16 Nov 2020 2:29 pmFeatured
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று வெளியிட்டார்.
2021 சட்டப்பேரவை தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலை இறுதி செய்யும் விதமாக தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தமிழக மொத்த வாக்காளர்கள் 6.10,44,358 வாக்காளர்கள் ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 3.01,12,370 கோடி ஆகும். பெண் வாக்காளர்கள் 3.09,25,603 கோடி ஆகும். மாற்றுப் பாலின வாக்காளர்கள் 6,385 ஆகும். இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்களுடைய பெயர் விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம்.
தமிழகத்தில் பெரிய சட்டப்பேரவை தொகுதி சோழிங்க நல்லூர் ஆகும் இங்கு 6.55,366 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். சிறிய தொகுதி கீழ்வேலூர் ஆகும் இங்கு 1.73,107 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மாநில அளவில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் அதே வேளையில் தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் தனித்தனியாக மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள். சென்னையில் மாநகராட்சி ஆணையர் தேர்தல் அதிகாரியாக செயல்படுவதால் அவர் வெளியிடுவார்.
பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து மாற்றங்களையும் க்க விரும்புபவர்கள், ஆட்சேபனை தெரிவிப்பவர்களுக்கு திருத்தம் மேற்கொள்ள இன்று (நவ.16) முதல் டிச. 15-ந்தேதி வரை 30 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் பெயர் சேர்க்க, நீக்க விரும்புபவர்கள், திருத்தம் செய்ய விரும்புபவர்கள், இடமாற்றம் செய்ய விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம்.
விண்ணப்பங்களை வாக்குச்சாவடி அதிகாரி அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது உதவி அதிகாரியிடம், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் அனைத்து வேலை நாட்களிலும் அளிக்கலாம்.
வருகிற 21, 22-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 12 மற்றும் 13-ந்தேதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் சிறப்பு முகாம்களில் உள்ள வாக்குச்சாவடி அதிகாரியிடமும் விண்ணப்பங்களை வழங்கலாம். இவ்வாறு கொடுக்கப்படும் விண்ணப்பத்துடன் வயது, முகவரி ஆகியவற்றை உறுதி செய்யும் சான்றிதழ்களும் இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.
இவ்வாறு பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்காக அளிக்கப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் ஜனவரி மாதம் 5-ம் தேதியன்று இறுதி செய்யப்பட்டு ஜனவரி 15-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வாய்ப்புள்ளது.
மாவட்ட வாரியாக வாக்களார் வரைவு பட்டியலில் 80 வயதுக்கு மேற்பட்டோர்
திருவள்ளூரில் 57,982, சென்னையில் 112,344, காஞ்சிபுரத்தில் 27, 324, வேலூரில் 25,639, கிருஷ்ணகிரியில் 30,590, தருமபுரியில் 26,266, திருவண்ணாமலையில் 52,239, விழுப்புரத்தில் 35,561, சேலத்தில் 71,220, நாமக்கலில் 39,807, ஈரோட்டில் 52,573, நீலகிரியில் 8557, கோவையில் 68,835, திண்டுக்கலில் 38,039, கரூரில் 20,301, திருச்சியில் 54,611, பெரம்பலூரில் 11,803, கடலூரில் 41,477, நாகையில் 28,683, திருவாரூரில் 20,547, தஞ்சையில் 49,288, புதுக்கோட்டையில் 28,214, சிவகங்கையில் 32,085, மதுரையில் 47,416, தேனியில் 25,352, விருதுநகரில் 30,497, ராமநாதபுரத்தில் 23,001, தூத்துக்குடியில் 32,735, கன்னியாகுமரியில் 29,320, திருநெல்வேலியில் 38,188 அரியலூரில் 11,742, திருப்பூரில் 66,390, கள்ளக்குறிச்சியில் 18,338, தென்காசியில் 31,217, செங்கல்பட்டில் 50,696, திருப்பத்தூரில் 15,902, ராணிப்பேட்டையில் 20,419 வாக்களார்கள் புதிதாக சேர்ந்து மொத்தமாக 13,75,198-யாக உள்ளனர்.
மாவட்ட வாரியாக வாக்களார் வரைவு பட்டியலில் 18 வயதுக்கு மேற்பட்டோர்
திருவள்ளூரில் 11,464, சென்னையில் 14,073, காஞ்சிபுரத்தில் 4,931, வேலூரில் 5694, கிருஷ்ணகிரியில் 5213, தருமபுரியில் 4,608, திருவண்ணாமலையில் 5,151, விழுப்புரத்தில் 3,621, சேலத்தில் 9,166, நாமக்கலில் 33,80, ஈரோட்டில் 82,32, நீலகிரியில் 2,317, கோவையில் 15,165, திண்டுக்கலில் 58,48, கரூரில் 2,914, திருச்சியில் 64,48, பெரம்பலூரில் 15,14, கடலூரில் 74,86, நாகையில் 3,922, திருவாரூரில் 3,714, தஞ்சையில் 49,25, புதுக்கோட்டையில் 3,122, சிவகங்கையில் 3,562, மதுரையில் 12,501, தேனியில் 3,123, விருதுநகரில் 4,186, ராமநாதபுரத்தில் 7,671, தூத்துக்குடியில் 3,518, திருநெல்வேலியில் 5,008 கன்னியாகுமரியில் 3,599, அரியலூரில் 1,022, திருப்பூரில் 7,822, கள்ளக்குறிச்சியில் 2,706, தென்காசியில் 3,434, செங்கல்பட்டில் 9,414, திருப்பத்தூரில் 4,255, ராணிப்பேட்டையில் 3,614 வாக்களார்கள் புதிதாக சேர்ந்து மொத்தமாக 2,08,413-யாக உள்ளனர்.