Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

கண் சிமிட்டும் வானவில் – 15

26 Mar 2021 12:32 amFeatured Posted by: Sadanandan

You already voted!

கவிஞர் இரஜகை நிலவனின்
தொடர்கதை
அத்தியாயம்-15

களக்காட்டில் நடந்த களேபரம்!

நெய்லி ரீமா ஹோட்டல் வந்த போது அங்கே ஒரு போலீஸ் பட்டாளமே காவல் இருந்தது.

முதலில் பயந்து போனவள் வரவேற்பில் அமர்ந்திருந்த பெண்ணிடம் "எதற்காக இத்தளை போலிஸ் கூட்டம்?"எள்று கேட்டாள்.

ஒ! அதுவா? நீங்களும் உங்களோடு இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களையும் கொரோனா டெஸ்ட் எடுக்க வைத்து உங்களை தனிமைப் படுத்த போகிறார்களாம்”

"ஓ! அப்படியா?நானும் என்னவோ ஏதோ என்று ப யந்து போனேன்" என்றாள்.

"வேறு எதற்காக பயந்தீர்கள்?" என்று கேட்டாள் வரவேற்பில் அமர்ந்திருந்த பெண்."ஒன்றுமில்லை"? என்று முகத்தை துடைத்துக் கொண்டு கூட வந்திருந்தவர்களிடம் விளக்கினாள்.

.".போச்சுடா. இனி 14 நாட்கள் கோரண்டைனா?"என்றவாறு தலையில் கை வைத்தான் ஒருவன்.

"வேறு வழியேயில்லையா?"என்று கேட்டான் இன்னொருவன்.

"ம்கூம் " என்றவாறு உதட்டைப்பிதுக்கினாள் நெய்லி.
காவல் துறையினர் எல்லா வழி முறைகளையும் செய்து விட்டு 14 நாட்களுக்கான விடுதித்தொகையையும் வாங்கிக்கொடுத்து விட்டு "இவர்கள் எங்கும் போகமலிருப்பதை கண்காணிப்பது உங்கள் கடமை"என்று அந்த விடுதியின் மேலாளருக்கு கட்டளையிட்டு விட்டுக் கிளம்பினர்.

"பதினான்கு நாட்கள்" ஆங்கிலத்தில் கிறீச்சிட்டான்" இன்னொருவன்…தலையில் கை வைத்து அடித்துக் கொண்டே…

"வேறு வழியில்லை " என்றவாறு கையை தூக்கினாள் நெய்லி

நெய்லி கைப் பேசியை எடுத்து நரேனை அழைத்தாள்.

நடந்ததையெல்லாம் விவரித்த போது "அப்பா…. கொஞ்சம் மூச்சு விட நேரம் கிடைத்திருக்கிறது" என்றான் நரேன் பெருமூச்சு விட்டவாறு.

"சும்மா ரிலாக்ஸ் பண்ணுறதை விட்டுட்டு என்ன செய்யணும்ணு யோசி. இவனுக சும்மா இருக்க மாட்டானு… வெரட்ட ஆம்பிச்சிருவானுவ”

"சரி. நீ எப்ப ஆஸ்பத்திரிக்கு வருகிறாய்"?

"நரேன் எனக்கும் சேர்த்து தான் கோரண்டைன்" (தனிமைப்படுத்துதல்) அதைத் தெரிஞ்சுக்கோ" கோபமாகக் கத்தினாள் நெய்லி

"ஓ. ஸாரி…… ஸாரி"……

உன் ஸாரியெல்லாம் குப்பையிலே தூக்கி போட்டுட்டு மொதல்ல அந்த ஆலகாலச் செடியைக் கொண்டாரப் பாரு"

"நெய்லி. நீயும் கூட என் நிலைய புரிஞ்சுக்கல்ல … சரி. கவிதா வந்தாளா? எதுவும் போன் வந்ததா? வசந்த் ஏதாச்சும் போன் பண்ணினா?"

