Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

உயர்ந்த மனிதன் – ரோகிணி

06 Feb 2022 12:03 amFeatured Posted by: Sadanandan

You already voted!

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-19
படைப்பாளர் - ரோகினி, ஐயப்பன்தாங்கல், சென்னை

60  தொட்ட சதாசிவம் , மீனாட்சி  தம்பதிகளுக்குக் கல்யாண வயதில் அழகான ஓர் பெண் . அவள் பெயர் கல்பனா . படிப்போ கணினி பொறியாளர் . அவர்கள் வசிக்கும் இடம் கோவை . ஆனால் அங்கு வேலை வாய்ப்பு குறைவு . எனவே கல்பனா கிடைத்த வேலை வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ளச் சென்னை வந்தாள்.

எல்லா பெற்றோருக்கும் இருக்கும் கவலை இந்தத் தம்பதிகளுக்கு வந்ததில் வியப்பு ஒன்றுமில்லை . சுமார் 4  வருடங்கள் ஓடிவிட்டன . சதாசிவம் சிறிது  நோய்வாய்ப்பட்டார்   பெண்ணுக்கு இன்னும்  வரன் அமையவில்லையே  என்னும் கவலை வாட்டி வதைத்தது .

வேலைப் பளு காரணமாக கல்பனா , கோவை வருவதும் சற்று குறைந்தது  எது எப்படியானாலும் , தீபாவளியை இதுவரை பெற்றோருடன் கொண்டாடுவதைத் தவறவிட்டதே  இல்லை . ஆனால் இந்த முறை லீவு  கிடைப்பதில் சற்று கடினம் என்பதைப் புரிந்து கொண்டாள் கல்பனா . ஆனால் எப்படியாவது இந்த முறையும் தீபாவளிக்கு கோவை செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள் கல்பனா , அதே போல் பெற்றோர்களும் அவள் வரவை எதிர் பார்த்துக் காத்திருந்தனர்

.

ஒருவழியாகத் தீபாவளிக்கு முதல் நாள் தான் லீவு கிடைத்தது . மகிழ்ச்சி ஆனால் முன்பதிவெல்லாம் முடிந்துவிட்டதால் டிக்கெட்  கிடைக்கவில்லை. எப்படியாவது போயாக வேண்டும் என்ற துடிப்பு இருந்ததால் , ஏதோ ஒரு சாதாரண பஸ்ஸில் இடம் கிடைத்தால் சந்தோஷம். அந்த பஸ்ஸுக்கு அவ்வளவாகக் கூட்டம் இல்லை . வேலை முடித்து , நேராக பஸ்ஸுக்கு வந்தாள் , கடைசி பகுதி  இடத்தில் உட்கார்ந்தவுடன்  , அசதி காரணமாகத் தூங்கத் தொடங்கினாள்.

நள்ளிரவு நேரம் , திடீர் என்று பெரும் சத்தம் . பஸ் விபத்துக்குள்ளானதில் கல்பனா பின் இருக்கையிலிருந்து நடுப் பகுதிக்கு தூக்கி வீசி எறியப்பட்டாள்.  பஸ்சுக்குள் முக்கல், முனகல் , ஐயோ , அம்மா என்று ஒரே சத்தம் , எங்குப் பார்த்தாலும் ரத்தம் , உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு , அடிபட்டவர்களை அருகில் உள்ள அரசாங்க மருத்துவமனையில் சேர்த்தார்கள். சில பேர் கவலைக்கிடம். மற்றும் சிலருக்குப் பலத்த காயம் . 

கல்பனா சுய நினைவுயில்லாமல் மருத்துவமனையில் கிடந்தாள் . நல்லவேளை உயிர் இருந்தது . கோவையில் மகளை இன்னும் காணவேயில்லை என தவித்து கொண்டிருந்தனர்  பெற்றோர்கள் .  தகவலும்  இல்லை .அலைபேசி தொடர்பும் இல்லை . மிகவும் கலங்கிப் போனார்கள் .

தகவல் கிடைத்ததும் பெற்றோர்கள் மிக மன கனத்துடன் மகளைப் பார்த்து கண்ணீர் விட்டுக் கதறினார்கள் . உயிருக்கு ஆபத்து இல்லை என்று பெரிய மருத்துவர் சொன்னதில் , சற்று ஆறுதல் அடைந்தார்கள் . ஆனால் ஒரு கால் சற்று ஊனமாகிப்போய்விட்டது .

