31 Aug 2019 5:24 pmFeatured
ஏற்கனவே ரூ.20 மற்றும் ரூ.40 சேவைக்கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. பணமதிப்பிழப்புக்கு பின் பணமில்லா டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் 3 ஆண்டுகளாக சேவை கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இனி குளிர்சாதன வசதியற்ற பெட்டிகளுக்கு
முன்பதிவு செய்ய ரூ.15, குளிர்சாதன வகுப்புகளுக்கு ரூ.30 சேவை
கட்டணமாக செப்டம்பர்- முதல் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் கட்டணம், முன்பதிவு கட்டணத்துடன் இணைத்து ஜி.எஸ்டி கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.