21 Apr 2019 12:46 pmFeatured
இன்று ஈஸ்டர் திருநாளுக்காக தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்த நேரத்தில் இந்த குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர்கொழும்பு கத்துவப்பட்டியா செபஸ்த்தியார் தேவாலயம், சங்கரி லா ஹோட்டல் மற்றும் சின்னமன் கிராண்ட் ஹோட்டல் மற்றும் மட்டக்களப்பு பகுதியில் உள்ள ஒரு தேவாலயம் உட்பட மொத்தம் ஆறு இடங்களில் தொடர்குண்டு வெடிப்பு நடந்துள்ளது
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். முக்கிய திருநாளில் இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளதால், இலங்கை நாடே பதற்றத்தில் உள்ளது.
குண்டுவெடிப்புக்கான காரணம் என்ன
என்பது குறித்தும், யார் இந்த சம்பவத்தை அரங்கேற்றினார்கள் என்பது குறித்தும் தகவல்கள்
வெளியாக வில்லை. இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
2009ம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப்
போருக்கு பின்னர் நடைபெற்றுள்ள
மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும். தேவாலயங்களில், குறிப்பாக தலைநகரில் இதற்கு முன்பு
வரை இது போன்ற வெடி குண்டு தாக்குதல் நடைபெற்றதில்லை என்று கூறப்படுகிறது.
அந்நாட்டின் பாதுகாப்பு படையினர், தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க உதவி வருவதோடு மக்களை பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கொழும்புவில் வசிக்கும் இந்தியர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ள உதவி எண்கள் அறிவிப்பு
இலங்கையில் இன்று நடைபெற்ற தாக்குதல் குறித்தும், உங்கள் உறவினர்கள் குறித்த உடனடியான தகவல்களைப் பெற இந்த எண்களை தொடர்பு கொள்ளவும் என்று இந்திய ஹை கமிஷன் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளம் எண்களை அறிவித்துள்ளது. (+94777902082 +94772234176)