30 Mar 2021 12:33 amFeatured
வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக சேலம் முன்னாள் அதிமுக எம்எல்ஏ பரமசிவத்திற்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் குற்றவாளி என விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
1991ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியின்போது சின்ன சேலம் எம்.எல்.ஏ.வாக பரமசிவம் இருந்தார். இதற்கிடையே, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.
வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நீண்ட ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு மீண்டும் விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்தது. இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் வருமானத்துக்கும் அதிகமான சொத்து சேர்த்து மோசடி செய்திருப்பதை உறுதி செய்து நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், 1991 முதல் 95 வரை தனது பதவி காலத்தில் அவர் வாங்கியிருக்கும் அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்படுவதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் அபராத தொகையாக ரூ. 33 லட்சத்தையும் விதித்தது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் 8 நாட்களே உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், ஆளும் அதிமுக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ-வுக்கு சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது பொதுமக்கள் மற்றும் முதன்முறை வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Corruption aatchi agala adaripeer Udaya surian🌅🌅🌅