Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

இயற்கையே வா வா! – நிலவை கி. தினகரன்

15 Feb 2022 2:57 pmFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Short Story Pictures nilavan

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-51
படைப்பாளர் - கவிஞர் நிலவை கி.தினகரன், சென்னை

காலைக் கதிரவன் கடலிலிருந்து தூங்கி எழுந்தான். சிறிது கண்விழித்துப் பார்த்தான். கோவிலூர் கிராமம். பார்ப்பதற்கு மிகவும் அழகான, பச்சைப் பசேல் வயல் கொண்ட ஊர். இயற்கை அழகு கொட்டிக் கிடந்தது. எங்கு நோக்கினும் மரங்களும் வயல்களும் நிறைந்து கிடந்தன. நிறைய குடிசைகளும், ஓட்டு வீடுகளும் தென்பட்டது. குளங்களிலும், கிணறுகளிலும் தண்ணீர் நிரம்பி வழிந்தது. எல்லா வீடுகளிலும் ஆடுகளும், கோழிகளும் மற்றும் ஏர் பூட்டி உழும் காளை மாடுகளும் அதிகம். யாரும் வெளியூருக்கு வேலைக்கு செலவதில்லை.

முழுநேர வேலை விவசாயம் மட்டுமே. வேறு வேலை தெரியாது. சில வீடுகளின் பிள்ளைகள் மட்டுமே பட்டணத்தில் படித்து வேலை செய்தனர். ஊர் எல்லையின் நான்கு திசைகளிலும் விண்ணை முட்டும் கோவில் கோபுரங்கள் தெறிந்தன. கோபுரத்தின் இடைவெளிகளில் கொஞ்சும் மாடப்புறாக்கள் அதிகம். அவ்வூரில் ஒவ்வொரு வருடத்திலும் சித்திரை திருவிழா கோலாகலமாக நடக்கும். அப்போது நடக்கும் நாடகங்களும், கேளிக்கைகளும் மக்களின் மனதில் அடுத்த வருடம் திருவிழா வரும் வரை நீங்காத பசுமை நினைவுகளாக இருக்கும். மக்கள் அனைவரும் பஞ்சம், பட்டினியின்றி தங்கள் குடும்பத்தினருடனும், அக்கம் பக்கத்தினருடனும் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.

காலையில் கண் விழித்தவுடன் வீட்டு வேலைகளை செய்துவிட்டு தத்தம் வயல்களுக்கும், தோட்டங்களுக்கும் சென்று விவசாயம் செய்து வந்தனர். மழைக்கு பஞ்சம் இல்லை. எக்காலத்திலும் எங்கு நோக்கினும் நெற்கதிகளே அதிகம் தென்படும். மக்கள் அனைவரும் வெண்மை மனதுடையவர்கள். திருடர்கள் கிடையாது. அதனால் திருட்டு பயமும் இல்லை. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். வருமானம் பல மடங்கு ஆனதால் மக்கள் செல்வச்செழிப்புடன் இருந்தனர். கடவுளை மறந்தனர். விதி விளையாட ஆரம்பித்தது.

அந்த ஊரில் நான்கு குடும்பங்கள் மட்டுமே ஊர்தலையாடி குடும்பங்கள். திடீரென்று ஏற்பட்ட கொடிய விச தொற்று நோயினால் அந்த நான்கு குடும்பத்தினரும் மண்ணோடு மண்ணாக ஆகி விட்டார்கள். சித்திரை மாதம் நெருங்கியது. திருவிழாவை எடுத்து நடத்த ஆளில்லை. மக்கள் அனைவரும் கவலையானார்கள். அந்த வருடம் நகர்ந்து விட்டது. அந்த கிராமத்தில் கோவிலுக்கு அருகில் பனை ஓலையினால் பின்னப்பட்ட ஒரு சிறிய குடில். உள்ளிருக்கும் கதிரவன் மிகுந்த சுறுசுறுப்பாளன். அவனது மனைவி கண்ணகி மிகுந்த கடவுள் பக்தை. பத்து வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லை.

