பத்லாபூர் தமிழர் நலச் சங்க 5 வது பொதுப் பேரவை கூட்டம் 14.05.2023 ஞாயிறு மாலை 6.00 மணியளவில் பத்லாபூர் மேற்கு, கிரீன் லான்ஸ், யஷ் அஷ்வினி பவன் அரங்கில், தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கி தலைவர் பா. பரமசிவன் தலைமையில் அமைப்பாளர் கருவூர் இரா. பழனிச்சாமி முன்னிலையில் நடைபெற்றது. செயலாளர் தே. எபினேசர் வரவேற்புரையாற்றினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
- பத்லாபூர் தமிழர் நலச்சங்கத்தின் துவக்க காலம் 2016 முதல் துணைத்தலைவராகவும், பின் 2021 முதல் 2.10.2022 வரை தலைவராகவும் சங்க வளர்ச்சிக்கு உறுதுணையாய் செயலாற்றிய எஸ். அருணாச்சலம் 22.11.2022 அன்று இயற்கையெய்தினார். அவர் மறைவையொட்டி சங்கத்தின் சார்பில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
- 2022 – 2023 ஆண்டு அறிக்கை செயலாளர் தே. எபினேசர் வாசித்தார்.
- 1.04.2022 முதல் 31.03.2023 வரையிலான தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு பொருளாளர் எஸ்.எம். குமார் படித்து காண்பித்து ஒப்புதல் பெற்றார்.
- 80G/12A சான்றிதழ்கள் சங்கத்திற்கு கிடைத்தது, அத்தோடு CSR (Corporate Social Responsibility) Govt. of India Approval (கூட்டாண்மை சமூக பொறுப்பு) இந்திய அரசின் அங்கீகாரம் பெற்றவை, அதன் பலன்கள் பற்றி தலைவர் பா. பரமசிவன் விளக்கிக் கூறினார்.
- 2.04.2023 அன்று நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் PROPERTY & FINANCE COMMITTEE “சொத்து மற்றும் நிதிக்குழு” என்ற துணைக்குழு உருவாக்கி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அக்குழுவிற்கான பொறுப்புகள், வங்கி கணக்கு துவக்குதல் போன்றவை அங்கீகரித்தல், மற்றும் சங்கப் பதிவில் முகவரி மாற்றம், தலைவர் அருணாச்சலம் மறைவிற்குப் பின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகப்பட்டியல் ஆகியவை CHARITY COMMISSIONER, THANE தொண்டு ஆணையம், தானேவில் பதிவு செய்ய ஒப்புதல் பெறப்பட்டது.சொத்து & நிதிக் குழு (Property & Finance Committee), ஜே. எட்வர்டு, தலைவர், எஸ். பழனியப்பன், துணைத்தலைவர், கருவூர் இரா. பழனிச்சாமி, செயலாளர், விஜய்ரக்சித் துணைச்செயலாளர், த. வேல்முருகன், பொருளாளர் மற்றும் டி. வெங்கடேசன், E. ஆனந்த் ராஜ், P. ராஜ் குமார், K. வெற்றிவேல் ஆகியோர் குழு உறுப்பினர்களுக்கான ஒப்புதல் பெறப்பட்டது.
- வெளி நாடு வெளி மாநிலத் தமிழர் நலன்களுக்காக அயலகத் தமிழர் நல வாரியம் அமைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மான்புமிகு மு.க. ஸ்டாலின் , அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள அலிசேக் மீரான் ஆகியோருக்கு பத்லாபூர் தமிழர் நலச்சங்கம் நன்றி பாராட்டி தீர்மானம் நிறைவேற்றியது.
22.04.2023 அன்று பாண்டுப் பிரைட் மேல் நிலைப்பள்ளி தேவதாசனார் அரங்கில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் மாண்புமிகு மு. அப்பாவு தலைமையில் நடைபெற்ற மும்பைத் தமிழ் அமைப்புகள் சார்பில் நன்றி பாராட்டும் விழாவில் கலந்து கொண்ட 60 அமைப்புகளில் பத்லாபூர் தமிழர் நலச்சங்கமும் ஒரு அங்கமாக இருந்தது என்பதையும் அதில் அமைப்பாளர் கருவூர் இரா. பழனிச்சாமி, தலைவர் பா. பரமசிவன், துணைத்தலைவர் ஜே.எட்வர்டு, மக்கள் & தகவல் தொடர்பு அதிகாரி த. வேல்முருகன், விஜய்ரக்சித் ஆகியோர் கலந்து கொண்டு கொண்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது.
ஜெயந்தி சிவா, ஹரேசி, இராவண் ராஜ்குமார், மற்றும் பலரின் கருத்துரைகள் ஏற்கப்பட்டது.
இறுதியில் சொத்து & நிதிக் குழு தலைவர் ஜே. எட்வர்டு நன்றி கூற தேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.
சன்ரைஸ் ஹேப்பி சில்ரன் ஹோம் (Sunrise Happy Children Home) சுமார் 5 வயது முதல் 10 வயதிற்கு உட்பட்ட ஆதரவற்ற இல்ல 40 குழந்தைகளுக்கும், பொதுப் பேரவையில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது