Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

தோற்றத்தில் மயங்காதே – கோ.சீனிவாசகம்

14 Feb 2022 2:50 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Short Story Pictures seeni

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-38
படைப்பாளர் - கோ.சீனிவாசகம், மலாட்-மும்பை

எமி... வணக்கம்  மச்சான்
ரவி... வணக்கம்மா
எமி...நான் உங்க கண்ணுக்கு அம்மா மாதிரியா தெரியுது
ரவி.. இல்ல கண்ணு கொழுந்து மாதிரி இருக்க
போங்க மச்சான் எப்ப பாத்தாலும் உங்களுக்கு  நையாண்டி தான்
ரவி.. ஆமா இன்னைக்கு கல்லூரிக்கு கட்டா? 
எமி.. அத்தை எங்க போயிட்டாங்க
ரவி.. ரேஷன் கடைக்கு போய் இருக்காங்க
எமி.. உங்களுக்கு கலியாணம் எப்ப மச்சான்
ரவி.. கலியாணம்னு சொல்லாதே நீ படிச்ச பொண்ணு திருமணம் எப்போதுனு கேளு எமி.. ஏன் மச்சான் இரண்டுமே ஒன்னுதானே
ரவி.. இல்ல கலி+ஆனம்= கலியாணம் கலி என்றால் தரித்திரம் ஆனம் என்றால் அஸ்திவாரம் அதாவது கலியாணம் என்றால் சரித்திரத்திற்கு அஸ்திவாரம் ஆகும் அதனால்தான் சொன்னேன்.
அப்படியானால் திருமணம் என்றால் என்ன வென்று சொல்லுங்க மச்சான்
இரண்டு மனங்கள் ஒன்றாக இணைந்தால் அது திருமணம் இப்பம் புரியுதா?

புரியுது புரியுது ஆனால்... நான் கேட்ட கேள்விக்கு பதிலே இல்லையே

ரவி.. திருமணம் எப்போது அடுத்து மணமகள் யார் என்று இப்படி கேட்க ஆரம்பிச்சிருவ முதல்ல படி படித்து முடித்தபின் வேலை தேடு

எமி: மச்சான் மச்சான் வரதட்சணை வாங்வீர்களா?

ரவி.. வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம் வேண்டாமென்றால் மாப்பிள்ளைக்கு ஏதோ வியாதினு நினைக்கிறீங்க

மாமியார் இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறீங்க கூட்டுக் குடும்பம் ஆகாதுன்னு நினைக்கிறீங்க கார் பங்களா கைநிறைய ஊதியம் கிடைக்கணும், சமைக்க தெரிந்தவனாக இருக்கவேண்டும்

ஆகமொத்தம் தன்மானத்தை இழந்தவனாக எதிர் பாக்குறீங்க சரிதானே?

எமி.. அப்படி இல்ல மச்சான் ஆண்களை பற்றி நான் சொல்லட்டுமா சிவப்பு கலராக இருக்கணும், படிச்சி பட்டம் பெற்றவளாக இருக்க வேண்டும் , நவநாகரீகம்  உள்ளவளாக இருக்கணும், பசை உள்ள குடும்பமாக இருக்கனும் என்றுதான் ஆண்களும் நினைக்கிறார்கள்.

மச்சான் நான் வருகிறேன் வயிறு பசிக்குது

ரவி.. எம்மா தாயே இதைவிட தடித்து விடாதே உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு கேள்விபட்டு இருக்கியா மார்பு விரிந்து இடை சுருங்கி இருக்க வேண்டும்

வாசனை திரவியம் என்று கருதி கண்டதையெல்லாம் முகத்தில் பூசி முகத்தை கெடுத்து விடாதே குளிக்கும்போது முகத்தில் மஞ்சள் தேய்த்து குளித்தாலே போதும் அதுவே அழகாக இருக்கும்

எமி.. மச்சான் என் மேல இவ்வளவு அக்கறையா இருக்கீங்க என்று இப்பத்தான் புரிஞ்சுக்கிட்டேன்

எமி நான் புத்திமதி தான் சொன்னேனே தவிர உன் மேல் அக்கறை கொண்டு சொல்லவில்லை நீ மனதில் கற்பனை செய்து பாசத்தை வளர்த்து விடாதே இந்த வயது மோசமான பருவம்

அதோ அம்மாவும் வந்து விட்டாங்க
அம்மா ரேஷன் வாங்கிட்டு வர இவ்வளவு நேரமா ?
அம்மா.. ரேஷன் வாங்கிகிட்டு அப்படியே சித்தி வீட்டுக்கு போயிட்டு வாறேன்

ஆமா எமி எப்போ வந்தாள்

அரை மணி நேரம் ஆகிவிட்டதம்மா

அம்மா.. சரி வாங்க சாப்பிடலாம் எமி உட்கார்

எமி.. வேண்டாம் அத்தை இன்று முதல் நான் குறைவாக சாப்பிட போறேன்

ஏன் ரவி சொன்னானா?