தினமும் அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, கோவிலுக்கு சென்று, உள்ளிருக்கும் கிணற்றிலிருந்து நீர் இறைத்து அனைத்து சிலைகளுக்கும் ஊற்றுவாள். இதுவே அவளின் தலையாய வேலை. அதன் பிறகுதான் கோவில் பூசாரி வருவார். பூசைகள் செய்வார். கடவுளை தரிசித்து விட்டு, அதன் பிறகுதான் உணவுகளை சமைத்துக் கொண்டு, தன் கணவருக்கு எடுத்து செல்வாள். இருவரும் கடின உழைப்பாளிகள். வீட்டில் அவனது தாயார் மட்டுமே. பக்கவாதத்தினால் படுத்த படுக்கையாக இருப்பார். கண்ணகி, தன் தாய்போல் கவனித்துக் கொள்வாள். வீடு, தோட்டம் மற்றும் கோவில் அனைத்துமே அருகருகே இருந்தன.

ஒரு நாள் இரவு கண்ணகி வழக்கம்போல், உணவருந்தி விட்டு தூங்கினாள். திடீரென்று கடவுள் தோன்றினார். கண்டவுடன் காலில் விழுந்தாள். அவளை ஆசிர்வதித்தார். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். என் இறைவா, இந்த ஊர் மக்கள் எதை விரும்புகிறார்களோ, அது அவர்களுக்கு கிடைக்க வேண்டும். அது போதும் எனக்கு என்று சொன்னாள்.

உனக்கு எதுவும் வேண்டாமா? என்று கேட்டார். உங்கள் தரிசனம் போதும் அப்பா. கண்ணுக்கினிய காணக்கிடைக்காத காட்சி கண்டேன். பிறவிப் பலன் அடைந்தேன். பேரின்பம் பெற்றவளானேன். வேறென்ன வேண்டும் எனக்கு என்றாள். இறைவனும் சரி, நீ கேட்ட வரம் தருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. உம்மக்கள் எதை வேண்டாம் என்று வெறுக்கிறார்களோ அது இவ்வுலகில் இல்லாமல் போகும். இதை நீ யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறி விட்டு மறைந்தார்.

மறுநாள் காலை உதயமானது. வழக்கம்போல் கண்ணகி அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, கோவிலுக்கு சென்று சிலைகளுக்கு நீர் ஊற்றினாள் அந்த புண்ணியவதி. பங்குனி வெயில் மண்டையைப் பிளந்தது. வெப்பம் 50 டிகிரியதைத் தாண்டியது. மிகுந்த வெப்பத்தினால் மக்கள் வெளியில் செல்ல முடியவில்லை. விவசாயமும் செய்ய முடியவில்லை. வெப்பக் கொடுமையினால் பயிர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கருக ஆரம்பித்தன. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் புலம்ப ஆரம்பித்தனர். பயிர்கள் அழியத் தொடங்கின.

அனைவரும் வெப்பக் கடவுள் சூரியனை சாடினர். கடவுளின் வரம் பலிக்க ஆரம்பித்தது. சூரியன் மறைந்து விட்டது. அன்று இரவு ஆனது. நிலவொளியில் அனைவரும் கூட்டமாக, குடும்பமாக அமர்ந்து இரவு உணவை சாப்பிட்டனர். மறுநாள் காலை ஆரம்பமானது. எங்கு நோக்கினும் இருட்டாக தெரிந்தது. நாட்கள் கழிந்தன.

இரவு மட்டுமே அவர்களுக்கு பகலாக தெரிந்தது. விவசாயம் செய்ய முடியவில்லை. சூரியன் அனைத்து பயிர்களையும், நீர்நிலைகளையும் நிர்மூலமாக்கியிருந்தார். வயலுக்கு சென்றவர்கள் கருகிய பயிர்களைக் கண்டு அழுது புலம்ப ஆரம்பித்தனர். சேமித்து வைத்த அனைத்து அரிசி மூட்டைகளும் கொஞ்சம் கொஞ்சமாக காலியாக ஆரம்பித்தன. எங்கு நோக்கினும் பஞ்சம், பட்டினியால் மக்கள்  வாடினர். அனைவரும் மிகுந்த வேதனைப்பட்டனர்.

