04 Nov 2020 10:50 pmFeatured
கவிமாமணி இரஜகை நிலவனின் நூல்கள் வெளியீடு
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பில் மன்றத்தின் துணைத்தலைவர் கவிமாமணி இரஜகை நிலவன் எழுதிய மின் நூல்களின் வெளியீட்டு விழா வருகிற 08-11-2020 ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணியளவில் சூம் செயலி வழியாக நடைபெறவுள்ளது.
தமிழக அரசின் பாரதியார் விருதாளர் பாவரசு பாரதி சுகுமாரன் சிறப்புரை ஆற்றவுள்ள நிகழ்வினை தமிழ் எழுத்தாளர் மன்ற ஆலோசகர் கருவூர் இரா.பழனிச்சாமி தலைமையேற்று நடத்தித்தரவுள்ளார்.
மன்ற ஆலோசகர் பாவலர் ஞாயிறு இராமசாமி தொடக்கவுரை ஆற்ற மன்றப் பட்டிமன்றப் பேச்சாளர் செல்வி இராஜ் வரவேற்புரையாற்றுகிறார்.
மன்றத்தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் அறிமுகவுரையும் நூலாசிரியர் இரஜகை நிலவன் ஏற்புரையும் ஆற்றவுள்ளார்கள். மன்றப் பொருளாளர் அ.இரவிச்சந்திரன் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுறவுள்ளது.
சூம் செயலி வழியாக நடைபெறவுள்ள இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் நூலாசிரியரின் இரண்டு புதினங்கள் மற்றும் இரண்டு கவிதைத் தொகுப்புகளான நான்கு மின் நூல்களையும் சிறந்த இலக்கியவாதிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
மன்றக் கவிஞர் பாபு சசிதரன் - சிவந்த மேகங்கள் மற்றும் இலக்கியச்சோலை ஆசிரியர் கவிஞர் சோலை தமிழினியன் - ஆகாயத்தில் என்ற இரு புதினங்களை ஆய்வு செய்யவுள்ளார்கள்.
முனைவர் புலவர் இர.பாபு இராசன் தாஸ் - புல்லின் மகுடம் மற்றும் ஜீவா காசிநாதன் - விண்மீன்களின் விண்ணேற்றங்கள் ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் ஆய்வு செய்ய உள்ளார்கள். மன்றத்தின் அனைத்து நிர்வாகிகள் புரவலர்கள் ஆலோசகர்கள், அங்கத்தினர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்பைச் சார்ந்தவர்களும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
அனைத்துத் தமிழன்பர்களும் இதில் பங்கேற்று விழாவைச் சிறப்பிக்கும் படி மன்றச் செயலாளர் அமலா ஸ்டேன்லி கேட்டுக் கொள்கின்றார்.
நிகழ்வில் கலந்துகொள்ள
Meeting ID: 882 0817 8555 Passcode: 123456
அல்லது
https://us05web.zoom.us/j/88208178555?pwd=WE5sOHc0dzJIbUpYdDJSeHRzR3E0dz09
Passcode: 123456