16 Jan 2021 3:25 pmFeatured
திருவள்ளுவர் நாளை முன்னிட்டு , மும்பை இலக்கியக் கூடத்தின் சார்பாக எழுத்தாளர் கருவூர்.இரா.பழனிச்சாமி அவர்கள் தொகுத்த திருக்குறள் மும்மொழி நூல் வெளியீட்டு விழா திருவள்ளுவர் ஆண்டு 2052 , தைத்திங்கள் இரண்டாம் நாள் 15.01.2021 வெள்ளிக் கிழமை காலை 11.30 மணியளவில் பாண்டுப், பிரைட் ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
தமிழ் , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் (தமிழ் ஒலிப்பில், ஆங்கில எழுத்தில்) திருக்குறளும்; தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தெளிவுரையும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. கருவூர் இரா.பழனிச்சாமி அவர்களால் தொகுக்கப்பட்டு, தமிழ் காஞ்சனை (மும்பை) பதிப்பில் மும்பை இலக்கியக் கூடத்தின் வெளியீடாக இந்நூல் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக , மும்பைத் திருவள்ளுவர் மன்றத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு எழுத்தாளர் கருவூர். இரா.பழனிச்சாமி அவர்கள் மாலை அணிவிக்க விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
திருக்குறள் மும்மொழி நூல் வெளியீட்டு விழாவில் மும்பை இலக்கியக் கூடத்தின் ஒருங்கிணைப்பாளர் இறை.ச.இராசேந்திரன் அவர்கள் வரவேற்புரை ஆற்ற, ஜெரிமெரி தமிழ்ச் சங்கத் தலைவர் பொன்.வெங்கடாசலம் தலைமை தாங்கினார். ஆலோசகர் எஸ்.வின்சென்ட் பால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பம்பாய்த் திருவள்ளுவர் மன்றம் செயலாளர் ஜேம்ஸ் தேவதாசன் அவர்கள் முதல் நூலை வெளியிட, மும்பை மாநகர தி.மு.க அவைத் தலைவர் வே.ம.உத்தமன் அவர்களும்; ஜெரிமெரி தமிழ்ச் சங்கத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர் கோ. சீனிவாசகம் அவர்கள் இரண்டாம் நூலை வெளியிட, மராத்திய மாநில ஆதித் தமிழர் பேரவைச் செயலாளர் வி.பி.அண்ணாதுரை அவர்களும்; மும்பைத் திருவள்ளுவர் மன்றம் அறங்காவலர் ஜஸ்டின் ஜேம்ஸ் அவர்கள் மூன்றாம் நூலை வெளியிட அபூர்வா கெமிக்கல்ஸ் உரிமையாளர் சண்முக சுந்தரி அவர்களும் பெற்றுக் கொண்டனர்.
மும்பை மாநில தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார், பிரைட் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் செலின் ஜேக்கப் கரூர், வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி தாளாளர் க.செங்குட்டுவன், மனோகர் சண்முகம் , மலாட் தமிழர் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் லெ.பாஸ்கரன், மும்பை அருந்ததியர் சங்க பொறுப்பாளர் எஸ்.நடேசன், மேனாள் செயலாளர் கணேஷ் வெள்ளியங்கிரி, கணேஷ் நடேசன், பத்லாபூர் தமிழர் நலச் சங்கத்தின் துணைத் தலைவர் எஸ்.அருணாசலம், ஆலோசகர் எஸ்.கோவிந்தராஜு, மும்பை புறநகர் தி.மு.க பீவண்டி கிளை செயலாளர் மெகபூப் பாட்சா, சீத்தா கேம்ப் வி.பி.கோவிந்தசாமி ஆகியோர் நூலாசியரிடமிருந்து நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.
இலெமுரியா அறக்கட்டளை தலைவர் சு.குமணராசன், எழுத்தாளர் சமூக செயற்பாட்டாளர் கவிஞர் புதிய மாதவி, ஆதிதிராவிட மகாசன சங்கத்தின் மேனாள் தலைவர் கே.வி.அசோக்குமார், மும்பைத் திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன், பல்லவா தமிழ்ச் சங்கப் பொருளாளர் முனைவர் எம்.சிதம்பரம், கார்கர் தமிழ்ச் சங்கச் செயலாளர் செல்வி ராஜ், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் மராத்திய மாநில தமிழ்ச் சங்கச் செயலாளர் இராஜா இளங்கோ, ஜெரிமெரி தமிழ்ச் சங்க நிர்வாகிகள் மாணிக்கம், இராஜேந்திரன், ஏ.சி.காதர், சுப்பையா, மலாட் தமிழ்ச் சங்கச் செயலாளர் முத்தப்பா, தமிழறம் இணையதள ஆசிரியர் இராமர், மும்பை புறநகர் திமுக முலுண்ட் கிளைச் செயலாளர் சு.பெருமாள், வாஷி கிளைச் செயலாளர் ச.பழனி, தமிழ் எழுத்தாளர் மன்ற துணைச் செயலாளர் பொற்செல்வி கருணாநிதி , தோ.செ.கருணாநிதி, அ.அகஸ்டின், டி.மோகன்ராஜ், ம.செல்வராஜ், சி.பி.பாலாஜி, ஜெபர்சன், எம்.இராஜன், பூமாரி, உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
விழா முடிவில் நூலாசிரியர் கருவூர்.இரா.பழனிச்சாமி அவர்கள் ஏற்புரை நிகழ்த்த, மும்பை இலக்கியக் கூடத்தின் ஒருங்கிணைப்பாளர் வ.இரா. தமிழ்நேசன் நன்றியுரை ஆற்றினார்.