15 Oct 2021 2:51 amFeatured
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் - இந்தியா
வொரேயால் தமிழ்க்கலாச்சார மன்றம் - பிரான்ஸ், தமெரிக்கா தொலைக்காட்சி- அமெரிக்கா இணைந்து இணையம் வழியாக நடத்துகிறது.
வருகிற 17-10-2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் – இந்தியா, வொரேயால் தமிழ்க்கலாச்சார மன்றம் – பிரான்ஸ், தமெரிக்கா தொலைக்காட்சி- அமெரிக்கா ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து இணையம் வழியாக சிறப்புப் பட்டிமன்றம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றப் பொதுச் செயலாளர் கல்வியாளர் அமலா ஸ்டேன்லி தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில், பிரான்ஸ் வொரெயால் தமிழ்க் கலாச்சார மன்றத்தின் தலைவர் இலங்கை வேந்தன் வரவேற்புரை ஆற்றவுள்ளார்.
கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களில் பெரிதும் மிளிர்வது! கவிதை நயமா! வாழ்வியல் அனுபவமா! என்ற தலைப்பில் நடைபெறவுள்ள பட்டிமன்றத்தை கோயம்புத்தூர் கொங்கு நாடு கலை அறிவியல கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் பேராசிரியர் முனைவர் க.முருகேசன் நடுவராக தலைமையேற்று நடத்தித்தர உள்ளார்.
கவிதை நயமே! என்ற அணியில்
தமிழ் எழுத்தாளர் மன்றப் புரவலர் கவிஞர் அரியக்குடி மெய்யப்பன் மன்றத்தின் முன்னணிப் பேச்சாளர் கவிஞர் கா.பாபு சசிதரன், நிர்வாகக்குழுத் துணைப் பொருளாளர் வெங்கட் சுப்ரமண்யன் ஆகிய மூவர் உரையாற்றவுள்ளனர்.
வாழ்வியல் அனுபவமே! என்ற அணியில்
மன்றத்தின் முன்னணிப் பேச்சாளர் சொற்போர் திலகம் புவனா வெங்கட், பட்டிமன்றப் பேச்சாளர், கவிச்செம்மல் ஆரோக்கியசெல்வி, கருத்தரங்கப் பேச்சாளர், கவிஞர் பிரவினா சேகர் ஆகிய மூவரும் உரையாற்ற உள்ளார்கள்.
சென்னை - பம்மல் கண்ணதாசன் தமிழ்ச்சங்க நிறுவனத் தலைவர் கவிஞர் காவிரி மைந்தன் மற்றும் தமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனத் தலைவர் மகேஷ் நாட்டாண்மை ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளார்கள்.
நிகழ்ச்சியை மன்றத்தின் கருத்தரங்கப் பேச்சாளர் நற்றமிழ் நாவலர் செல்வி ராஜ் தொகுத்து வழங்குகிறார். வெரெயால் தமிழ்க் கலாச்சார மன்றத்தின் இணைச்செயலாளர் கௌதம் துரைராஜ் நன்றியுரை ஆற்றுகிறார்.
அனைத்துத் தமிழ் அமைப்பினரும் நிகழ்வில் கலந்து மகிழ உள்ளார்கள். இணையம் வழியாக நடைபெறவுள்ள நிகழ்வினை தமெரிக்காத் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்ப உள்ளது. வொரெயால் தமிழ்க்கலாச்சார மன்ற முகநூல் பக்கத்திலும் ஒலிபரப்பப்பட உள்ளது.
நிகழ்விற்கான ஒருங்கிணைப்பு வேலைகளை மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்ற நிர்வாகக் குழுச் செயலாளர் வே.சதானந்தன் மற்றும் துணைச் செயலாளர் தேவராசன் புலமாடன் ஆகியோர் செய்கின்றனர்.
உலகெங்கும் இருக்கும் தமிழன்பர்களும் கவியரசரின் மேல் அன்புள்ளம் கொண்ட ரசிகப் பெருமக்களும் நிகழ்வில் கலந்து மகிழும்படி மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் மற்றும் வொரெயால் தமிழ்க் கலாச்சார மன்றத்தின் செயலாளர் அலன் கிருஷ்ணராஜ் ஆகியோர் அமைப்புகளின் அனைத்து நிர்வாகிகளின் சார்பாக அழைத்து மகிழ்கின்றனர்.
ZOOM செயலியில் இணைய
https://us02web.zoom.us/j/8182876290
Zoom ID : 818 287 6290
Code secret : FRANCE
முகநூல் பக்கத்தில் தொடரலையாக பார்க்க