தொடர்ந்தது சிகிச்சை  கோவையில் .  பல மாதங்கள் வேலைக்கு வராததால் , வேலை பறிபோனது.  மனம் தளராமல் அரசாங்க வேலைக்கு முயற்சி செய்தாள் , அது கிட்டியது கோவையில். ஊனம் பெரும் தடையாக இருந்தது கல்யாணத்துக்கு. 

பெற்றோர்கள் எப்படியாவது கல்யாணம் செய்யவேண்டும் என்று துடிப்போடு இருந்தார்கள் . கல்பனா, நீ வேலை பார்த்த  கம்பெனியில் யாரையாவது விரும்புகிறாயா எனக் கேட்டார்கள் பெற்றோர்கள் .

எனக்கு ஒருவரைத் தெரியும் . ஆனால் காதல் என்று ஒன்றும் கிடையாது  என்றாள், அவன் பெயர் டேவிட் . அவ்வளவுதான் தெரியும் , அவனிடம் கேட்டுப்பார்க்கலாமா என்றார்கள்  பெற்றோர்கள் மிகவும் யோசித்துவிட்டு , சரி , நானே , கேட்கிறேன் என்றாள் கல்பனா.

டேவிட்டை அலைபேசியில் தொடர்பு கொண்டு , அவனிடம் மன குமுறலைவெளிட்டாள். அவன் , அவள் மீது மிகவும்  இரக்கப்பட்டு , உடனே  கோவை வந்து , அவர்கள் பெற்றோர்களைச் சந்தித்து , கல்யாணத்துக்கு சம்மதம்  தெரிவித்தான் . எல்லோர் ஆசியுடன் கல்யாணம் நடந்து.

கல்பனா சென்னை வந்துவிட்டாள், கல்பனா கருவுற்றாள் , இன்னும் சில மாதங்களில் சின்ன கல்பனா வந்திடுவாள் என்ற மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

பிரசவத்திற்கு  ஒரு வாரம் முன்பாக , கல்பனாவுக்குக் காய்ச்சல் கண்டது ,  உடனடியாக மருத்துவர் ஆலோசனைப்படி , பெரிய தனியார் மருத்துவமனையில் கல்பனா சேர்க்கப்பட்டாள். காய்ச்சல் குறையவேயில்லை .

மருத்துவர்கள்  ஒன்று கூடி , உடனடியாக  குழந்தையை  எடுக்காவிட்டால் , தாயும் , சேயும்  மடிய நேரிடும்  என்பதைச் சொல்லி , மிகவும் கஷ்டப்பட்டு குழந்தையைக் காப்பாற்றினார்கள் , சின்ன கல்பனா பிறந்தாள், ஆனால்  பெரிய கல்பனா மறைந்தாள் .

கல்பனாவின் பெற்றோர்கள் கோவையை விட்டு விலகி சென்னைக்கே வந்து விட்டார்கள்.  

சின்ன கல்பனா , டேவிட் , மற்றும் அவனது பெற்றோர்கள் அரவணைப்பில் நன்றாக வளர்ந்தாள், கல்பனாவின் பெற்றோர்கள் சின்ன கல்பனாவை அடிக்கடி பார்த்து ஆனந்தம் கொண்டார்கள் ,  ஒருமுறை , டேவிடை பார்த்து , நீங்கள் ஏன் இன்னொரு கல்யாணம் செய்துகொண்டு நீங்கள் சந்தோசமாக குழந்தையை வளர்க்கலாமே என்றார்கள் அதற்கு டேவிட் பதில் மிகவும் அற்புதனமானது . இக் குழந்தையில் என் ஆருயிர் கல்பனாவை  காண்கிறேன் . மறுமணத்திற்கு இடமே இல்லை என்று சொல்லி கண்ணான கண்ணே , கண்ணான கண்ணே , தோள் மீது சாயா வா என்ற பாடலை முணுமுணுத்தபடி சென்றான். இவனல்லவோ உயர்ந்த மனிதன்

You already voted!
3.5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
3 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
S.Jayanthi
S.Jayanthi
2 years ago

Super story

Nellaiyappan
Nellaiyappan
2 years ago

நெஞ்சைத் தொட்ட ஒரு கதை !!

Someswaran
Someswaran
2 years ago

அருமையான சிறுகதை. ஆனாலும் பெரிய கல்பனாவிற்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்க வேண்டாம்.
டேவிட்டின் குணச்சித்திரத்தை மிக அழகாக ஆசிரியர்செதுக்கியுள்ளார். வாழ்த்துக்கள்.

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096534
Users Today : 19
Total Users : 96534
Views Today : 25
Total views : 416667
Who's Online : 0
Your IP Address : 18.225.255.196

Archives (முந்தைய செய்திகள்)