03 Aug 2019 1:10 pmFeatured
கடந்த சிலநாட்களாக மும்பை மற்றும் புறநகரில் கனத்த மழை பெய்து வருகின்றது. நேற்றிலிருந்து பெய்து வரும் கனமழையால் மும்பை,தானே,பால்கர்,ராய்கட் மற்றும் ரத்தினகிரி பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில், சாலைகளில் சப்வேக்களிலும் மூன்று முதல் 5 அடிவரை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது.
மும்பைவிமான நிலையத்தில் விமானங்கள் சுமார் 30 நிமிடம் முதல் ஒருமணிநேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. மத்திய மற்றும் மேற்கத்திய இரயில்கள் தண்டவாளங்களில் வெள்ளம் பெருக்கு காரணமாக மெதுவாக இயக்கப்பட்டு வருவதால் சுமார் அரைமணிநேரம் வரை தாமதமாக இயங்கிவருகிறது. வழக்கத்தை விட குறைவான எண்ணிக்கையில் இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன
சிகப்பு எச்சரிக்கை
மும்பையில் சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழைபெய்து வருவதுடன் 1.44 மணிக்கு உயர் அலை (High-Tide) 4 முதல் 5 மீட்டர் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்ப்பதால் கடலுக்கு அல்லது கடற்கரைக்கு, காயல்(காடி) மற்றும் தாழ்வான வெள்ள பெருக்கு ஏற்படும் பகுதிகளுக்கு மக்கள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
பால்கர் பகுதியில் பல வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது, பால்கர் சூரியா அணையிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது