26 Jan 2024 4:02 pmFeatured
மும்பை: மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் 24வது ஆண்டு விழா, கலை இலக்கியப் பொங்கல் பெருவிழா, நூல்கள் வெளியீடு மற்றும் விருதுகள் வழங்கும் விழா பாண்டுப் மேற்கு பிரைட் மேல்நிலைப்பள்ளியில் தேவதாசனரார் குளிர் அரங்கத்தில் 27-01-2024 அன்று காலை 10 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் பாவரசு வதிலை பிரதாபன் தலைமை தாங்குகிறார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் விருது வழங்கி விழாப் பேருரையாற்றுகிறார், ஆஸ்திரேலியா சிட்னி தமிழ் கலைமன்ற நிர்வாகி திரு இரத்தினம் மகேந்திரன் தொடக்கவுரையாற்றுகிறார்.
அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினர் திரு. அலிசேக் மீரான் மகிழ்வுரையும், இலெமூரியா அறக்கட்டளை நிறுவனர் திரு. சு.குமணராசன் மற்றும் மும்பைத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.எஸ்.ராமதாஸ் ஆகியோர் வாழ்த்துரையும் வழங்குகின்றனர்.
தமிழ் எழுத்தாளர் மன்ற நிர்வாகக்குழு செயலாளர் வே.சதானந்தன் வரவேற்புரையாற்றுகிறார்.
தமிழ் எழுத்தாளர் மன்ற முன்னணி பேச்சாளர் நற்றமிழ் நாவரசி பிரவீனா சேகர், கலைப்பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் இசைத் தமிழ்ப் பேரரசி ராணி சித்ரா, முனைவர் வே.ஸ்ரீலதா ஆகியோர் நெறியாள்கையை கையாள்கின்றனர்.
நூல்கள் வெளியீடு
தமிழ் எழுத்தாளர் மன்ற சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் க.கணேசன் எழுதிய ‘வள்ளுவத்தில் குறளறிவும், பேரறிவும்’ என்ற நூலும், தமிழ் எழுத்தாளர் மன்ற முன்னாள் ஆலோசகர் முனைவர் ஜி.வி பரமசிவம் எழுதிய ’ஹைக்கூ 101’ என்ற நூலும் வெளியிடப்படுகிறது.
முதல் நூலின் முதல் பிரதியை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பன்னிருகை வடிவேலனும் கவிதைத் தொகுப்பின் முதல் பிரதியை தமிழ் வளர்ச்சித் துறையின் மேனாள் அமைச்சரின் தனிச் செயலாளர் ஞானமும் பெற்றுக் கொள்கிறார்கள்.
பட்டிமன்றம்
நண்பகல் 2 மணிக்கு மக்களைப் பெரிதும் மகிழ்வூட்டுவது கலையா! இலக்கியமா! என்ற தலைப்பில் நடைபெறும் பட்டிமன்றத்திற்கு புதுக்கோட்டை தமிழ்ச் சங்க செயலாளர் முனைவர் மகா சுந்தர் நடுவராக கலந்து கொள்கிறார்.
கலையே என்று சொற்போர் திலகம் புவனா வெங்கட், நற்றமிழ் நாவலர் செல்வி ராஜ், கவிச்சுடர் ஜி.வி பரமசிவம் ஆகியோரும்…
இலக்கியமே! என்று சொல் வேந்தர் மிக்கேல் அந்தோணி, நற்றமிழ் நாவரசி பிரவினா சேகர், முனைவர் ப.செந்தில் முருகன் ஆகியோர் வாதிடுகிறார்கள்.
கவியரங்கம்
இதனைதொடர்ந்து ’பொங்கட்டும் மனிதம்’ என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெறுகிறது. இந்த கவியரங்கத்திற்கு ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி பேராசிரியரும், தமிழ் எழுத்தாளர் மன்ற ஆலோசகருமான முனைவர் மு.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்குகிறார்.
அன்பு நதியில்’ என்ற தலைப்பில் கவிஞர் அரியக்குடி மெய்யப்பன், ‘அறிவு வழியில்’ என்ற தலைப்பில் பாவலர் முகவை திருநாதன், ’பண்பு மழையில்’ என்ற தலைப்பில் கவிமாமணி இரஜகை நிலவன், ’காதல் விழியில்’ என்ற தலைப்பில் கவிஞர் வ.இரா தமிழ்நேசன், ‘உறவு வழியில்’ என்ற தலைப்பில் கவிஞர் வெங்கட் சுப்பிரமணியன், ’கனவு நனைவில்’ என்ற தலைப்பில் முனைவர் சி.மார்க்கண்டன், ‘கவிதை மொழியில்’ என்ற தலைப்பில் முனைவர் டி.தேன்மொழி ஆகியோர் கவிபாடுகின்றனர்.
விருதுகள்
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து கலை, இலக்கியம் மற்றும் சமூகப் பணியாற்றுபவர்களான விருதுகள் வழங்கப்படுகின்றன.
மாணாக்கர்களுக்கு பரிசு வழங்கல்
கடந்த 7.01.2024 அன்று நடைபெற்ற பேராசிரியர் சமீரா மீரான் நினைவுப் பேச்சுப் போட்டி மற்றும் சீர்வரிசை சண்முகராசனார் நினைவுக் கட்டிரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணாக்கர்களுக்கு ரொக்கப் பரிசும் வெற்றிச் சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.
தமிழ் எழுத்தாளர் மன்ற கலைப்பிரிவினரின் திரையிசைப் பாடல்களும் தமிழிசை நடனங்களும்
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்ற கலைப்பிரிவினரின் திரையிசைப் பாடல்களும் தமிழிசை நடனங்களும் நடைபெறுகிறது. இதில் கலைப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் டி.எம்.எஸ் நரசிம்மன், இசையமைப்பாளர் ஆர்.டி ராஜன் குழுவினர், இசைத்தமிழ்ப் பேரரசி, இசையமுது வாணிஸ்ரீ வேணுகோபால், செந்தமிழ் கலைச் செம்மல் திருமதி. பத்மினி ராதாகிருஷ்ணன், பாடகர்கள் சத்யநாராயணன்.எஸ், திருமதி மல்லிகா பன்னீர்செல்வம், திருமதி.லதா சுரேஷ் ஆகியோரும் மற்றும் செல்வி யாழினி ஸ்ரீகுணசேகரன், பொறியாளர் சு.சுபாஷினி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மும்பை பிரபலங்கள் கருவூர் இரா. பழனிச்சாமி, பி.கிருஷ்ணன், மா.கருண், வே.ம உத்தமன், காசிலிங்கம், டி.அப்பாதுரை, அ.இளங்கோ, பேலஸ் துரை, அ.ரவிச்சந்திரன், ஜான் கென்னடி, ராஜா இளங்கோ, அண்ணாமலை, செல்வராஜ், என்.வி சண்முகராசன், முத்தமிழ் தண்டபாணி, தாசன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
நிகழ்ச்சியின் நிறைவில் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் கு.மாரியப்பன் நன்றியுரையாற்றுகிறார்.
Very much appreciable.Best wishes.