எமி.. ஆமா அத்த நான் குண்டாகவா இருக்கேன் சொல்லுங்க அத்தை உங்க பையனிடம்

எமி.. சரி நான் வறேன் அம்மா தேடுவாங்க அத்த

ரவி.. அம்மா அப்பாவுக்கு மருந்து  மாத்திரைகள் இருக்கா பாருங்கம்மா

அம்மா.. இரண்டு நாட்களுக்குதான் இருக்கு ரவி..நான்போய்மருந்தவாங்கிட்டுவாறேன்.

அடுத்தநாள்

எமி.. அத்த.... அத்த

ரவி.. மைத்துனியே வா  கொழுந்தே உட்கார்

எமி..நான் வரும்போதெல்லாம் அத்தை வீட்டிலேயே இருப்பதில்லை

ரவி.. நீ அம்மா இல்லாத நேரம் பார்த்து வருகிறாய் போலிருக்கு

எமி.. ஐயோ தப்பு கணக்கு போடாதீங்க மச்சான்.

மச்சான் உங்களிடம் எங்கள் உறவுக்காரப் பெண்ணை பற்றி பேசவேண்டும் பேசலாமா?

ஓ.. தாராளமாக பேசலாம்

எமி..எங்க தூரத்து உறவுபெண் நன்றாக படித்தவர் பட்டம் பெற்றவர் சுண்டினால் ரத்தம் வரும் பாடினால் தெய்வமே நேரில் வந்து விடும் திறமையானவள் அறிவு நிறைந்தவள் ஆற்றல் மிகுந்தவள் பெரியவர்களுக்கு மதிப்பளித்து நடப்பவள் நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள் ஒரே ஒரு பெண் கை நிறைய சம்பாதிப்பவள் சொந்த மாப்பிள்ளைக்கு இரு வீட்டார் விருப்பப்படி பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் விருப்பப்படி கட்டிக் கொடுத்தார்கள் முதல் நாளே அதாவது முதலிரவன்றே பெண்ணிடம் வந்து இதோ பார் உன்னை என் மகனுக்கு கட்டி வச்சது வாழ்வு நடத்த அல்ல உனக்கு நிறைய சம்பளம் அதனால் என் மகனிடம் விலகியே இருக்க வேண்டும் புரிஞ்சுதா என்று கூறிவிட்டு மகனிடம் சென்றார் டேய் நான் சொன்னதை மறந்து விடாதே அவளை உன்னை தொட விடாதே கவனமாக இரு புரிஞ்சுதா என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டாள்

ஒரு பெண் திருமணம் ஆகும் முன்பு எத்தனை கற்பனைகள் வளர்த்து இருப்பாள் எத்தனை கனவுகண்டு இருப்பாள் கணவனுடன் சுதந்திரமாக கைபிடித்து நடக்க எப்படி துடித்துக்கொண்டு இருந்திருப்பாள் தன் வாழ்வில் இன்ப ஒளி வீசும் தென்றல் வீசும் மனதுக்கு பிடித்த மாமன் மகனுடன் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று காத்திருந்தாள் ஆனால் ஒரு வருடமாகியும் கன்னியழியாதகன்னி பெண்ணாக இன்றுவரை இருந்துவிட்டாள்.

நாளை வருவான் திருந்திவிடுவான் என்று காத்திருந்து காத்திருந்து தன் அம்மாவிடம் நடந்து கொண்டிருக்கின்ற கொடுமையை துன்பத்தை துயரத்தை கொட்டி அழுதாள் பெற்றவளுக்கோ தலையில் இடி விழுந்தது போல் மயக்கம் போட்டு விழுந்து விட்டாள் மயக்கம் தெளிந்து எழுந்தவள் கண்ணகியாக மாறிவிட்டாள் அண்ணி அண்ணி நீ எல்லாம் ஒரு பெண் தானா?

