21 Jan 2022 10:09 amFeatured
அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம், தமெரிக்கத் தொலைக்காட்சி, மலேசிய சகோதரிகள் தமிழிசைக்குழு இணைந்து இணையம் வழியாக நடத்தும்
கலை இலக்கியப் பொங்கல் பெருவிழா
வருகிற 23-01-2022 ஞாயிறு மாலை இந்திய நேரம் 6 மணியளவில் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம், தமெரிக்கத் தொலைக்காட்சி,மலேசிய சகோதரிகள் தமிழிசைக்குழு ஆகிய அமைப்புகள் இணைந்து இணையம் வழியாக நடத்தவுள்ளன.
அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அவை முன்னவர் கலைமாமணி முனைவர் வாசுகி கண்ணப்பன் மொழி வாழ்த்துடன் தொடங்கவுள்ள நிகழ்வில் மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் நிர்வாகக்குழுச் செயலாளர் வே.சதானந்தன் வரவேற்புரையும் மன்றத்தின் பொதுச் செயலாளர் கல்வியாளர் அமலா ஸ்டேன்லி தொடக்கவுரையும் ஆற்றுகின்றார்கள்.
அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் முனைவர் கோ.பெரியண்ணன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் மலேசிய சகோதரிகளின் தமிழிசை நிகழ்ச்சியும் பொங்கல் கவியரங்கமும் பொங்கல் கருத்தரங்கமும் உள்ளடக்கிய கலை இலக்கிப் பொங்கல் பெருவிழா மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.
தமிழிசை நிகழ்ச்சி
பண்ணிசைமணி Dr.பண்பரசி கோவிந்தசாமி
இன்னிசைவாணி கனிமொழி கோவிந்தசாமி
சகோதரிகள் வழங்கும் தமிழிசைப் பாடல்கள்
பொங்கல் கவியரங்கம்
அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தைச் சார்ந்த நல்லாசிரியர் கோவி பழனி அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள பொல்லாங்கு தீரட்டும் பொங்கட்டும் பொங்கல் எனும் கவியரங்கில்
1)கவிஞர் முனைவர் ரத்னமாலா
2)கவிஞர் மா.உ.ஞான வடிவேல்
3)கவிஞர் முனைவர் உமாராணி
4)இசைக்கவி நல்ல அறிவழகன்
ஆகியோர் கவிதை பாடுகின்றார்கள்.
பொங்கல் கருத்தரங்கம்
செம்மொழி தமிழாய்வு மைய நிறுவனத்தின் மேலாண்மைக்குழு உறுப்பினரும் சாகித்ய அகாடமியின்
மேனாள் உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் இராம குருநாதன் தலைமையில்
"உழவுக்கு வந்தனை செய்வோம்" என்ற தலைப்பில்
1)கவிமாமணி இரஜகை நிலவன்
2)கவிச்செம்மல் ஆரோக்யசெல்வி
3)பேராசிரியர் முனைவர் ச.பிரியா
4)உரைத்தென்றல் கி.வேங்கட்ராமன்
ஆகியோர் கலந்து கொள்ளும் கருத்தரங்கமும் நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் முனைவர் இதயகீதம் இராமாநுசம் மற்றும் தமெரிக்காத் தொலைக்காட்சி நிறுவனர் மகேஷ் நாட்டாண்மை ஆகியோர் வாழ்த்துரைக்குப் பின்னர் தமெரிக்கத் தொலைக்காட்சியின் இந்தியப் பிரதிநிதி வீ.காந்தி லெனின் நன்றியுரை ஆற்றவுள்ளார்.
நிகழ்வினை மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் முன்னணிப் பேச்சாளர் நற்றமிழ் நாவலர் செல்வி ராஜ் நெறியாள்கை செய்கின்றார்.
உலகெங்கிலுமிருந்து அனைத்துத் தமிழுணர்வாளர்களும் நிகழ்வில் கலந்து மகிழும்படி நான்கு அமைப்புகளின் தலைவர்கள் முனைவர் கோ.பெரியண்ணன், முனைவர் வதிலை பிரதாபன், பொறியாளர் மகேஷ் நாட்டாண்மை, இசைக்கலைஞர் சரோஜினி கோவிந்தசாமி ஆகியோர் அழைத்து மகிழ்கின்றனர்.