21 May 2024 5:50 pmFeatured
S.D.சுந்தரேசன், I.A.S (அரசுச் செயலர், அருணாச்சலப்பிரதேசம்)
(12) ஆளுமையை சோதிப்பதற்கான நேர்முகத் தேர்வு
முதன்மை எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அனைவரும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர் . நேர்முகத் தேர்வு 275 மதிப்பெண்களுக்கு நடைபெறுகிறது. முதன்மை எழுத்துத் தேர்வில் 1750 மதிப்பெண்களுக்கு போட்டியாளர் பெறும் மதிப்பெண்களோடு நேர்முகத் தேர்வில் 275 மதிப்பெண்களுக்கு அவர் பெறும் மதிப்பெண்கள் கூட்டப்படுகிறது. மொத்தம் உள்ள 2025 மதிப்பெண்களுக்கு தாம் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் அனைவரும் வரிசைப்படுத்தப்படுகின்றனர். இவர்களிலிருந்து இறுதியாக அந்த ஆண்டு எத்தனை வேர் பல்வேறு சிவில் சர்வீஸ் பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமோ அத்தனை பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
நேர்முகத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் தொடங்கி சுமார் ஒன்றரை மாதங்கள் நடைபெற்று மே மாத இறுதி வாரம் வரை நீடிக்கும். முதன்மை எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றோர் அவர்களின் வரிசை எண்களின் (Roll Numbers) அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர். நேர்முகத்தேர்வு டெல்லியில் மட்டுமே நடைபெறும். டெல்லியில், ஷாஜகான் சாலையிலில் உள்ள UPSC அலுவலகம்தான் நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்
எவற்றைப் பற்றி தயார் செய்வது?
நேர்முகத் தேர்வுக்கு வருவோரிடம் கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் அவர்களோடு தொடர்புடையதாகவும் சமீப காலத்து நாட்டு நடப்புகளைப் பற்றியதாகவும் இருக்கும். எனவே நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வோர் கீழ்க்கண்டவை பற்றிய முழு விபரம் அறிந்தவராக இருக்க வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ளவை பற்றிய முழு விபரமும் அறிந்திருப்பது மிகவும் இன்றியமையாதது. இவை தொடர்பான செய்திகளை அறிந்த பிள்னர்தான் நேர்முகத் தேர்வில் சிறந்த முறையில் பதில்கூறி நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற முடியும் என்ற முழு நம்பிக்கையினை நேர்முகத் தேர்வுக்குச் செல்வோர் பெற முடியும்.
எவ்வாறு தயார் செய்வது?
முதன்மை எழுத்துத் தேர்வின் முடிவுகள் வெளியான பின்னர்தான் பிள்னர்தான் நேர்முகத்தேர்வுக்குத் தயார் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட வேண்டாம். ஏனெனில் முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியானதற்கும் நேர்முகத்தேர்வு தொடங்குவதற்கும் சுமார் பதினைந்து அல்லது இருபது நாட்களே இ இருக்கும். இந்த இடைப்பட்ட சில நாட்களில் தமக்குத் தேவையான முழு விபரத்தையும் சேகரிப்பது இயலாத காரியம். எனவே, முதன்மை எழுத்துத் தேர்வு முடித்த சில நாட்களிலேயே தேர்முகத் தேர்வு பற்றி சித்தித்து அதற்காக யார் செய்யத் தொடங்குவது நல்லது.
• முதலில் முதன்மை எழுத்துத் தேர்வு விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விபரங்கள் பற்றி முழுமையாகத் தெரிந்து அவை தொடர்பான கேள்விகளுக்கு ஆயத்தமாகிவிட வேண்டும்.
• தமிழக அரசின் திட்டங்கள் போன்ற செய்திகளை அறிய வேண்டுமாயின், அதற்கு முந்தைய ஓராண்டுக்கான "தமிழரசு" பத்திரிகையை வாங்கிப் படிக்கலாம்.
