05 Aug 2019 10:39 amFeatured
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து வெளிமாநிலத்தவர் டிக்கெட் எடுக்க கூட தேவையில்லை என்றும், உடனே வெளியேறுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழலில் காரணமாக வெளிமாநிலத்தவர் வெளியற்றப்பட்டு வருகிறார்கள்.
அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக பிரித்து சிறப்பு அந்தஸ்தை ரத்தா?
மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக பிரித்து சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும்முடிவில் இருப்பதாக அம்மாநில மக்களிடையே அச்சம் நிலவிவருகிறது. வரும் சுதந்திர தினத்துக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் பிரிக்கப்படும் என காஷ்மீர் மாநிலம் முழுவதும் காட்டுத்தீ போல் தகவல் பரவி வருகிறது
இந்நிலையில் அம்மாநில அரசியல் கட்சி தலைவர்கள் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தால் மக்களை ஒன்றுதிரட்டி போராடுவோம் என்று கூறிவருகிறார்கள். காஷ்மீரில் மிக அசாதாரண சூழல் நிலவுவதையடுத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு ஸ்ரீநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசியல் தலைவர்கள் வீட்டுகாவலில் வைப்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த மாநில முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொலைதொடர்பு மற்றும் இணையதள சேவை முற்றிலும் நிறுத்தப்படுள்ளது.
ரயிலில் டிக்கெட் கூட எடுக்க வேண்டாம்.. ஜம்மு காஷ்மீரை விட்டு உடனே வெளியேறுங்கள்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து வெளிமாநிலத்தவர் டிக்கெட் எடுக்க கூட தேவையில்லை என்றும், உடனே வெளியேறுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழலில் காரணமாக வெளிமாநிலத்தவர் வெளியற்றப்பட்டு வருகிறார்கள்.
சுற்றுலாப்பயணிகள், அமர்நாத் யாத்திரைக்காக வந்தவர்கள், அங்கு தங்கி படிக்கும் வெளிமாநில மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து வெளிமாநிலத்தவரும் உடனே ஜம்மு காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் பேர் ஜம்மு காஷ்மீர் மாநில ரயில் நிலையத்தில குவிந்து வருகிறார்கள். இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஜம்மு உதம்பூர், கத்ரா ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் ரயில்களில் டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டதால் அனைத்து வெளிமாநில பயணிகளும் சொந்த ஊர் திரும்பிக் கொணடிருப்பதால் டிக்கெட் பரிசோதனையில் எந்த கெடுபிடியும் காட்ட வேண்டாம் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் கசிகிறது. டிக்கெட் இல்லாமல் கூட காஷ்மீரிலிருந்து வெளி மாநிலத்தவர் வெளியேற வசதி செய்யப்பட்டுள்ளது.