22 May 2021 1:27 pmFeatured
-சதாசிவம் பிரபாகர்,
நாகர்கோவில்
உன்
ஒவ்வொரு நகர்வுகளிலும்,
மெல்லியதாய் கேட்கும்
காடாற்றலின்,
முனுமுனுப்புகளிலும்.
நம் ஆத்மாவின்,
மர்மத் துக்கங்கள்
கடந்து போகும்.
அழிந்த மரத்தின்
ஆந்தைகளின் அழுகுரலும்,
கருப்பாய் படரும்
மரணக் கொடிகளும்,
அந்தக் கள்ளிச்செடியின்
விஷக் கனத்திடலும்,
ஊமத்தைக் கிருமியின்
பிறப்பியல் பிறழ்வும்.
உனது
தொழும் கரங்களுக்குள்,
மூச்சடைத்துபோகும்.
உன்மத்தச் சாவு.
விளங்கவில்லை,
வேரோடு சாய்த்தபோதும் ,
வீழ்ந்தும் வாழும்,
நம் ஜனனம்.
நிமிர்ந்தும் ,சாய்ந்தும்
துளிர்க்கும் நம் கிளைகளில்,
என்றுமிருக்கும்
பறவைக்கூடுகள்.
அந்த தூரத்து மலையின்
உச்சியில் விழுந்த,
வானவில் போல
பச்சையும் பலவித வண்ணங்களாய்…
வீழ்ந்தும் வாழும்,
பேரருள் உடைமை.
முற்றழியா உயிர்த்தூய்மை.