• சென்னையில் தமிழ்நாடு அரசுத் தலைமை செயலகத்தில் உள்ள உள்ள பல துறைகளின் இயக்குநர்களை நேரில் சந்தித்து விபரங்கள் பலவற்றை அறியலாம்.
• தமிழ் மொழி, இலக்கியம், தமிழ்நாட்டு வரலாறு பண்பாடு தொடர்பான புத்தகம் ஒன்றைக் கண்டிப்பாக படித்து விடுவது நல்லது
• நாட்டு நடப்புகள் மற்றும் உலக விவரங்கள் பற்றி நன்கு அறிவதற்கு முதன்மை எழுத்துத் தேர்வு முடிந்ததிலிருந்து குறைந்தது இரண்டு நாளேடுகளை தினமும் வாசித்தல் அவசியம். தமிழக மாணவர்களுக்கு இவ்வகையில் "ஹிந்து", இந்தியன் எக்ஸ்பிரஸ்" ஆகிய இரண்டும் பயன்படும்.
• ஓராண்டுக்கான "ஃபிரன்ட் லைன்" பத்திரிக்கையை வாசித்தல் பல பிரச்சனைகளின் முழு பரிமாணத்தையும் அறிய முடியும்.
• தினமும் வானொலி மற்றும் தொலைக்காட்சியின் செய்திகள், கலந்துரையாடல், விவாதங்கள் போன்றவற்றைக் கேட்பது பயன்தரும்.
• உலக நடப்புகள் பற்றி முழுமையாகவும். உடனுக்குடனும் அறிய BBCயின் வானொலி மற்றும் தொலைக்காட்சியின் செய்திகள் மிகவும் பயன்தருவன.
மேற்கண்டவை. தவிர நேர்முகத்தேர்வு தொடர்பாக அவரவர் வாய்ப்பு வசதிகளுக்கேற்ப எதை வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம். ஆதிகமாக வாசித்துக் கொண்டிருப்பதைவிட ஒரு விஷயம் குறித்து ஓரளவிற்குத் தெரிந்து கொண்டபின், அது தொடர்பாகப் பல கோணங்களில் சிந்திக்க வேண்டும். அவ்விஷயம் குறித்து மற்றவர்களோடு கலந்துரையாடுவதும் விவாதிப்பதும் நேர்முகத்தேர்வுக்கு அதிகம் பயன்படுவதாக அமையும். நண்பர்களுக்குள் மாதிரி இன்டாவியூ (Mock Interview) ஏற்பாடு செய்வதும் நல்ல பயன்தரும்.
எந்த உடை அணியலாம்:
தேர்வுக்குச் செல்வோரின் உடையைவிட அவர் கூறும் பதிலுக்குத்தான் முக்கியத்துவம் உண்டு. எனினும் உடுத்திச் செல்லும் உடையில் கவனம் செலுத்துவது நலமே.
உடுத்திச் செல்லும் உடை நமக்குப் பழக்கமானதாகவும் தேர்வாளாகளின் கவனத்தைத் திசைதிருப்பாததாகவும் இருக்க வேண்டும். சாதாரணமாக சம்பிரதாய உடையில் (Formal Dress) செல்வது நல்லது.
ஆண்களாயின் முழுக்கை மேல்சட்டையும் பேன்டும் (Pant) அணிந்து லெதர் ஷூ(Leather Shoe)
போட்டுச் செல்வது அவசியம். டை-கோட் அணிந்து பழகியவர்களாயின் அவற்றை அணிந்து செல்லலாம்.
பெண்கள் சேலை மற்றும் சுடிதார் அணிந்து செல்வது உகந்தது உடுத்தித் செல்வது நல்லது. பெரும்பாலானோர் இவ்வுடையில்தான் வருகிறார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் விதம்:
முதன்மை எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர். இதனை ஆனுமையைச் சோதிப்பதற்கான நேர்முகத்தேர்வு (Interview for Personality Test) என்ரு குறிப்பிடுகின்றனர்.
