23 Feb 2021 6:18 pmFeatured
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்திய மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவ படிப்புகளான எம்.எஸ், எம்.டி பி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழங்க நீட் தேர்வு கட்டயாமாக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படியில் ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த போதிலும், நீட் தேர்வு ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் நீட் தேர்வுக்கான கட்டணத்தை உயர்த்தி தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, பட்டியலின பிரிவினருக்கான நீட் தேர்வு கட்டணம் முன்னர் ரூ.2,750 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.3,835 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு கட்டணம் ரூ. 3,750 இல் இருந்து, தற்போது ரூ.5,015 ஆக உயரத்தப்பட்டுளள்து. நீட் தேர்வுக்கான ஜிஎஸ்டி வரியாக பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.765 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக் கட்டணத்தை டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் மூலம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.