என் பெண்ணுக்கும் எனக்கும் என் குடும்பத்துக்கும் ஆசைவார்த்தை கூறி

மோசம் செய்த மோகினியே உனக்கு ஏன் இந்தக் கீழ்த்தரமான புத்தி கிளியை வளர்த்து  பூனையிடம் கொடுத்தது போல் ஆகிவிட்டதுதே

அடக்கடவுளே உனக்கு கண்ணு இருக்கிறதா?

என் அண்ணன் வரட்டும் அவனைக் கேட்கிறேன் மகளிடம் கூறினாள்.

உன் பெட்டியில் துணிமணிகளை எல்லாம் எடுத்து வை இனி ஒரு நிமிடம் கூட இந்த வீட்டில் இருக்கக் கூடாது நான் அப்பாவை அழைக்கிறேன் என்று கூறி போனில் கூப்பிட்டாள்.

ரவி.. மணமகன் ஆண்மை உள்ளவனா? அவனுடைய தாய் தாயா? அல்லது பேயா?  அந்தப் பெண் படித்திருந்தும் ஒரு வருடமாக அவன் திருந்தி விடுவான்  தன்னை வந்து அடைவான் என்று பெற்றோரிடம் கூட சொல்லாமல் ஏன் காத்திருந்தாள் இந்த காலத்தில் இப்படியும் ஒரு பெண்ணா? அவர்களை எல்லாம் சும்மா விடக்கூடாது தூக்கில் தொங்கவிட வேண்டும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்த துரோகியை சும்மா விடக்கூடாது.

இந்த கதையை கேட்ட எனக்கே இப்படி இருக்கிறதே பெற்றோர்களுக்கு எப்படி இருந்திருக்கும் நினைத்தாலே தாங்கிக்கொள்ள முடியவில்லை அவர்களைக் கூட்டி வந்தவுடன் என்னை அங்கு அழைத்துச் செல் என்னால் சட்டரீதியாக ஒரு சில உதவி செய்ய கடமைப்பட்டுள்ளேன்

ரொம்ப நன்றி மச்சான் நான் வருகிறேன்.

அங்கு இரவு முழுவதும் ரவிக்கு தூக்கமே வரவில்லை இப்படியும் உறவினர்கள் இருப்பார்களா ஆறு அறிவு படைத்த மனிதர்கள் தானா?

மனைவி அழைத்ததும் உடனே விமானம் ஏறி பறந்து சென்றார் சென்னைக்கு உடனே அருகில் இருக்கும் மகளிர் காவல் துறையை அணுகி நடந்த விபரத்தை எல்லாம் விவரமாகச் சொல்லி புகாரை பதிவு செய்து தான் எதையெல்லாம் எடுத்துச் செல்கிறோம் என்று சோதனை செய்து அதை எழுதி தரும்படியும் வாங்கிக்கொண்டு மும்பை புறப்பட்டனர்.

அடுத்த நாள் முதல் வேலையாக சிறந்த திறமையான வழக்கறிஞரை பார்த்து எல்லா விபரத்தையும் கூறி ஆலோசனை பெற்றார்கள் நீதிமன்றத்தில் நீதி கேட்டு வழக்கு பதிவு செய்தார்கள். மாப்பிள்ளைக்கும் தெரிய படுத்தினார்கள் 5-6 மாதங்கள் வாய்தா வாய்தா கேட்டு காலத்தைக் கடத்தினார்கள் மாப்பிள்ளை வீட்டார்கள்

ஆறுமாதத்தில் மூன்று தடவை கவுன்சிலிங் அதாவது பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் சில புத்திமதிகள் கூறியும் எதிர்காலத்தில் உங்களுக்கு இந்த இந்த தொந்தரவு கள் ஏற்படலாம் என்று அறிவுறுத்தப்பட்டது இருவருக்கும்
மாப்பிள்ளை தனியாக வந்தால் நான் அவனுடன் வாழ தயாராக இருக்கிறேன் என்றாள் பெண் ஆனால் மாப்பிள்ளையோ எனக்கு அவளுடன் வாழ விருப்பம் இல்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் இதையெல்லாம் கேட்ட நீதிபதி அடுத்த மாதத்திலிருந்து விவாதம் நடைபெறும் அதற்குத் தயாராக வாருங்கள் என்று கூறிவிட்டார்.