நேர்முகத் தேர்வுக்கு வருபவர் பொதுப்பணியில் திறம்படச் செயலாற்றக் கூடிய தகுதி பெற்றவர் தானா? என்று சோதிக்கின்றனர். இவ்வாறு சோதிப்பதற்குத் திறமை மிக்க நடுநிலையான அறிஞர் குழுவினர் துணை செய்கின்றனர். நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளும் போட்டியாளரின் அறிவுநிலையை மட்டுமல்லாது அவர்தம் சமுதாயப் பார்வை, அன்றாட நாட்டு நடப்புகளை அறிந்து கொள்வதில் அவருக்கு உள்ள ஆர்வம் போன்றவற்றையும் சோதிக்கின்றனர். ஒரு விஷயத்தை எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய திறன். புரிந்து கொண்டதைத் துருவி ஆராயும் திறன் ஆராய்ந்தவற்றில் தெளிவு, நடுநிலையோடு முடிவெடிக்கும் தன்மை, பலதரப்பட்ட புதிய செய்திகளை அறிந்துகொள்ளுவதில் உள்ள ஆர்வம். சமுதாயத்தோடு ஒட்டி ஒழுகக்கூடிய தன்மை, தலைமை ஏற்றுச் செயல்படக்கூடிய பாங்கு, அறிவும் ஒழுக்கம் சேர்ந்த மன உறுதி போன்ற தன்மைகளை ஆய்வு செய்யவே இந்த நேர்முகத்தேர்வினை ஏற்பாடு செய்துள்ளனர்.
குறுக்குத் கேள்வி கேட்டு மடக்குவது இதன் நோக்கமன்று. இயற்கையாகவும், அதே சமயத்தில் போட்டியாளரின் மனநிலை மற்றும் அறிவுத் திறனை அறியும் வகையிலும், இந்த நேர்முகத் தேர்வு அமைந்திருக்கும்.
நேர்முகத் தேர்வு என்பது பொது அறிவுக்கான தேர்வு அன்று. போட்டியாளர்களின் பொது அறிவை ஏற்கனவே முதன்மை எழுத்துத் தேர்வில் சோதித்துவிட்டனர். நேர்முகத் தேர்வுக்கு வருபவர் தம் கல்லூரிப் பாடங்கள் தவிர. படித்த இளைஞர் ஒருவரின் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய அன்றாட உலக நிகழ்வுகள் மற்றும் உள்நாட்டின் நிகழ்வுகள் தற்கால சிந்தனை ஓட்டங்கள். புதிய கண்டுபிடிப்புகள் போன்றவற்றில் எந்த அளவுக்கு ஆர்வம் உள்ளவராக இருக்கிறார்கள் என்பதை அறியும் வகையிலேயே தேர்முகத் தேர்வு அமைந்துள்ளது.
நமக்கான குறிப்பிட்ட நேரம் வந்ததும் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அலுவலர் ஒருவரால் நேர்முகத் தேர்வு நடைபெறும் அறைக்கு அழைத்துச் செல்லப்படுவர். சென்றதும், அறைக்கு வெளியில் போடப்பட்டிருக்கும் இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும். அழைப்புமணி ஒலித்ததும் நமக்கு வழிகாட்டிய அலுவலர் தேர்வு அறையின் கதவைத் திறந்து நம்மை உள்ளே அனுப்புவார்.
நாம் இன்டாவியூக்கு நன்றாக தயார் செய்திருக்கிறோம். நாம் சிவில் சர்வீஸ் இன்டர்வியூக்குச் செல்வது நமது உரிமை, இன்டர்வியூ குழுவில் உள்ள அறிஞர்கள் நம்மை உயர்ந்த பதவிகளுக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். நாம் சிறிதும் பயம் கொள்ள வேண்டியதில்லை. நாம் மிகவும் உண்மையோடும் திதானத்தோடும் செயல்படவேண்டும் என்று பலமுறை நமக்குள் நினைத்துக் கொண்டால் நேர்முகத் தேர்வில் நமக்கு எந்த பயமும் இருக்காது.
