28 Dec 2020 4:36 amFeatured
வருகிற 29-12-2020 செவ்வாய்க்கிழமை மாலை 7 மணியளவில் உரத்த சிந்தனை எழுத்தாளர்கள் சங்கமும் மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றமும் இணைந்து இணையம் வழியாக சூம் செயலி மூலமாக பாரதியார் பிறந்த நாள் நிகழ்வினை பாரதி உலா என்ற பெயரில் நடத்துகிறார்கள்.
தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் ஆலோசகர் எஸ். இராமதாஸ் தலைமையில் நடைபெறவுள்ள கருத்தரங்க நிகழ்வில் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் பேச்சாளர்கள் இணைந்து
"பன்முகக் கவி பாரதி" என்ற தலைப்பில்
பாரதி ஒரு ….
தேசிய கவிஞர் என்று திருமதி.சுந்தரி வெங்கட்
காதல் கவிஞர் என்று திரு.அரியக்குடி மெய்யப்பன்
தெய்வீகக் கவிஞர் என்று கவிச்செம்மல் ஆரோக்கிய செல்வி, புரட்சிக் கவிஞர் என்று திருமதி. செல்வி இராஜ் மற்றும் தொலைநோக்கு கவிஞர் என்று கவிஞர் விஜி வெங்கட் ஆகியோர் உரையாற்றும் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக கலைமாமணி நடிகர் டெல்லி கணேஷ் சிறப்புரை ஆற்றவுள்ளார். இந்த நிகழ்ச்சியை உரத்த சிந்தனைத் துணைத்தலைவர் பத்மினி பட்டாபிராமன் நெறியாள்கை செய்யவுள்ளார்.
உரத்த சிந்தனை சங்கத்தின் தலைவர் எஸ்.வி.இராஜசேகர், பொதுச் செயலாளர் உதயம்ராம் மற்றும் மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் புரவலர்கள், ஆலோசகர்கள் ஆகியோர்கள் முன்னிலை வகிக்கின்றார்கள்.
எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் வரவேற்புரையும் உரத்தசிந்தனை சங்கத்தின்
மக்கள் தொடர்பாளர் மணோன்மணி தொடக்கவுரையும் ஆற்றுகிறார்கள். முன்னதாக தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் கலைப்பிரிவு சார்ந்த டி.எம்.எஸ்.நரசிம்மன் மற்றும் சாய் முரளி ஆகியோர் பாரதி பாடல்கள் பாடியவுடன் நிகழ்வு தொடங்குகிறது. இறுதியில் உரத்த சிந்தனையின் ஹைதராபாத் கிளையிலிருந்து ப.கோபாலன் நன்றியுரையுடன் விழா நிறைவுறுகிறது.
மகாகவியின் சிறப்புகளை அறிந்து இன்புறும்படி இரண்டு அமைப்பு நிர்வாகிகளும் அழைக்கின்றார்கள்.