09 May 2022 10:25 pmFeatured
இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. பால், மாவு,பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்சே சகோதரர்கள் அரசியலிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
ஏற்கனவே அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுப் பின்வாங்கப்பட்ட நிலையில் மீண்டும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் நடத்திவந்த போராட்டத்தின் பலனாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பதவி விலகல் கடிதத்தை இலங்கை அதிபரும் தனது இளைய சகோதரருமான கோத்தபயவிடம் மகிந்த ராஜபக்சே வழங்கியுள்ளார்.
கொழும்பில் மக்கள் போராட்டம் நடத்திவரும் சூழலில் சொந்த ஊரில் இருந்து குண்டர்களை அழைத்து வந்து தாக்குதல் நடத்தியதாக ராஜபக்சே மீது போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டுகின்றனர் ராஜபக்சே ஆதரவு குண்டர்களை மரத்தில் கட்டிவைத்து போராட்டக்காரர்கள் அடித்து உதைத்தனர்.
கொழும்புவில் ராஜபக்சே ஆதரவாளர்களை ஏற்றிவந்த பேருந்து மீது ஜேசிபி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
ராஜபக்சே ஆதரவாளர்கள் பயணித்த கார், பேருந்தை போராட்டக்காரர்கள் ஏரியில் தூக்கி வீசினர்
இந்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் 23- பேர் காயம் அடைந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் ஆளும்கட்சியின் எம்.பி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த ரூ. 2000 அளிப்பதாக கூறி அழைத்து வந்ததாக பிடிபட்ட குண்டர்கள் வாக்குமூலம் அளித்துயுள்ளனர்.
இலங்கை தலைநகர் கொழும்புவை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் கலவரம் வெடித்தது. கலவரம் பரவி வரும் அதே வேலையில் காலேமுகத்திடலில் ராஜபக்சே பதவி விலகலை வரவேற்று கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.
இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு நிட்டம்புவை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் இலங்கையில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் கலவரம் வெடித்தது. இலங்கை முழுவதும் பதற்றம் அதிகரிப்பதை அடுத்து விடுமுறையில் உள்ள அனைத்து காவலர்களும் பணிக்கு திரும்ப இலங்கை அரசு உத்தரவிட்டது.
நிட்டாம்புவா என்ற இடத்தில் ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதை அடுத்து கூட்டத்தை கலைக்க போலீஸ் கண்ணீர் புகை குண்டு வீசினர். தொடர்ந்து நிட்டாம்புவாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் காயமடைந்தனர். அதில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார். இதனிடையே போராட்டக்காரர்கள், ராஜபக்சே ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதலில் ஆளுங்கட்சி எம்.பி. அமரகீர்த்தி அத்துகொரலா உயிரிழந்தார்.
தவறான நிர்வாகத்தினால் இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ள ராஜபக்சே சகோதரர்களான பிரதமர் மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகியோரை பதவியில் இருந்து விலகும்படி வலியுறுத்தி மக்கள் 33வது தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல தரப்பிலும் நெருக்கடி முற்றிய நிலையில், அதிபர் மாளிகையில் நேற்று முன்தினம் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், `இடைக்கால அரசு அமைவதால் நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வு காணப்படும் என்றால் தான் பதவி விலக தயார்,’ என்று பிரதமர் மகிந்த ராஜபக்சே கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதனால், ராஜபக்சே விரைவில் பதவி விலகுவார் எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே கொழும்பு மற்றும் தெற்கு மாகாணங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் இலங்கை முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இலங்கை அரசுக்கு எதிராக ஒரு மாதத்துக்கு மேல் நடந்து வரும் போராட்டத்துக்கு பணிந்து பதவி விலகினார். பதவி விலகல் கடிதத்தை இலங்கை அதிபரும் தனது இளைய சகோதரருமான கோத்தபயவிடம் மகிந்த ராஜபக்சே வழங்கியுள்ளார். 2019ம் ஆண்டு முதல் இலங்கை பிரதமராக இருந்து வந்த நிலையில் தற்போது ராஜினமா செய்துள்ளார்.
மகிந்த ராஜபக்சே பதவி விலகளைத் தொடர்ந்து இலங்கை அமைச்சரவை கலைக்கப்பட்டது. ராஜபக்சே ஆதரவாளர்கள், இலங்கை அரசு எதிர்ப்பாளர்கள் இடையே வெடித்த மோதலால் கொழும்பில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனிடையே இலங்கையில் இடைக்கால அரசு அமைப்பது பற்றி அடுத்தகட்ட ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் இடைக்கால அரசு அமைப்பது பற்றி முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.
கடைசி நிமிட செய்தியாக. தென்னிலங்கை முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுது. இலங்கையில் ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என பலரது வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. இதனால் ராஜபக்சே ஆதரவு அரசியல்வாதிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
ஏற்கனவே மகிந்த ராஜபக்சேவின் 2-வது மகன் நாமல் ராஜபக்சே, வெளிநாட்டுக்கு மனைவியுடன் தப்பி சென்றுள்ள நிலையில்.
கொழும்பில் எந்த நிமிடத்திலும் புறப்படுவதற்கு தயார் நிலையில் 5 விமானங்கள் தயாராக உள்ளதாகவும் இந்த விமானங்களை இயக்க 8 விமானிகளும் தயாராக உள்ளதாகவும் என கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை பொதுமக்களின் உக்கிரத்தை எதிர்கொள்ள முடியாமல் ராஜபக்சே சகோதரர்கள் தங்களது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு தப்பி செல்லப் போகின்றனரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆளும்கட்சியைச் சேர்ந்த எம்.பி அமரகீர்த்தி அத்துகொரலா தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.