அடுத்த மாதம் குறிப்பிட்ட தேதியில் மாப்பிள்ளை மதிவாணனும் பெண் மஞ்சுளாவும் தங்கள் வழக்கறிஞர்களுடனும் பெற்றோர்களுடனும்

வருகை தந்திருந்தார்கள்

நீதிமன்றம் தொடங்கியது நீதிபதி தன் இருக்கையில் அமர்ந்தார் வழக்கறிஞர்கள் வணக்கம் கூறினார்கள் விவாதம் தொடங்கியது திறமையாக வாதாடினார்கள் புள்ளி விபரங்களை புட்டுப்புட்டு

வைத்தார்கள். நீதிபதி பாயிண்ட் பாயிண்டாக குறிப்பு எழுதிக் கொண்டே வந்தார் இரு கட்சிக்காரர்களின் வாதத்தை கேட்ட பின் மாப்பிள்ளை மதிவாணனைஆண்மை உள்ளவன் தானாஎன்று பரிசோதிக்க கட்டளையிட்டார்

அப்போது மாப்பிள்ளை மதிவாணன் தன்னுடைய வழக்கறிஞரை அருகில் அழைத்து நான் ஆண்மையற்றவன் என்னை பரிசோதிக்க வேண்டாம் நான் ஒத்துக் கொள்கிறேன் நான் எவ்வளவோ என் தாயிடம் சொல்லியும் தனக்குத் திருமணமே வேண்டாம் நான் அதற்கு தகுதியற்றவன் என்று சொல்லியும் கேட்கவில்லை அதனால் நான் குற்றத்தை ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்டு மஞ்சுளா வாழ வழிவிடுகிறேன். இது ஐயா நீதிபதியிடம் கூறி விடுங்கள் என்று கூறினார் வழக்கறிஞர் மீண்டும் நீதிபதியை வணங்கி தனது கட்சிக்காரர் கூறியதை அப்படியே கூறி மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

நீதிபதி தனது தீர்க்கமான தீர்ப்பை எழுதி சபையில் தெரிவித்தார் பெண்வீட்டார்போட்ட நகைகள் சீதனங்கள் பெண் வீட்டாரிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் அதே போல் பெண்வீட்டார் மாப்பிள்ளை போட்ட தாலிக்கொடி மோதிரம் போன்றவற்றை மாப்பிள்ளை வீட்டாரிடம் கொடுத்து விடவேண்டும் மாப்பிள்ளைக்கு ஒரு லட்ச ரூபாய் அவதாரமும் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மாப்பிள்ளையின் அம்மா வேண்டுமென்றே பெண்ணின் வாழ்க்கையை சிதைத்த காரணத்தினால்

2 ஆண்டு சிறைத் தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மஞ்சுளாவை அழைத்து விவகார  சான்றிதழ் ( வாழ்க்கைஒப்பந்தபிரிவு) சான்றிதழ் வழங்கி உன் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள் என்று கூறி வழியனுப்பி வைத்தார் நீதிபதி

ரவியுடன் ஒன்றாகபடித்து ஒரே தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த மாசிலா மணியை மஞ்சுளாவை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார் மாசிலா மணியும் அதற்குத் தன் முழு சம்மதத்தை தெரிவித்திருந்தார்.

பெரியோர்களே தோற்றத்தை கண்டு ஏமாறாதீர்கள் விலை உயர்ந்த கோட் சூட் படகு போன்ற காரில் பவனி வருவது பத்து விரல்களுக்கும் பகட்டான மோதிரம் அணிந்து வரும் வேடதாரிகள் பலர் இருப்பார்கள்

உறவுக்காரன் என்று உச்சந்தலையில் வைத்து ஆடக்கூடாது

நரிக்கு நாட்டாமை கொடுத்தா தலைக்கு இரண்டு கிடா கேட்குமாம்.