"ம்ம்ம்… கவிதா போன் பண்ணினா… இங்கயே அவள் வந்தாள்ணா அவளையுயம் (தனிமைப்படுத்துதல்) கோரண்டைன்" ல 14 நாள் இங்கே உள்ள. வச்சுருவானுவ…அதனால அவள. அங்க ஆஸ்பத்திரிக்குத்தான் வரச்சொல்லியிருக்கேன்" நெய்லி சொல்லி முடிக்கு முன் வாசலில் நிழலாட திரும்பிப்பார்த்த நரேன் ஆங் கவிதா வந்தாச்சி அப்புறமா பேசறேன்” என்று கைப்பேசியை அணைத்து விட்டு, " வா கவிதா என்னா …என்ன செய்தி…..?
வசந்த் போன் பண்ணினா?" என்று கேட்டான்.

அவள் "இல்லை" என்று சொல்லி விட்டு அவன் படுக்கையின் அருகில் பெட்டியை வைத்து விட்டு, “வாஸ் ரூம் எங்க இருக்கு?”
என்றாள்.

அவன், கை காட்ட, “ அவள் போய் முகம் கழுவிக்கொண்டு வந்தாள். “ ரொம்ப அடியோ?” என்றாள் அவன் கைகளைத் தொட்டுப் பார்த்து.

“ஆமாம். எழும்பி நடக்கக் கூட முடியவில்லை. அது சரி..
வசந்திற்கு போன் பண்ணினாயா?… அவனுக்கு என்னாச்சு?”
என்றான் எழுந்து நொண்டிக்கொண்டே அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து, அவளையும் இன்னொரு நாற்காலியில்
அமரும்படி சைகை காட்டினான்.

“ நான் கேட்க வேண்டிய கேள்வியை எல்லோரும் என்னிடமே
கேட்கிறீர்கள். வசந்த் கூட பேசி நாலு நாளாச்சி. போனை எடுக்க
மாட்டெங்கிறார்ணு சொல்லித்தானே மெட்றாசிலிருந்து இங்கே வந்தேன்… “ அவள் முகத்தை துடைத்துக் கொண்டாள்.

“ உன் வருத்தம் புரிகிறது கவிதா. நானும் என்ன செய்ய என்று
புரியாமலிருக்கிறேண். என்னாலே நடக்க முடியாத சூழ் நிலை”
“ நரேன். உங்கள் நிலை எனக்கு புரிகிறது… ஆனால் வசந்த் நிலமை என்னாச்சி… ஏதாவது தீவிரமா நட்ந்திருக்குமோண்ணி….”
ஏறக்குறைய அழ ஆர்ம்பித்தாள்.

‘சே…சே… நீ நெனக்கிற மாதிரி எதுவும் நடந்திருக்காது.. எதற்கும் ஒன்று செய்வோம். நான் திரும்பவும் ரமணிக்கு போன் பண்ணுகிறேன். நீ சாவகாசமாக, நாங்கள் தங்கியிருந்த அறைக்குப் போய் பெட்டியை வைத்து விட்டு கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள். சாயங்காலம் ஒரு போலீஸ் கம்ப்ளெய்ண்டும் கொடுத்து விடலாம். எதற்கும் கவலைப் படாதே… சும்மா மனசை போட்டு அலட்டிக்காதே…. போ…போய் கொஞ்சம் ஓய்வு எடுத்து விட்டு வா.. அப்புறம் பேசலாம்” என்று அறையின் சாவிகளைக் கொடுத்து எவ்வாறு போக வேண்டுமென்று வழியும் சொல்லிக்
கொடுத்து, ஒரு ஆட்டோ காரனுக்கு போன் பண்ணினான்.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096544
Users Today : 5
Total Users : 96544
Views Today : 8
Total views : 416682
Who's Online : 0
Your IP Address : 18.117.141.69

Archives (முந்தைய செய்திகள்)