ஒவ்வொரு நேர்முகத் தேர்வுக் குழுவிலும் (Interview Board) UPSCயின் உறுப்பினர் (Member) தலைவராக (Chaiman) இருப்பார். அவருக்கு உதவியாகப் பல்துறை வல்லுநர்கள் (Experts) நான்குபேர் அமர்ந்திருப்பார்கள். தேர்வுக்குழுவின் தலைவர் (Board Chairman) நடுவிலும் அவருக்கு இரு பக்கங்களிலும் பக்கத்துக்கு இருவராக பல்துறை வல்லுநர்கள் அமர்ந்திருப்பர். இவர்களுக்கு முன் பெரிய மேசை ஒன்று போடப்பட்டிருக்கும். தேர்வுக் குழுவின் தலைவருக்கு நேர் எதிரில் மேசையின் மறுபக்கத்தில் நேர்முகத் தேர்வுக் வரும் போட்டியாளர் அமர்வதற்கான இருக்கை போடப்பட்டிருக்கும்.
நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு போட்டியாளரைப் பற்றிய முழுவிபரமும் தேர்வுக் குழுவினரிடம் இருக்கும். கேள்விகள் பொதுவாகப் நடப்புகள் பற்றிய கேள்ளிகளும் கேட்கப்படும்.
நேர்முகத் தேர்வு பொதுவாக 30 நிமிடங்களுக்கு நடைபெறும் . சிலருக்கு இது ஓரிரு நிமிடங்கள் குறைவாகவோ, கூடுதலாகவோ நடைபெறலாம். தேர்வு நடைபெறும் போதே காபி, தேநீர் போன்றவை தேர்வுக் குழுவினருக்கு வழங்கப்படுமாயின் தேர்வுக்கு வந்திருப்போருக்கும் அதை வழங்குவதுண்டு. போட்டியாளர் தாம் கூறும் பதிலுக்கு தடங்கல் இல்லாமல் அவற்றை நிதானமாக அருந்துவதில் தவறில்லை.
தேர்வுக்குழுவினர் கேட்டும் கேள்விகளுக்குப் போட்டியாளர் தமக்குத் தெரிந்தவகையில் தெளிவாகப் பதில் கூற வேண்டும். தெரியாதவற்றைத் தெரியவில்லை என்று தைரியமாகத் கூறிவிடுவது நல்லது. தெரியாதவற்றைப் பற்றித் தெரிந்ததுபோல் காட்டிக்கொள்வதோ. பொய் கூறுவதோ கூடாது. மொத்தத்தில் உண்மையுடனும், நிதானத்துடனும் தெளிவாகவும் யோசித்து பதில் கூறினால் நேர்முகத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளது.
நேர்முகத்தேர்வு நடைபெற்ற பின்னர் அதில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை நடைபெறும். பொதுவாக இப்பரிசோதனை நேர்முகத்தேர்வு நடைபெற்ற பின்னர் அதில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை நடைபெறும். பொதுவாக இப்பரிசோதனை நேர்முகத் தேர்வுக்கு மறுநாள் செய்யப்படும். போட்டியாளரின் உடல்நிலையில் கடுமையான பாதிப்பு எதுவும் இல்லாமல் இருப்பின் தேர்வு பெறுவதற்கு மருத்துவப் இப்பரிசோதனை ஒரு தடங்கலாக அமையாது. டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைகள் ஒன்றில் இப்பரிசோதனை நடைபெறுகிறது.
அடுத்து வரும் அத்தியாத்துடன் நீங்களும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகலாம்" எனும் தொடர் நிறைவு பெறுகிறது.