11 Sep 2019 10:27 amFeatured
மும்பை மாணவி ஸ்வேதா ஸ்ரீ க்கும் பரிசு
பேரறிஞர் அண்ணா அவர்களின் 111வது பிறந்தநாளை முன்னிட்டு முரசொலி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்பித்தல் இறுதிநிலைப்போட்டிகள் கடந்த 6,7 ஆகிய இருதினங்களில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
கடந்த 6ம் தேதியன்று நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற இறுதிநிலைப்போட்டிக்கு தலைமை இலக்கிய அணித் தலைவர் முகவை.மு.தென்னவன் தலைமை தாங்கினார். தலைமை இலக்கிய அணிச் செயலாளர் புலவர் இந்திரகுமாரி முன்னிலை வகித்தார். தலைமைக்கழகப் பேச்சாளர் கந்திலிகரிகாலன் தொகுத்து வழங்கினார். தலைமை இலக்கிய அணித்துணைச் செயலாளர் ஈரோடுஇறைவன் வரவேற்புரை ஆற்றினார். சென்னை மேற்கு மாவட்டக் கழகச்செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ, தலைமை இலக்கிய அணி துணைத்தலைவர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்.
மாலை 4 மணியளவில் இறுதிநிலைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது. இலக்கிய அணி இணைச் செயலாளர் வி.பி.கலைராஜன், இலக்கிய அணிப் பொருளாளர் நா.சந்திரபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் ஆர். எஸ்.பாரதி,எம்.பி, சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாதவரம் எஸ். சுதர்சனம்,எம்.எல்.ஏ ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். தலைமைக் கழகச் செயலாளர்கள் துறைமுகம்காஜா, பூச்சிமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். போட்டி நடுவர்களாக புதுக்கோட்டைவிஜயா, நந்தனம்நம்பிராஜன், வழக்கறிஞர் ந.செந்தில் ஆகியோர் செயல்பட்டு பரிசுக்குரியவர்களை தேர்வு செய்தனர்.
மும்பை மாணவிக்கும் பரிசு
புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி எஸ்.மகாநிவேதிதா முதல் பரிசையும் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி மு.ச.பிரஷா இரண்டாம் பரிசையும் திருச்சி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் எஸ்.வி.ஹரிகரன் மூன்றாம் பரிசையும் ஆறுதல்பரிசுகளை மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் ஆ.சி.கார்த்திக் , சேலம் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் க.சர்மா , மும்பை புறநகர் மாநிலத்தைச் சேர்ந்த சுவேதா ஸ்ரீ குணசேகரன் ஆகியோர் பெற்றனர்.
சென்னை மேற்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தி.நகர் பி. பொன்னுரங்கம், சென்னை வடக்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ரெயின்போ விஜயகுமார் ஆகியோர் நன்றியுரை ஆற்றினர். 7ம் தேதி நடைபெற்ற கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற இறுதிநிலைப்போட்டிக்கு தலைமை இலக்கிய அணிப் புரவலர் கவிவேந்தர் கா. வேழவேந்தன் தலைமை தாங்கினார். தலைமை இலக்கிய அணித்துணைச் செயலாளர்கள் பெருநாழிபோஸ் சி.நேருபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை இலக்கிய அணித்துணைச் செயலாளர் ஈரோடுஇறைவன் தொகுத்து வழங்கினார். தலைமை இலக்கிய அணிப் பொருளாளர் நா.சந்திரபாபு வரவேற்புரை ஆற்றினார். சென்னை தெற்கு மாவட்டக் கழகச்செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ, தலைமை இலக்கிய அணிச் செயலாளர் புலவர் இந்திரகுமாரி ஆகியோர் போட்டியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்.
மாலை 4 மணியளவில் இறுதிநிலைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது. தலைமை இலக்கிய அணித்துணைச் செயலாளர் காரைக்குடி.எல். வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். கழக செய்தித் தொடர்புப்பிரிவு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி, சென்னை கிழக்கு மாவட்டக் கழகச்செயலாளர் பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். பேராசிரியர் க.சேவுகப்பெருமாள், சாவல்பூண்டி எம்.சுந்தரேசன், பேராசிரியை சி. நந்தினி ஆகியோர் செயல்பட்டு பரிசுக்குரியவர்களை தேர்வு செய்தனர். விழுப்புரம் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி வ.சு.கீர்த்திகா முதல்பரிசையும் கடலூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் பா.சரவணப்பெருமாள் இரண்டாம் பரிசையும் திருச்சி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நி.பாத்திமாபர்வீன் மூன்றாம் பரிசையும் இரண்டு ஆறுதல்பரிசுகளை கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அ. அபிஷா மற்றும் நாகை வடக்கு
மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் ம.க.சூர்யா ஆகிய இருவரும் பெற்றனர். சென்னை கிழக்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் நா.துலுக்காணம், சென்னை தெற்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ஆர்.ஆர்.ஜெயராம் மார்த்தாண்டன் ஆகியோர் நன்றியுரை ஆற்றினர்.
இறுதிநிலைப் போட்டிகளில் தேர்வு பெற்றவர்களுக்கு செப்டம்பர் 15 ம் தேதியன்று திருவண்ணாமலையில் நடைபெறுகின்ற முப்பெரும் விழாவில் கழகத் தலைவர் தளபதி அவர்கள் பரிசுகள் வழங்குகிறார்கள். இருநாள் நிகழ்விலும் முரசொலி அறக்கட்டளை பொது மேலாளர் ஆர்.இராஜேந்திரன் கணக்குபிரிவு புஷ்பா,சபீனா தலைமை இலக்கிய அணி நிர்வாகிகள் கயல்தினகரன், காரைக்குடி.லெ.வெங்கடாசலம், பெருநாழிபோஸ், ந.செந்தில்
மகளிரணி பிரச்சாரக்குழு செயலாளர் சேலம்சுஜாதா, மகளிரணி துணைத் தலைவர் சித்திரமுகி சத்தியவாணிமுத்து
சங்கரநாராயணன், கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை துணைச் செயலாளர் கர்நாடக மாநில இலக்கிய அணி அமைப்பாளர் போர்முரசுகதிரவன்
மும்பை புறநகர் மாநில இலக்கிய அணி அமைப்பாளர் இரா.தமிழ்நேசன், தொல்காப்பியப்புலவர் வெற்றியழகனார், கவிஞர்நன்மாறன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர்கள் கோவை திராவிடமணி, கவிஞர் முத்தரசன், ஆடுதுறை உத்திராபதி, வரகூர் காமராஜ், கவிஞர் சிவமுத்துவளவன், புதுக்கோட்டை மணிமொழி மனோகரன், திருவள்ளூர்இஸ்ரேல், இராமநாதபுரம் அய்யனார், ரெயின்போவிஜயகுமார், ஆர்.ஆர்.ஜெயராம் மார்த்தாண்டன் மாவட்ட இலக்கிய அணித்துணை அமைப்பாளர்கள் பூங்காநகர்கண்ணன், ஈரோடு இளையகோபால், திருவாரூர்கந்தசாமி, திருப்பூர் ஈஸ்வரமூர்த்தி, கோவைதினேஷ், கவிஞர் மரியஎட்வின், தாரைசிவா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.