Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

இன்று மாலை “சலாம் பாம்பே-2” மும்பை டைரிக் குறிப்புகள் நிகழ்ச்சி

27 Nov 2020 10:02 amFeatured Posted by: Sadanandan

You already voted!

உரத்த சிந்தனை, மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் மற்றும் டெக்னோ ப்ராடக்ட்ஸ் இணைந்து நடத்துகிறது

உரத்த சிந்தனை, மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் மற்றும் டெக்னோ ப்ராடக்ட்ஸ் இணைந்து நடத்தும் “சலாம் பாம்பே” 2 மும்பை டைரிக் குறிப்புகள் என்ற நிகழ்ச்சி இன்று (27-11-2020) வெள்ளிக்கிழமை இரவு 6.50 மணிமுதல் 8.30 மணி வரை ஜூம் செயலி வாயிலாக நடைபெறுகிறது.

கருத்தரங்க பேச்சாளர் சுந்தரி வெங்கட் வரவேற்புரையாற்ற, மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் வதிலை பிரதாபன் அறிமுக உரையுடன் தொடங்கும் இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் முரளி கணேஷ் (டெக்னோ புரொடக்ட்ஸ்) வாழ்த்துரை வழங்குகிறார்

இந்நிகழ்வில் சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டு தலங்கள், திருவிழாக்கள், தமிழ் அமைப்புகள் போன்றவற்றை பற்றி உரையாற்ற உள்ளனர்.

மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் பட்டிமன்ற பேச்சாளர்கள் இராணி சித்ரா சுற்றுலாத் தலங்களை பற்றியும், புவனா வெங்கட் வழிபாட்டு தலங்களைப்பற்றியும், கி. வேங்கடராமன் திருவிழாக்களைப்பற்றியும், பிரவீனா சேகர் தமிழ் அமைப்புகளைப் பற்றியும் உரையாற்றுகின்றனர். உரத்த சிந்தனை சங்கத் துணைத்தலைவர் பத்மினி பட்டாபிராமன் நெறியாள்கையை கையாள்கிறார். நிறைவில் பட்டிமன்ற பேச்சாளர் செல்வி ராஜ் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்கிறார்.

ஏற்கனவே நடைபெற்ற மும்பை டைரி நிகழ்ச்சி சிறப்பான வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக மும்பை டைரி 2 என்ற தலைப்பில் அதே துணைத் தலைப்புகளில் முதலில் பேசிய அதே நான்கு உரையாளர்களும் கலந்து கொண்டு இன்னமும் மிதமுள்ள தமிழ் அமைப்புகள் பற்றியும் சுற்றுலாத்தலங்கள், வழிபாட்டுத்தலங்கள், திருவிழாக்கள் பற்றியும்
எடுத்துரைக்கவுள்ளனர்

ஜெரிமெரி தமிழ்ச்சங்கம், அணுசக்திநகர் கலை மன்றம், கல்யான் தமிழ் நற்பணி மன்றம், மலாடு தமிழர் நலச்சங்கம், பன்வேல் தமிழ்ச்சங்கம், கார்க்கர் தமிழ்ச் சங்கம்  தமிழ் அமைப்புகள் பற்றிய விபரங்கள் மற்றும்  சண்முகானந்தா கலை அரங்கத்தின் சிறப்பும் சொல்லப்படவுள்ளது.

நாம் மும்பையில் இருந்தாலும் இதுவரை நாமே அறியாத பலவற்றைப் பற்றி உரையாற்றவுள்ளார்கள். அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அனைவரின் சார்பில் தமிழ் எழுத்தாளர் மன்றம் அன்புடன் அழைக்கிறது

நிகழ்வில் கலந்துகொள்ள

https://us02web.zoom.us/j/86442252643?pwd=bk5TKzcvQ0VkcmgzeTY3dFY1a0xhUT09

அல்லது

Meeting ID: 864 4225 2643
Passcode: 037132

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096561
Users Today : 7
Total Users : 96561
Views Today : 14
Total views : 416712
Who's Online : 0
Your IP Address : 52.14.110.171

Archives (முந்தைய செய்திகள்)