Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பில் பட்டிமன்றம்

11 Feb 2021 1:18 amFeatured Posted by: Sadanandan

You already voted!

பொங்கல் திருநாள் பட்டிமன்றம் மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் நடத்துகிறது

மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பில் பொங்கல் திருநாள் பட்டிமன்றம் வருகிற 13-02-2021 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் இணையம் வழியாக நடைபெற உள்ளது.

மன்றத்தின் புரவலரும் 'எமிரேட்ஸ் என்பிடி வங்கியின்'(இந்தியா) தலைமை செயல் அதிகாரியுமான சேதுராமன் சாத்தப்பன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் மன்றத் துணைத்தலைவர் கவிமாமணி இரஜகை நிலவன் வரவேற்புரை ஆற்றுகிறார்.

இராணி மேரிக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முத்தமிழ் முரசு முனைவர் கே.இரா.கமலா முருகன்  நடுவராக இருந்து நடத்தித்தரவுள்ள "ஏர்முனைப் பாடல்களில் விஞ்சி நிற்பவர்"  என்ற தலைப்பில் நிகழவுள்ள பட்டிமன்றத்தில் கவியரசு கண்ணதாசனா! மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமா! திரைக்கவித் திலகம் மருதகாசியா! என்ற துணைத் தலைப்புகளில் அணிக்கு இருவரென அறுவர் உரையாற்ற உள்ளார்கள்.

கவியரசு கண்ணதாசனே

கவியரசு கண்ணதாசனே! என்ற அணியில் இந்துக்கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஈஸ்வரி தலைமையில் மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் கலைப்பிரிவைச் சேர்ந்த பாடகி ராணி சித்ராவும்

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமே

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமே!  என்ற அணியில் வள்ளியம்மாள் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் ஆதிரா முல்லை தலைமையில் சமூக சேவகியும் ஆன்மிக சொற்பொழிவாளருமான கீதாஸ்ரீ யும்

திரைக்கவித்திலகம் மருதகாசியே

திரைக்கவித்திலகம் மருதகாசியே! என்ற அணியில் பல்வேறு தொலைக்காட்சி பட்டிமன்றங்களில் உரையாற்றிய  புவனா வெங்கட் தலைமையில் அனைத்திந்திய எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த கவிதாயினி சிவ சாந்தியும் உரையாற்றவுள்ளார்கள்.

நிர்வாகக் குழுத் துணைப் பொருளாளர் வெங்கட் சுப்ரமண்யன் நன்றியுரை ஆற்றுகிறார். ஆட்சிமன்றக் குழுவைச் சார்ந்த வே.சதானந்தன் மற்றும் நிர்வாகக் குழுத் துணைச் செயலாளர் தேவராசன் புலமாடன் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைக்கின்றனர்.

தமிழ்த்துறைப் பேராசிரியர்களும் கவிஞர்களும் பேச்சரங்க சாதனையாளர்களும் கலந்து கொண்டு உரையாற்றும் பட்டிமன்றத்தில் வேளாண்மை, மொழியின் தொன்மை, பண்பாடு, உழவு, கலை, பொழுதுபோக்கு என அனைத்து சிறப்புகளையும் வெளிக் கொணர்ந்து மொழிப்பற்றும் மொழியுணர்வும் ததும்பும் சிறப்புமிகு பட்டிமன்றத்தைக் காண அன்புடன் மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் அழைக்கிறது.

நிகழ்வில் கலந்துகொள்ள
Meeting ID: 857 9641 6708
Passcode: 223344
அல்லது கீழ்கண்ட இணைப்பில் சொடுக்கியோ கலந்துகொள்ளலாம்

https://us05web.zoom.us/j/85796416708?pwd=c1NRZWhDVGFPZjA5aWtrRzFYUHJ3dz09

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096540
Users Today : 1
Total Users : 96540
Views Today : 1
Total views : 416675
Who's Online : 1
Your IP Address : 3.147.51.75

Archives (முந்தைய செய்திகள்)