான ஆயாவின் குரலால் சிந்தனையில் இருந்து நிகழ் காலத்திற்குக்கு வந்து சுற்றுமுற்றும் பார்த்தேன் அந்தப் பெண்களை காணவில்லை...பழைய சிந்தனைகளில் இருந்து விடுபட்டு எழுந்தேன்.
மறுநாள்...
மருத்துவர் சொன்னபடி கணக்கை சரிசெய்து விட்டு வீட்டுக்குப் புறப்பட்டனர் 15 நாள் கழித்து மருத்துவ மனைக்குச் சென்று வந்தார்கள்.
இப்படியே சில மாதங்கள் சென்றன... இப்போது அமுதாவிற்கு பார்வை வந்துவிட்டது. அவள் மகிழ்வாக இருக்கிறாள். அவனும் “அந்த” உண்மையைச் சொல்லிட சூழ்நிலையை ஏதிர்பார்த்து காத்திருக்கிறான்....