எப்பொருள் யார் யார் வாய் க்   கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு ( குறள்) வள்ளுவன் வகுத்து தந்த வாழ்வினை மறந்துவிடாதீர்கள் மஞ்சுளாவுக்கு நல்ல தீர்ப்பு  கிடைத்துவிட்டது. ரவி பெண்ணின் பெற்றோரை அணுகி தனது நண்பன் மாசிலா மணியின் குணத்தை பற்றியும் அவருடைய குடும்ப சூழ்நிலை பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார் பெற்றோர்கள் தன் மகளிடம் கேட்டு பதில் சொல்கிறேன் அதற்கு முன்பாக மாப்பிள்ளையின் ஜாதகத்தை வாங்கி வாருங்கள் என்றார்கள்

ரவிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது எத்தனை தந்தை பெரியார் வந்தாலும் அண்ணல் அம்பேத்கார் வந்தாலும் உங்களை திருத்தவே முடியாது போல் தெரிகிறதே உங்கள் மகளைத் திருமணம் முடித்துக் கொடுக்கும் போது ஜாதகம் பார்த்து தானே கொடுத்தீர்கள் அப்போது சோதிடர் இப்படியெல்லாம் நடக்கும் என்று ஏன் கூறவில்லை ஒரு சின்ன உதாரணம் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் மலாட்

பகுதியில் ஒரு பெண் அழகும் அறிவும் நிறைந்தவள் மூல நட்சத்திரத்தில் பிறந்ததால் திருமணம் தடைபட்டுக் கொண்டே இருந்தது அந்தப் பெண்ணின் உறவுக்காரர் ஒருவர் பெண்ணின் பெற்றோரை சந்தித்து ஆயிரம் ரூபாய் சோதிடர்களிடம் கொடுத்து ஜாதகத்தை மாற்றி எழுதித் தரும்படி கூறுங்கள் என்றார் அதன்படி அவர்கள் செய்தார்கள் அடுத்த வாரமே நல்ல வரன் கிடைத்து திருமணம் நடந்தது அந்த பெண்ணின் மகளும் திருமண வயது அடைந்துவிட்டார் இப்போது சொல்லுங்கள் மூல நட்சதிரம் எங்கே போனது இதற்கு மேல் உங்கள் விருப்பம் பிடித்திருந்தால் என்னிடம் கூறுங்கள் நான் மாப்பிள்ளை வீட்டாரை பெண் பார்க்க வரச் சொல்லுகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்ரவி

எமி... மச்சான் எப்படி இருக்கீங்க வேலை பளு அதிகமாக தெரிகிறதே

நீதானே என் உறவுக்கார பெண்ணுக்கு உதவி செய்யும்படி கூறினாய்

உனது பணிவான வேண்டுகோளுக்கு இணங்கி திறம்பட வேலை நடந்து கொண்டிருக்கிறது.

மச்சான் அந்தப் பெண்ணுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்த்து பேசி முடியுங்கள் மச்சான்

ரவி.. நானே அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

எமி.. ஐயோ அப்படி எல்லாம் செய்து விடாதீர்கள் நான் எங்கு போவேன்.

உனக்கும் அழகான மாப்பிள்ளை பார்த்து பேசி முடித்து வைக்கிறேன். 

எமி.. ஐயோ இது முதலுக்கே மோசமல்லவா

சரி சரி எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது அப்புறம் நாம் பேசலாம் என்று கூறிவிட்டு மஞ்சுளா வீட்டை நோக்கி நடந்தான்

மஞ்சுளாவின் பெற்றோர்கள் ரவியை வரவேற்று உட்கார வைத்து அவருடைய திட்டத்தை கூறினார்கள் என் மகளுக்கும் எங்களுக்கும் முழு சம்மதம் நீங்கள் மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசி முடிவு செய்யுங்கள்

ரவி.. ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன் மாப்பிள்ளையின் தந்தை முற்போக்கு வாதி சமூக நீதியை

பின் பற்ற கூடியவர் தந்தை பெரியாரின் சீர்திருத்த திருமணத்தை விரும்புவார்.

மாப்பிள்ளை வீட்டார் விருப்பப்படியே திருமணத்தை நடத்த நாங்கள் ஒத்துக் கொள்கிறோம் போதுமா

ரவி.. நண்பன் மாசிலாமணி வீட்டுக்கு சென்று அவனுடைய பெற்றோரிடம் மாசிலாமணி ஏதாவது சொன்னாரா?  என்று கேட்க

சொன்னான் எங்களுக்கு ம் அவன் விரும்பிய பெண்ணையே திருமணம் செய்ய ஒப்புதல் அளித்து உள்ளோம். ஆனால் சீர்திருத்தம் முறைப்படிதான் திருமணம் நடைபெறும்.

