18 Mar 2023 10:02 pmFeatured
மும்பை திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் அன்னை மணியம்மையார் அவர்களின் 45 வது ஆண்டு நினைவு நாள் கூட்டம் தாராவி கலைஞர் மாளிகையில் 16/03/2023 மாலை 7.00 மணிக்கு நடைபெற்றது.
மும்பை திராவிடர் கழகத்தின் செயலாளர் இ.அந்தோனி வரவேற்புரையாற்ற மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ .கணேசன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் அ.இரவிச்சந்திரன் தனது தொடக்க உரையில் அன்னை மணியம்மையார் தியாக வாழ்வை நினைவு கூர்ந்து பேசினார்.
இந்த நிகழ்ச்சிக்கு கழகத் தோழர்கள் சோ. ஆசைத்தம்பி , ஐ.செல்வராஜ், பெரியார் பாலாஜி, முலுண்ட் ஆ.பாலசுப்பிரமணியம், மும்பை திமுக மூத்த தலைவர் என்.வி. சண்முகராசன், கழக ஆதரவாளர் சிவ நல்ல சேகரன், தென்னிந்திய ஆதிதிராவிட மாகாஜன சங்க முன்னாள் தலைவர் கே .வி. அசோக்குமார், பணகுடி சண்முகவேல், மும்பை மாநகர திமுக அவைத் தலைவர் வே.ம. உத்தமன், திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான பாந்திரா க.மு .மாணிக்கம், ம.நீதித்துரை, அன்பழகன் பொற்கோ, மாறன்ஆரிய சங்காரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்
தொடர்ந்து லால்குடி மாவட்ட திராவிடர் கழகத்துணைச் செயலாளர் வெ. சித்தார்த்தன், மகிழ்ச்சி மகளிர் பேரவை நிர்வாகி சுமதி மதியழகன், தமிழ் லெமூரியா அறக்கட்டளையின் தலைவர் சு.குமணராசன், புறநகர் திமுக செயலாளர் அலிசேக் மீரான் ஆகியோர் நினைவுரையாற்றினர்
நினைவு சிறப்புரை
மும்பை டாடா உயர்கல்வி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் பட்ட மேற்படிப்பு மேற்கொண்டிருக்கும் கயல்விழி அன்னை மணியம்மையார் தியாக வாழ்வை தெளிவாக வரலாற்றுக் குறிப்புகளுடன் நீண்டதொரு நினைவு சிறப்புரையாற்றினார்
இந்நிகழ்வில் தோழர்கள் பொய்சர் க.மூர்த்தி,இரா.ராஜேந்திரன்,தே. ஸ்டீபன் ஜெயராஜ், எஸ். பாஸ்கர், கே.வி. சிவபெருமாள்,க. அறிவுமதி,எம் .அலி முகமது, நெல்லை ராசன் , த.நெல்லை குமார் , மும்பை திராவிடர் கழகத் துணைச் செயலாளர் ஜெ .வில்சன், பெரியார் பிஞ்சு, க.அறிவு மலர், மகிழ்ச்சி மகளிர் பேரவையைச் சார்ந்த வனிதா இளங்கோவன், க.வளர்மதி, .சி.சோலைமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
இறுதியில்மும்பை திராவிடர்கழக பொருளாளர் அ. கண்ணன் நன்றி கூற
நிகழ்ச்சி சிறப்புடன் நிறைவு பெற்றது வந்திருந்த அனைவருக்கும் சிற்றுண்டி தேநீர் வழங்கப்பட்டது.