உணவின்மையால் மக்கள் நிலவையும் சபிக்கத் தொடங்கினர். நிலவும் இல்லாமல் ஆகிவிட்டது. அதன் கூட்டாளிகள் நட்சத்திரங்களும் வர மறுத்து விட்டன. எங்கு நோக்கினும் இருள் சூழ்ந்தது. உணவில்லாமல், எங்கு நோக்கினும் மக்களின் பிணக்குவியல்கள் ஏராளம். மக்கள் இறைவனை நினைக்க ஆரம்பித்தனர்.

கண்ணகி மிகுந்த மனவேதனை அடைந்தாள். விம்மி விம்மி, தேம்பி தேம்பி அழுதாள். சிறுகணம் கண்மூடினாள். அருகிலிருந்த மக்களை அழைத்தாள். எனை ஏன் என்று கேள்வி கேட்காதீர்கள். சொல்வதை மட்டும் திரும்ப சொல்லுங்கள் என்றாள். இறைவா! எங்களை மன்னியுங்கள். உங்களை மறந்த எங்களை மன்னியுங்கள். எங்களுக்கு எல்லா வளங்களும் வேண்டும் என்றாள். அனைவரும் அவ்வாறே வேண்டினர். அடுத்த கணமே இறைவன் மழையாகப் பொழிந்தார். கதிரவன் கண்சிமிட்டியது. நிலவும் எட்டிப்பார்த்தது. நட்சத்திரங்கள் தன் பல்லைக் காட்டியது. மக்கள் மகிழ்ச்சியுற்றனர். இரவும் பகலும் மாறி மாறி வந்தது. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். விவசாயம் வளர்ந்தது. விவசாயிகளும் வளர்ந்தனர்.

You already voted!
3.7 12 votes
Article Rating
Subscribe
Notify of
guest
15 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Jay
Jay
2 years ago

Is this a short story? Is this.competition for kids stories like.ones.in siruvar malar and ambuli.mama? Those stories.are far far better than this one.

This guy first.need to learn what a story is. Pathetic guy and horrible story!!

Rajinikanth Muralidhar
Rajinikanth Muralidhar
2 years ago

Thala ajith maasu uh 🥳🥳

N.SARAVANAN
N.SARAVANAN
2 years ago

சிறப்பான சிறுகதை …!!!
இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழலாம் என்பதற்கு இந்த சிறுகதை மிகச் சரியான எடுத்துக்காட்டாகும் .
கவிஞர் நிலவை தினகரனுக்கு மிக்க நன்றிகள்..!!!, அவர் மேலும் பல சிறப்புகள் பெற்று பல்லாண்டு வாழ நல்வாழ்த்துக்கள்..!!!

தமிழ்
தமிழ்
2 years ago

சிறப்பு,வாழ்த்துக்கள்

Balaji
Balaji
2 years ago

மிக அருமையான கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள். மேலும் பல நற்செய்திகள் பகிரவும். நன்றே நினைப்போம் நல்லதே செய்வோம்.

ஆர்வத்துடன் – பாலாஜி. வை, சென்னை.

Jai
Jai
2 years ago

Great Dhina

Rasikannan L
Rasikannan L
2 years ago

Super

Senthil
Senthil
2 years ago

Fantastic one.

Rajakumari
Rajakumari
2 years ago

It’s God.. dhina

velan
velan
2 years ago

அருமை, இயற்கையே அழகு.
வாழ்த்துக்கள் தினா.

Balaji
Balaji
2 years ago

Good dhina

வெ.சொ.செந்தில்குமார்
வெ.சொ.செந்தில்குமார்
2 years ago

அன்புள்ள நண்பன் தினகரன், அருமையான கதை.
இன்னும் பல கதைகள் உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறேன்.
நேரில் இந்த மாதிரி ஓரு கிராமத்தில் கதிரவனை போல வாழ ஆசை தான்.
உங்கள் வளர்ச்சிக்காக எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

Kanchi
Kanchi
2 years ago

Nalla ennangal irunthal ellam nallathagave nadakkum. Very nicely scripted.

Kathiresan
Kathiresan
2 years ago

Semma Dhina….

Mrs.Anitha
Mrs.Anitha
2 years ago

Very much realistic story.nice. good information

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096562
Users Today : 8
Total Users : 96562
Views Today : 15
Total views : 416713
Who's Online : 1
Your IP Address : 52.14.88.137

Archives (முந்தைய செய்திகள்)