நீயும் மாசிலா மணியும் ஒன்றாகப் படித்தவர்கள் ஒன்றாக வேலை செய்பவர்கள். சரி தம்பி நீ அவனுக்காக பெண் பார்த்து முடிவு செய்கிறாய் மகிழ்ச்சி உன் திருமணம் எப்போது.

அதுவும் விரைவாக முடியும் முதலில் மாசிலாமணிக்கு முடியட்டும்

இரண்டு வீட்டாரும் திருமண வேலைகளை மும்முரமாக செய்தார்கள் ஒரு பொது லீவில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார்கள் சீர்திருத்தத் திருமணம் ஆக சீரும் சிறப்புமாக நடைபெற்றது அவர்களுடைய இல்லற வாழ்க்கை இனிதே நடந்து கொண்டு இருக்கிறது.

அடுத்து ஒரு மாதத்திற்குள் ரவி..எமி அவர்களுக்கும் சீரும் சிறப்புமாக திருமணம் நடைபெற்றது. நண்பர்கள் இருவரும் தங்களின்இணையர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்து  கிறார்கள் வாழ்க! வளமுடன்.

You already voted!
3.8 12 votes
Article Rating
Subscribe
Notify of
guest
3 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
இல.முருகன்
இல.முருகன்
2 years ago

✍🏽
கதாசிரியர் அவர்கள் “ஜாதக பொருத்தம்” என்ற மூட நம்பிக்கைக்கு சரியான சவுக்கடி கொடுத்துள்ளார்.
கதாசிரியர் அவர்கள் மும்பையில் பல குடும்பங்கள் திருமணம் என்ற பந்தத்தில் இணைய பாலமாக இருந்தவர்…
ஒரு பெரிய குடும்பத்தின் பொறுப்பான தலைவர்.
அனுபவமிக்கவர். அவரது அனுபவத்தை வரன் தேடும் பெற்றோர்களும் இளைஞர்களும் புரிந்து, பெருந்தன்மையான மனதோடும் தூய்மையான உள்ளத்தோடும் மணமக்களை சுயநலமின்றி தேர்வு செய்தால் வாழ்க்கை சிறக்கும் என்பதை மக்களுக்கு உணர்த்தும் அருமையான சிறு கதை.

குறிப்பு:
#கதாசிரியர் மற்றும் பொதுநலச்சேவகர் ஐயா கோ.சீனிவாசகம் அவர்கள் எமது ஜெரிமெரி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் என்பது எமக்கெல்லாம் பெருமை.

# எனது இளைய சகோதரர் இல.கார்த்திக்ராஜா-சுடர்மதி திருமணத்தை 2013 ம் ஆண்டு நடத்திய பெருமை ஐயா அவர்களையேச் சாரும். இன்று
தம்பதியர் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தையோடு தனது சுய சம்பாத்தியத்தில் சொந்த வீடு வாங்கி வசதி வாய்ப்போடு எனது தம்பி கார்த்திக் அவர்கள் Olymbus என்ற பன்னாட்டு நிறுவனத்தில் பொறியாளர் ஆகவும் எனது மைத்துனி சுடர்மதி கார்த்திக் அவர்கள்
HDFC bank கில் மேலாளராகவும்
பணிபுரிந்து சிறப்பாகவும் மகிழ்வோடும் வாழ்ந்து வருகின்றனர்.

# இதை பெருமைக்காக கூறவில்லை. ஐயா அவர்கள் மும்பையில் 75 க்கும் மேற்பட்ட திருமணங்களை நடத்தி வைத்த பெருமைக்கு உரியவர். அதில் எனது குடும்பமும் ஒரு அங்கம் என்பதால் நன்றி உணர்வோடு பதிவு செய்கிறேன்.

*மகிழ்ச்சி🥰

நன்றி!
💖
இல.முருகன்
மு.செயலாளர்
ஜெரிமெரி தமிழ்ச் சங்கம்
9867888500

Annamalai
Annamalai
Reply to  இல.முருகன்
2 years ago

👌👌

K.V Ashok Kumar
K.V Ashok Kumar
Reply to  இல.முருகன்
2 years ago

👌👍

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096854
Users Today : 9
Total Users : 96854
Views Today : 14
Total views : 417270
Who's Online : 0
Your IP Address : 3.145.7.187

Archives (முந்தைய செய்திகள்)