01 Aug 2019 10:31 amFeatured
மதுரை புட்டுத்தோப்பு மைதானத்தில் வைகைப் பெருவிழா 2019 என்ற 12 நாள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஒவ்வொரு நாளும் துறவிகள் மாநாடு, பெண்கள் மாநாடு, வைஷ்ணவ மாநாடு, ஐயப்பப் பக்தர்கள் மாநாடு, பூசாரிகள் மாநாடு, சிவனடியார்கள் மாநாடு, பசு பாதுகாப்பு மாநாடு, முத்தமிழ் மாநாடு, இளைஞர்கள் மாநாடு, நதிநீர்ப் பாதுகாப்பு மாநாடு, விவசாயிகள் மாநாடு, சன்மார்க்கர்கள் மாநாடு, சித்தர்கள் மாநாடு என நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் பசு பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கலந்து கொண்டார். அவர் கூறுகையில் மதுரையில் பசு பாதுகாப்பு மாநாடு நடைபெறுவதை ஒரு சிலருக்கு பிரச்சினையாக நினைக்கின்றனர்.
நிஜத்தில் நான்தான் அண்ணாமலை
‘’நான் பிறந்ததே மாட்டுத்தொழுவத்தில்தான். நானே பால் கறந்து வீடு வீடாகச்சென்று பால்கொடுத்துதான் படித்தேன். அதனால்தான் சொல்கிறேன் ரஜினிகாந்த் ரீல் லைப்பில் அண்ணாமலை என்றால் நான் ரியல் லைப்பில் அண்ணாமலை’’என்று தெரிவித்தார். சினிமாவில் வேண்டுமானால் ரஜினி அண்ணாமலையாக இருக்கலாம். ஆனால் நிஜத்தில் நான்தான் அண்ணாமலை. மாட்டுத் தொழுவத்தில்தான் பிறந்தேன்.
பசுவின் உடலினுள் 13000 தெய்வங்கள் உள்ளன. எனவே பசுவும் மற்ற விலங்குகளும் ஒன்றல்ல.
இடதுசாரி, தமிழ்த் தேசியம் என மக்களின் மூளை குப்பைத் தொட்டியாக மாற்றப்படுவதை தடுக்க வேண்டும் என எச் ராஜா தெரிவித்தார்.