Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

பேரறிஞர் அண்ணாவின் 53 ஆவது நினைவேந்தல் – அலிசேக் மீரான் அறிக்கை

01 Feb 2022 8:53 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

மும்பை புறநகர் மாநிலத் திராவிடர் முன்னேற்றக் கழகம் சார்பாக இணைய வழியில் தென்னாட்டுப் பெர்னாட்ஷா, இலக்கியப் பேராசான், சமூக நீதி போற்றிய பேரறிஞர் அண்ணாவின் நினைவேந்தல் நிகழ்வு வருகிற 03-02-2022 வியாழக்கிழமை அன்று உலகெங்கும் உள்ள இயக்கம் மற்றும் இலக்கியம் சார்ந்த ஆர்வலர்களால் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

உலகெங்கும் வாழும் தமிழுறவுகளின் மனங்களில் எல்லாம் மறைந்தும் நீங்காத இடம்பிடித்து அரசியல் களத்தில் பண்பும் பரிவும் ஒழுங்கமைதியும் கொண்டு மொழிக்கும் தமிழினத்திற்கும் பெருமை சேர்த்த பேரறிஞருக்கு மும்பை வாழ் தமிழர்கள் குறிப்பாக மும்பை புறநகர் மாநிலத் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த பல்வேறு கிளைக்கழக நிர்வாகிகளும் உறுப்பினர்களும் பொதுமக்களும் ஆங்காங்கே இருக்கின்ற கிளைகளிலே நிகழ்வுகளை நடத்தி அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும்படி மாநில செயலாளர் அலிசேக் மீரான் கேட்டுக்கொண்டுள்ளார்

அவரது அறிக்கையின்படி பாண்டூப் கிளைக் கழகம் சார்பாக நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வில் மும்பை புறநகர் தி மு. கழகத்தின் அவைத்தலைவர் ஜேம்ஸ் தேவதாசன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் மாநிலச் செயலாளர் அலிசேக் மீரான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த உள்ளார்.

கல்யாண் கிளைக் கழகம் சார்பாக நடைபெறவுள்ள நிகழ்வை துணைச் செயலாளர் வதிலை பிரதாபன் தலைமையேற்று நடத்தவுள்ளார். ஜெரிமெரி கிளைக் கழகம் சார்பாக நடக்கவுள்ள நிகழ்வினை துணைச் செயலாளர் அ.இளங்கோ தலைமையேற்று நடத்துகிறார்.

கொரெகாவ் கிளை சார்பில் நடைபெறவுள்ள நிகழ்வை இலக்கிய அணிப் புரவலர் சோ.பா.குமரேசனும், ஜோகேஸ்வரி கிளைக்கழகம் சார்பில் அவைத்தலைவர் ரமேஷ், டொம்பிவிலி கிளை செயலாளர் வீரை சோ.பாபு,  பீவண்டி கிளை செயலாளர் மேஹ்பூப் பாஷா சேக்,  சீத்தாகேம்ப் கிளை செயலாளர் ராசேந்திரன், தானே கிளை செயலாளர் பாலமுருகன், முலுண்டு கிளை செயலாளர்.பெருமாள்,  ஆகியோர் தலைமையில்  ஆங்காங்கே நடைபெறவுள்ளன.

ஆங்காங்கே மேலும் பல கிளைகளிலும் நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வில் நிர்வாகிகள், இலக்கிய அணி, இளைஞரணி, கலை இலக்கியப் பேரவை நிர்வாகிகளும் கிளைக் கழகச் செயலாளர்களும் உறுப்பினர்களும்.கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவின் புகழ் பாடி நமது மொழியுணர்வையும் இயக்க உணர்வையும் மெய்ப்பிக்கும்படி செயலாளர் அலிசேக் மீரான் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து.வருகிற, 05-2-2022 சனிக்கிழமை மாலை 6.மணியளவில்  இணையம் வழியாக அண்ணா நினைவேந்தல் கருத்தரங்கை நடத்த உள்ளோம்.பேரறிஞரின் இலக்கியப்பணி, பேரறிஞரின் அரசியல்பணி மற்றும் பேரறிஞரின் சமூக நீதிக்கான பணி என்ற மிக இன்றியமையாத தலைப்புகளில் மிகச்சிறந்த உரையாளர்கள் உரையாற்றவுள்ளார்கள் அந்த நிகழ்வில் அனைவரும் மறவாமல் கலந்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096534
Users Today : 19
Total Users : 96534
Views Today : 24
Total views : 416666
Who's Online : 0
Your IP Address : 3.145.92.98

Archives (முந்தைய செய்திகள்)