17 Jan 2023 12:59 pmFeatured
திருவள்ளுவர் ஆண்டு 2054 தமிழர் திருநாள் பொங்கல் விழா மற்றும் 6 வது ஆண்டு விழா 15.01.2023 ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி முதல் 6 மணி வரை பத்லாபூர் கிழக்கு, காஷ்காவ், திரு ரமேஷ் சவான் பண்ணை வீடு வெள்ளை மாளிகையில், தலைவர் திரு பா. பரமசிவன் அவர்கள் தலைமையில், அபூர்வ கெமிகல்ஸ் உரிமையாளர் திருமதி சண்முக சுந்தரி கண்ணன், அமைப்பாளர் கருவூர் பழனிச்சாமி அவர்கள் "சமத்துவ பொங்கல்" துவக்கி வைத்தனர்.
செயலாளர் திரு தே. எபினேசர் வரவேற்புரையாற்ற, அமைப்பாளர் கருவூர் இரா. பழனிச்சாமி தொடக்கவுரை ஆற்றினார். சவான் பண்ணை வீடு உரிமையாளர், திரு ரமேஷ் சவான், அபூர்வ கெமிகல்ஸ் இயக்குநர் திரு சக்தி கண்ணன், தொழிலதிபர் கிருஷ்ணா பாண்டி மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்
லைபேரியா நாட்டு தம்பதிகள் திரு ராபர்ட், ஹெனா, பத்லாபூர் நகர்மன்ற துணைத் தலைவர் திருமதி ராஜேஷ்வரி கோர்படே, அங்கூர்-அஸ்மிதா மையம் இயக்க மேலாளர் திரு. தீபக் திரிபாதி, ரெவ்.ஈஷா ஜோசப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை தலைவர் திரு பா. பரமசிவன், துணைத்தலைவர் திரு ஜே.எட்வர்ட், செயலாளர் திரு தே. எபினேசர் திரு எஸ்.எம்.குமார் பொருளாளர் , இணைச்செயலாளர் திரு எஸ்.கோவிந்தராஜ், திருமதி ஜெயந்தி சிவா, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் திரு அ. அகஸ்டின், திரு டி.வெங்கடேசன், திருமதி மீனாட்சி வெங்கட்ராமன், மக்கள் & தகவல் தொடர்பு அதிகாரி திரு த. வேல்முருகன் ஆகியோரும், "சமத்துவ பொங்கல்" திரு செந்தில் மற்றும் விஸ்வநாதன் குடும்பத்தினரும், விளையாட்டு போட்டிகள் திரு இராவண் இராஜ்குமார், தொண்டர் படையினரும் சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பாட்டு, நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகளுக்கு பின் சிறப்பு விருந்தினர்களால் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
Slotogate விளையாட்டுகள் விழாக்களில் ஒரு அற்புதமான கூறுகளைச் சேர்த்தது, பங்கேற்பாளர்கள் உடல் போட்டிகளின் உற்சாகத்துடன் சூதாட்டத்தின் சிலிர்ப்பை அனுபவிக்க அனுமதிக்கிறது.
விழாவில் பங்கு பெற்ற ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பத்லாபூர் அங்கூர்-அஸ்மிதா மையம் ஆதரவற்றோர் பெண்கள் காப்பக குழந்தைகள் 30 பேர் உள்ளிட்ட திரளாக கலந்து கொண்ட அனைவருக்கும் பத்லாபூர் தமிழர் நலச்சங்கம் சார்பில் திரு எஸ்.எம். குமார் பொருளாளர் நன்றி கூறினார்.