21 Jul 2023 6:44 pmFeatured
கவிஞர் கா. பாபுசசிதரன், சென்னை
மனு ஆளும் தேசத்தில்
மண்ணின் மகள்கள்
மானபங்கப்படுவதில்
ஆச்சரியம் இல்லை
சமூக நீதி
செத்த தேசத்தில்
சங்கிகளின் அட்டூழியம்
நடப்பதில் வியப்பில்லை
சபையில் துகில் உரித்ததைச்
சரித்திரமாய்
வைத்திருக்கும் தேசத்தில்
சாலையில் துகில் உரிப்பது
ஒன்றும் புதிதில்லை
தன்நாட்டு மகளுக்கு
நிர்வாணத்தைக் கொடுத்துவிட்டு
வெளிநாட்டு மகளுக்குப்
பட்டுப் புடவை கொடுக்கிறான்
இந்நாட்டு தலைவன்
இதயமில்லா தலைவன் ஆளும்
இந்நாட்டில்
இணையத்தைத் துண்டிக்கிறது
இந்திய நாடு
தன் மகளை
நிர்வாணப்படுத்தி
அழைத்துச் செல்கிறார்கள்
அனைத்து அட்டூழியங்களுக்கும்
அமைதியாகவே இருக்கிறாள்
செயலற்ற தலைமகள்
சூறையாடுவதைப் பார்த்தபடியே
பட்டொளி வீசிப் பறக்கிறது
தன் குடிமகள்களின்
நிர்வாணத்தைக் கூட
மறைக்க முடியாத
தேசியக்கொடி
முகநூலில்
ஒருவன் கேட்கிறான்
"தமிழர்கள்" மட்டும்
ஏன் கொந்தளிக்கிறார்கள்
தெரு நாய்களுக்கு
எப்படித் தெரியும்
மாராப்பு வரி போட்ட
அதிகாரத்திற்கெதிராக
தன் தனம் அறுத்தவள்
தமிழச்சி என்று…
சுதந்திர இந்தியா என்றே
பிரகடனப்படுத்தப்பட்ட
இத்தேசத்தில்
இன்னும்
சுதந்திர தாகம் தணியாமலே
இருக்கிறார்கள்
"பாரத மாதாக்கள்..!!"
பெண்ணுக்கு எதிரான கொடுமை எங்கு நடப்பினும் மனம் பதறுகிறது.மணிப்பூர் சம்பவம் ஒவ்வொரு இந்தியனுக்கும் தலைக்குனிவு.ஆனால் கவிதை அந்த வேதனையை விட ஒரு அரசியல் கட்சியை சாடியும்,ஒரு மதத்தினர் உணர்வை புண்படுத்தியும் மகிழ்வது போல் உணர்கிறேன்.நல்ல கவிஞர்கள் நடை சற்று மாறுபடும் வேதனயும்,மணிப்பூர் கவலையுடன் சேர்ந்து கொள்கிறது.
சவுக்கடி கவிதை.
எருமை மாடுகளுக்கு வலிக்குமா?